Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (18:50 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (19:6 IST)


முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட வரும்
பென்னிகுக் வாரிசுகள்!
தடைபோடும் கேரளா! டென்சனில் தேனி மக்கள்!

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தமிழக கேரளா எல்லையான குமுளியில் உள்ள தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. 1200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த முல்லைப் பெரியாறு அணையை தென் தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும் இந்த அணையை ஆங்கிலேய இஞ்ஜினியரான கர்ணல் பென்னிகுக் கட்டிக் கொடுத்து தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுத்ததுனாலயே இப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பென்னிகுக்கை தெய்வமாக இன்றுவரை வணங்கி வருகிறார்கள். இந்த அளவுக்கு தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லைப் பெரியாற அணை எப்படி உருவானது என்பதை பார்த்தாலே நமக்கே மெய் சிலிர்த்துவிடும். இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது 1810ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து 1811ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சாயத்தால் 56,135 மக்கள் இந்துள்ளனர். மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் 1513ஆம் ஆண்டு இதே போன்று ஏற்பட்ட பஞ்சத்தில் மதுரை கலெக்டர் போர்ட் ஆப் ரெவின்யூவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடிக்கடி தாக்கக்கூடிய இப்பஞ்சமானது கடுமையாக உழைக்கக்க கூடிய மக்களை பரிதாபத்திற்கு உள்ளாக்கி உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த பஞ்சம் தீவிரம் அடையும் சமயத்தில் தொற்று நோய்களால் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்துள்ளனர். இப்படி தொடர்ந்து வந்துள்ள பஞ்சங்களால் 1827ஆம் ஆண்டு பெரும்பாலான மக்கள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு சென்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.இவ்வாறு பலிகளும், பஞ்சமும் கொடுத்த இப்பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கு முகவரி கொடுக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணை 1895ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1795ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆடட்சியின் முதற்பகுதியில் காலநிலை மாறுபாட்டால் ஏற்பட்ட பஞ்சங்களை ஆங்கிலேயர்கள் கணக்கெடுக்க தொடங்கினர். அப்போது ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வைகை ஆற்றின் நீரை கூட்டி வறட்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை தெரிந்து கொண்டனர்.

1798ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி 12 அறிஞர்களை தேர்ந்தெடுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீர் வரத்தினை ஆராய அனுப்பினார் ஆனால் அறிஞர்கள் இம் மலையில் உருவாகும் ஆறுகளை வைகை ஆற்றில் திருப்பிக் கொண்டு வருவதற்கான திட்டத்தை தெரிவித்தனர். பொருளாதாரம் போதுமானதாக இல்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது. 1807 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த ஜார்ஜ் பேரிஸ் பெரியாறு ஆற்றுப் படுகையில் இருந்து தண்ணீரை திருப்பி கொண்டு வரும் திட்டத்தினை ஆராய்வதற்கு முயற்சி மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள சதுப்பு நில பகுதிகளில் செல்லும் போது மலைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த மலை பகுதியை அடைந்த முதல் ஐரோப்பியர் இவரே. பின்னர் அவர் தமது மாவட்ட் பொறியாளரான ஜேம்ஸ் கால்டு வெல்லுக்கு இவ்விடத்தை பற்றி ஆராய உத்தரவிட்டார்.1808ஆம் ஆண்டு ஜேம்ஸ் கால்டு வெல் கம்பம் பள்ளத்தாக்கில் தேக்கடியை பற்றி அதிகம் தெரிந்திருந்த மக்களை திரட்டி உத்தமபாளையத்தில் இருந்து அங்கு புறப்பட்டு சென்றார். அவர் பெரியாறு படுகையில் இருந்து வைகை ஆற்றில் நீரை திருப்புவது கற்பனையான திட்டம் என்று அறிக்கை அளித்தார். இதே போன்று கர்னல் பேபர் என்பவரும் இத்திட்டத்தை மீண்டும் ஆராய்ச்சி செய்து அடையிலேயே கைவிட்டார். 1861-1862ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியில் தென் தமிழகத்தில் அடிக்கடி நடந்தேறிய பஞ்சமும், உயிர் பலிகளும் மீண்டும் இத்திட்டத்தை உருவாக்கும் கட்டாயத்திற்க தள்ளியது மேஜர் ரவீஸ் என்ற பொறியாளர் இந்த பெரியாறு திட்டத்திற்கு ஒரு செயல்முறை வடிவத்தை கொடுத்தார். 1862ஆம் ஆண்டு செப்டம்பர் 24ந் தேதி சென்னை ஆங்கில அரசாங்கம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த மாதவராவ்வை அணுகி பெரியாறு படுகை பகுதியை ஆய்வு செய்ய அனுமதி பெற்றது. அனத் பிறகு டிசம்பர் 1ந் தேதி திவான் இந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள சம்மதித்தார்.

1872 ஆம் ஆண்டு பொறியாளர் சுமித் என்பவர் 172 உயர ஆணை கட்டி 433 அடி நீள நீர் செல்லும் குகை வழி அமைக்க திட்டம் தீட்டினார். ஆங்கில அரசு ஜான் பென்னகுக் என்பவரை இத்திட்டத்தில் இணைத்தது. ஆனால் பென்னி குக் இத்திட்டத்தின் செயல்பாட்டில் முனைப்பு காட்டினார். 1877-78ஆம் ஆண்டு மீண்டும் வரலாறு காணாத கொடிய பஞ்சத்தால் மக்கள் பலியானார்கள். இதனால் தென்மாவட்டங்களில் வசித்து வந்த மக்களில் 1½ லட்சம் பேர் பாம்பனில் கூடி இலங்கைக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சென்றனர்.

1882ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ஆங்கில பிரதிநிதி ஜான் சைல்டு கேனிங்டன் பெரியாறு பகுதிக்கு சென்று ஒரு குத்தகை ஒப்பந்தத்தை வரைந்தார். இதைத் தொடர்ந்து மேற்கு கடற்கரையில் உள்ள அஞ்சன்கோ தங்கச்சேரி என்ற ஆங்கில அரசுக்கு சொந்தமான இரண்டு இடங்களை திருவிதாங்கூர் சமஸ்தானம் கேட்டது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. 1886ஆம் ஆண்டு அக்டோபர் 26ந் தேதி ஜான் சைல்டு கேனிங்மடன் லண்டன் சார்பாகவும், திருவிதாங்கூர் புதிய திவான் வெங்கட்ராமாராவ் திரு. விதாங்கூர் மகாராஜா சார்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரம் வீதம் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. (தற்போது ரூ.3 லட்சமாக உயர்த்தி கொடுக்கப்பட்டு வருகிறது).அதனாலேயே 1887ல் சென்னை மாகாண ஆளுநர் கன்னிமாரா பிரபுவும், சென்னை மாகாண தலைமை செயலர் கேஸ்டேட்டுவும் பெரியாறு அணை கட்டுமான தொடக்க விழாவில் பங்கேறறனர். டிசம்பர் 29ந் தேதி அணை கட்டுதவற்கு தேவையான இயந்திர தளவாடங்களை வாங்க பென்னிகுக் இங்கிலாந்து சென்றார் அங்கு தன்னடைய சொத்தையும் விற்று பணம் கொண்டு வந்தவர் தனது சம்பளமான 1752 ரூபாய் அணை கட்டுதவற்கே செலவழித்தார். அதோடு பல்வேறு இடையூறுகளுக்கிடையே 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து அணையை கட்டும் முயற்சியை ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் நிலவி வரும் பனிக்குளிராலும், காலரா நோயாலும் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் இறந்தனர். அதையும் பொருட்படுத்தாமல் மேலும் பல தொழிலாளர்களை தென் தமிழகத்திலிருந்து கூலிக்கு ஆட்களை அழைத்துச் சென்று பணியை தொடங்கியதின் மூலம் 1895ம் ஆண்டு 176 அடி உயரத்தில் 152 அடி தண்ணீர் கொள்ளளவு கொள்ளும் அளவிற்கு அணை கட்டி முடிக்கப்பட்டது அதை 10.10.1995ம் ஆண்டு மாலை 6 மணிக்கு கவர்னர் வென்லாக் மூலம் மதுரை மாவட்டத்திற்கு முதன் முதலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  

இந்த அணையை கட்டி முடிப்பதற்கு 80.30 இலட்சம் செலவு செய்யப்பட்டது. அதன்பின் நாடு சுதந்திரம் அடைந்தபின் தமிழக கேரள எல்லை பிரிவால் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் உள்பட நான்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அணையை 152 அடி தண்ணீரை தேக்க கேரள அரசு மறுத்து வந்தது. அதைத் தொடர்ந்து 1963ஆம் ஆண்டு இந்தஅணையின் தன்மையை உறுதிபடுத்த மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து பார்த்தபோது அணை நல்லநிலையில் உள்ளது என்று கூறிவிட்டது அதை தமிழக அரசு முழுமையாக ஏற்று 13கோடி செலவில் மேலும் அணையை பலப்படுத்தும் பணிகளையும் 1990ஆம் ஆண்டு நடத்தி முடித்தது. அதன்பின் 152அடியாக தண்ணீரை தேக்க தமிழக அரசு வலியுறுத்தியும் கூட கேரளா அரசு தேக்காமல் தொடர்ந்து 136 அடியாக தேக்கிவந்தனர். அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததின் பேரில் 142 அடியாக தேக்கி கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது அப்படி இருந்தும் கூட கேரளா அரசு அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை இதனால் மீண்டும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது இந்த நிலையில்தான் கேரளாவில் உள்ள மலையாள அமைப்பினர் முல்லைப் பெரியாறு டேமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கேலரி பகுதியில் கசிவு நீர் வருவதை டேம் பழுதாகிவிட்டது என்று கூறி வீடியோ எடுத்து வந்து அதை வெளியிட்டுதுடன் மட்டுமல்லாமல் டேமையும் வெடி வைத்து தகர்ப்போம் என எச்சரித்து வந்தனர். இந்த விசயம் தேனி மாவட்டம் உள்பட ஐந்து மாவட்ட விவசாய மக்களுக்கும் எட்டியதின் பேரில் அங்கங்கே கேரளா அரசை கண்டித்து போராட்டம், கடையடைப்பு மட்டுமல்லாமல் கேரளாவிற்க எந்த ஒரு உணவுப் பொருள்களும் கொண்டு போகவும் அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு ஒரு மாதம் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால் அதைக்கண்டு கேரளாவில் உள்ள மலையாளிகள் அரண்டுபோய்விட்டனர். இந்தநிலையில்தான் 7.5.2014ம் தேதி சுப்ரீம் கோட்டில் உள்ள ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதோடு அணையை பராமரிப்பதற்காக ஐந்து பேர் கொண்டகுழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. அதைத் தொடர்ந்து தென் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு திறந்துவிடப்பட்டு வருகிறது.இப்படி தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக்கிற்கு அப்பகுதி மக்கள் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில் கடந்த 17.01.2013ம் ஆண்டு லோயர் கேம்ப் அடிவாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல லட்சம் செலவில் பென்னிகுக் மணிமண்டபம் கட்டி கொடுத்து அதை தானே திறந்தும் வைத்தார் அந்த மணிமண்டபத்தில் வருடந்தோறும் பென்னிகுக் பிறந்தநாளான ஜனவரி 15ம் தேதி அப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கல் வைத்து பென்னிகுக்கை வணங்கி செல்வார்கள். அதுபோல் அப்பகுதியில் உள்ள சுருளிப்பட்டி, பாலாறுபட்டி உள்பட சில கிராமங்களில் வசித்து வரும் மக்களும் பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு அங்கங்கே பொங்கல் வைத்தும், வணங்கி வருவதுடன் மட்டுமல்லாமல் பல விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வருவது வழக்கம் அதுபோல் தேனி மாவட்டம் மட்டுமல்ல ஐந்து மாவட்டங்களில் உள்ள வியாபார ஸ்தலங்களிலும், டீக்கடைகளிலும் கூட பென்னிகுக் பெயரை வைத்திருக்கிறார்கள். 

அந்த அளவுக்கு ஐந்து மாவட்ட மக்களும் கர்னல் பென்னிகுக்கை தெய்வமாக வணங்கி வருகிறார்கள. இந்த விசயம் லண்டனில் உள்ள பென்னிகுக் குடும்பத்தினருக்கு தெரிந்ததின் பேரில்தான் கடந்த 2004ஆம் ஆண்டு பென்னிகுக்கின் பேரனான சாம்சன் பென்னிகுக் இங்கு வந்து தனது தாத்தா கட்டிய முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டுவிட்டு சென்றார். அப்படி வந்த பென்னிகுக் பேரனுக்கு பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் வரவேற்பு கொடுத்து அழைத்து சென்று திருப்பி அனுப்பிவைத்தனர். அதைக்கண்டு பென்னிகுக் பேரன் பூரித்து போய்விட்டார். இந்தநிலையில்தான் இந்த ஆண்டு பொங்கல்விழாவிலும், முல்லைப் பெரியாறு டேமை பார்வையிடுவதற்காகவும் பென்னிகுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான டாக்டர். டயாமாஜிப், ஜென்சி பென்சன், சூசன் பெரோ, சோன்பிள்ளிங்,  ஜான்போப், ஜேம்ஸ்எட்வர்ட் ஆகியோர் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்துள்ளனர். இவர்கள் நாளை 14ம் தேதி கேரளா குமுளியில் உள்ள தேக்கடியில் முல்லைப் பெரியாறு டேமை பார்வையிட்டுவிட்டு லோயர்கேம்பில் பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக் சிலையை வணங்கிவிட்டு அப்பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் இப்படி வரக்கூடிய பென்னிகுக் குடும்பத்தினருக்கு முல்லைப்பெரியாறு டேம் சென்று பார்ப்பதற்கு இதுவரை கேரளா அரசு அனுமதி கொடுக்கவில்லை இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மக்களும், விவசாயிகளும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இருந்தாலும் நாளைக்குள் முல்லைப் பெரியாறு டேம் போவதற்கு பென்னிகுக் குடும்பத்தினருக்கு  கேரளா அரசு அனுமதி கொடுக்க வேண்டும் தவறினால் பொங்கல் திருநாளாக இருந்தாலும் கூட தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த பென்னிகுக்காக போராட்டத்தில் ஈடுபட கூட தயங்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கேரளா அரசுக்கு எச்சரித்தும் வருகிறார்கள். இதனால் தேனி மாவட்டத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது. பென்னிகுக் வாழ்க்கை குறிப்பு

முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்த முதன்மை பொறியாளரான கர்னல் பென்னிகுக் இங்கிலாந்து நாட்டில் 1841ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பிறந்தார். இங்கிலாந்தில் பொறியில் பட்டம் பெற்று 1858 டிசம்பர் 10ம் தேதி இந்திய ராணுவத்தில் லெப்டினட்டாக பணிநியமனம் செய்யப்பட்டார். பின்னர் 1861ஆம் ஆண்டு மாவட்ட இரண்டாம்நிலை துணை பொறியாளராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழ் பேச தெரியாததால் 1862ம் ஆண்டு தமிழ் பேசுவதற்கும், எழுதுவதற்கும் சான்றிதழ் படிப்பில் 3ம் வகுப்பில் தேறினார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் தமிழகத்தில் பணிபுரிந்த அவர் 1881ம் ஆண்டு பெரியார் திட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். 1888ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டுவதற்கான இயந்திரங்களை இங்கிலாந்திலிருந்து பெரியார் படுகைக்கு கொண்டு வந்து அணை கட்டும் பணியை தொடங்கினார். 

அணையை அடித்தளத்திற்கு டர்பன் இயந்திரம் மூலமாக சுண்ணாம்பும் உடைக்கப்பட்ட கற்களும் கம்பிகளில் கட்டப்பட்ட இரும்பு கம்பிகளின் மூலமாக கொண்டு செல்லப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த அணை கட்டும்போது பலமுறை நீரினால் அடித்துச் செல்லப்பட்டது. அப்படி இருந்தும் 19ம் நூற்றாண்டில் சென்னை நீர்பாசன துறையின் மிகப்பெரிய சாதனை திட்டமாக இது கருதபட்டது. இந்த அணைத்திட்டத்தில்தான் உலகத்திலேயே மலையை குடைந்து இந்த அளவு தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதும் வரலாற்று சாதனையாக இருந்து வருகிறது. அதுபோல் உலகம் இருக்கும்வரை பென்னிகுக் புகழும் நிலைத்து நிற்கும்!

-திண்டுக்கல் சக்திவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :