அனைவரிடமும் ஆதரவு கேட்பேன்: பிரணாப்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; ஜனாதிபதி வேட்பாளராக என்னை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நிறுத்தியுள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது தான் முதல் இலக்கு. இதற்காக அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்பேன். விரைவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச உள்ளேன் என கூறினார்.