அண்மைச் செய்திகள்
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு || திருவாருர்: 9 இடங்களில் சாலைமறியல் || மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை || சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள் || நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம் : நக்கீரன்கோபால் வாழ்த்து ( படம் ) || வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார். || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் ||
இந்தியா
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 16, ஜூன் 2012 (8:0 IST)




கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர் பிரணாப் முகர்ஜி!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக 77 வயதான பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் கிங்கர் முகர்ஜியின் மகன் ஆவார்.

பிரணாப், அரசியல் அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராக அவர் வாழ்க்கையை தொடங்கினார். சிறிது காலம், வக்கீலாகவும், பத்திரிகையாளராகவும் கூட பணியாற்றினார்.

பின்னர், 1960களில் தீவிர அரசியலில் குதித்தார். மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனார். 1969ம் ஆண்டு, டெல்லி மேல் சபை எம்.பி. ஆனார். தொடர்ந்து மேல் சபை மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

முதல்முறையாக, 2004ம் ஆண்டில்தான், மேற்கு வங்காள மாநிலம் ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பி. ஆனார். அதே தொகுதியில், 2009ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

1973ம் ஆண்டு, இந்திரா காந்தி மந்திரிசபையில் தொழில்வள மேம்பாட்டு துறை மந்திரியாக பதவி ஏற்றார், பிரணாப் முகர்ஜி. தொடர்ந்து 9 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தார்.

1980ம் ஆண்டு, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனபோது, அவரது மந்திரிசபையில் நிதி மந்திரி ஆனார். இந்திரா காந்தி இல்லாத சமயங்களில், பிரணாப் முகர்ஜிதான், மத்திய மந்திரிசபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது வழக்கம்.

டெல்லி மேல் சபையின் ஆளுங்கட்சி தலைவராகவும் இருந்தார். அப்போதுதான், தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அப்போது ராஜீவ்காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரணாப் முகர்ஜி, காங்கிரசை விட்டு விலகினார்.


ஓரிரு ஆண்டுகளில், அவர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். உடனே மீண்டும் பழைய முக்கியத்துவத்தை பெற்றார். 1987 ம் ஆண்டில் இருந்து 1989 ம் ஆண்டுவரை, காங்கிரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக இருந்தார்.


பின்னர், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில், திட்ட கமிஷன் துணைத்தலைவராகவும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.

மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது மந்திரிசபையிலும், தற்போதைய இரண்டாவது மந்திரிசபையிலும்  நம்பர் 2' ஆக திகழ்ந்து வருகிறார், பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு சிக்கல் நேரும்போதெல்லாம், அதற்கு தீர்வு காண இவரைத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பயன்படுத்துவது வழக்கம். பல்வேறு கட்சிகளிலும் நண்பர்களை கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, சிக்கல்களுக்கு லாவகமாக தீர்வு காண்பார்.

பிரணாப் முகர்ஜி, கூர்ந்த அறிவாற்றலுக்கும், ஞாபக சக்திக்கும் பெயர் பெற்றவர். எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்து சொல்வார். அதனால் அவரை நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று அழைப்பார்கள். அரசியல் சட்டத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். பாராளுமன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில் கண்டிப்பானவர்.

பிரதமர் பதவியை தவற விட்ட பிரணாப் முகர்ஜிக்கு, தற்போது ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கனிந்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : karikalan1 Date :6/17/2012 6:01:07 PM
தமிழின அழிப்புக்கு ராசபக்சவுக்கு துணை போனவர் வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்றுதான்.
Name : EBU/PARIS Date :6/17/2012 5:14:58 PM
ஒன்றுமே இல்லாத பிரதிபா க்கு இவர் எவ்வளவே மேல்;இவரை தேர்ந்தேடுபவர்கள் முட்டாள்கள் அல்ல!!
Name : Ravi-Swiss Date :6/17/2012 11:18:29 AM
முள்ளிவாய்க்கால் அழிவுகளையும் முடித்து வைத்துவிட்டார்'?
Name : bala Date :6/17/2012 3:29:45 AM
ஆசிரியர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறி ஒரு இனம் முற்றாக அழிய வெளி விவகார மினிஸ்டர் ஆக பொய்கள் பல சொல்லி அழிய உதவிய புண்ணியவான்
Name : kiruba Date :6/16/2012 6:33:10 PM
தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்திய நல்லவர்களில் ஒருவர்.
Name : guru Country : India Date :6/16/2012 8:05:30 AM
கருப்பு பண காவலர் ஜனாதிபதி வேட்பாளர் .நல்ல தேர்வு