Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (14:37 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (17:29 IST)இன்ப பொங்கல் பொங்கட்டும்.. இரு வண்ணக்கொடி எழுச்சியுடன் பறக்கட்டும் - மு.க.ஸ்டாலின்இன்ப பொங்கல் பொங்கட்டும்.. இரு வண்ணக்கொடி எழுச்சியுடன் பறக்கட்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

​எத்தனையோ விழாக்கள் வருகின்றன. மகிழ்ச்சி தருகின்றன. எனினும், பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியுடன், பெருமிதமும் கலந்திருக்கிறது. காரணம், இது தமிழர்களின் தனித்துவமான விழா. தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.

உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் - கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதிப்பழம் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.
 
பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி, பண்பாட்டு மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த கழகத்தையும் தலைவர் கலைஞர் அவர்களையும் மறவாமல், வட்டங்கள் தோறும் - வீடுகள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிடுவோம். காற்றில் அந்தக்கொடி அசையும்போது தமிழ் உணர்வு நம் நெஞ்சமெல்லாம் பரவி நிறையட்டும்! தமிழ் நிலத்தைக் காக்கவும், தமிழினத்தை மீட்கவும் தமிழ் மொழிப்பெருமைகளைப் போற்றவும், அடுத்தடுத்து கழகம் பெறவிருக்கும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதுபோல கழகக் கொடிகள் உயரட்டும். இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும். இரு வண்ணக் கொடி பறக்கட்டும். ​அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


உழவுத்தொழிலைப் பாதுகாக்க உறுதியேற்போம் - திருமாவளவன்தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் விழா மட்டுமே மதம் சார்ந்தஅடையாளங்கள் ஏதுமில்லாப் பண்டிகையாகும். உழவுத் தொழிலையும் உழவுக் கருவிகளையும் உழவர் சமூகத்தையும் போற்றுகிறச் சிறப்புடையப் பொங்கல் விழாவில், உழவருக்குத் துணையாயிருக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி சொல்லும் உயரிய பண்பாட்டை கொண்ட இனம்தான் தமிழினமாகும்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு, விவசாயக் குடும்பங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடவும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் சூழ்ந்து வரும் சாதிய-மதவாத அரசின் தீங்குகளிலிருந்தும் மக்களை பாதுகாத்திடவும் பொங்கல் திருநாளில் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதியேற்போம்.

தமிழர் திருநாள் வெறுமெனக் கூடிக் கலையும் கொண்டாட்டத் திருநாளாக இல்லாமல் மண்ணையும் மக்களையும் குறிப்பாக உழவுத்தொழிலையும்  காப்பதற்கான சூளுரை ஏற்கும்  நாளாக கொண்டாடுவோம். தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு நாள் பிறக்கிறது; வேல்முருகன்பிரச்சனைகள், பேரிடர்கள், வஞ்சகங்கள், இரண்டகங்கள், சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள், தோல்விகள், வேதனைகள் என தமிழகத்தின் வாழ்வுரிமைக்கே என்றைக்கும் இல்லாத அளவுக்கு சவால்களும் சோதனைகளும் அதிகரித்திருக்கின்ற ஒரு சர்வாதிகார, பாசிச அரசியல் சூழலில்தான் இந்த ஆண்டின் தமிழர் திருநாளாம் தை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு நாள் பிறக்கிறது;

அன்றைய நாளே “தமிழ்நாடு” என்னும் இயற்பெயரை நம் தமிழ்நிலம் மீட்டுக்கொண்ட ஐம்பதாவது ஆண்டின் நாளும் பிறக்கிறது.

வரலாற்று நிகழ்வாய் இவ்விரு நாட்களும் ஒன்றிணையும் இனிய இந்நன்னாளில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், சோதனைகளைப் புறங்காணச் செய்து வெற்றி பெற உலகெங்கும் உள்ள தமிழ்மக்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் புத்தாண்டாக அமையட்டும் - கி.வீரமணிபொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்நாளில் தேவையற்ற பழைமைகள் விடைபெறவும், வரவேண்டிய புதுமைகள் பொங்கவும், உழவுர் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, சமய, சச்சரவுகளின்றி, மனிதநேயம் பேண, சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டும் பொங்கல் புத்தாண்டாக அமையட்டும் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும் - அன்புமணி வாழ்த்துஉழைப்பாளர்களின் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

புல்லின் மீதுள்ள பனித்துளி வெயில் பட்டதும் மறைவதைப் போல புதிதாக புலரும் தைத் திங்கள் மக்களின் துன்பத்தையும், வருத்தத்தையும் நீக்கும் என்பதே எனது நம்பிக்கை. அது நிஜமாகி அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வளமும், நலமும் பொங்க வேண்டும்; நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டுமென மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தை பிறக்கட்டும்... தீமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும் - ராமாதஸ்தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள  தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களுக்கு ஆயிரம் திருவிழாக்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மைத் திருநாள் தைப் பொங்கல் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது.

அனைத்துத் தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை  செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு தமிழக மக்களுக்கு  அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும். அதற்காக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உழைப்பை, உழைப்பவரை உற்சாகப்படுத்தும் திருவிழா - ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து!பொங்கல் திருநாள், அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிற இந்த விழா இயற்கையோடு இயைந்த மனித வாழ்வின் வெளிப்பாடாகும். அன்றைய தமிழகத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து, தை மாதத்தில் அறுவடை நடைபெறும். அறுவடையின் துவக்கத்தை புதுப்பானை, புத்தரிசி என கொண்டாடினர் நம்முடைய முன்னோர்கள்.

ஆனால் இன்றைக்கு உழவுத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு நிலவிய வறட்சியின் பிடியிலிருந்து தமிழகம் இன்னமும் முழுமையாக மீளவில்லை. பெரும்பாலான நீர்நிலைகள் இன்னமும் வறண்டே கிடக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்ட பிறகும் மத்திய மோடி அரசு தமிழகத்திற்கு அப்பட்டமாக வஞ்சனை செய்து வருகிறது. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களை பாழ்படுத்த மத்திய அரசு துடிக்கிறது.

தைத் திருநாள் என்பது உழைப்பை, உழைப்பவரை உற்சாகப்படுத்தும் திருவிழா ஆகும். இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்பதை ஓங்கி உரைக்கும் திருநாளில் இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாக்கவும், தமிழ், தமிழரின் உரிமைகளை காத்து நிற்கவும், விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிமுன் அன்சாரியின் தமிழர் திருநாள் வாழ்த்து செய்தி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி தமிழர் திருநாளையொட்டி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வாழ்த்து செய்தியில், பசும் வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை பெருபான்மையாக கொண்டது நமது தமிழ்நாடு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே திருவள்ளுவர் அவர்கள் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்" என்று விவசாயத்தை உயர்வுப்படுத்தி கூறினார். 

விவசாயத்தை செம்மைப்படுத்தும் மண், மழை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொன்மை காலத்தில் தமிழர்கள் முன்னெடுத்த வழிபாடுகளற்ற நாகரீகம்தான் பொங்கல் திருநாள் என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனை அறுவடை திருநாள் என்றும் சொல்வதுண்டு. 

விவசாயம் மூலம் பொருளாதாரம் குவியும் காலம் இது என்பதால்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்றார்கள். தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் இத்திருநாளில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், தண்ணீர் மேலாண்மை ஒழுங்குப்படுத்தவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் உறுதி ஏற்போம். தமிழர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் - சீமான்கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாம் தமிழ் தேசிய இனத்தின் மற்றும் ஒரு புத்தாண்டு மகத்தான இலட்சிய கனவுகளுடன் இன்று முதல் தொடங்குகிறது. நாகரிகத்தின் தொட்டில்களாய் நதிக்கரைகள் விளங்கின என்று வரலாறு எழுதியோர் வியப்புடன் சுட்டிக்காட்டிய காலத்திலே நாடுகட்டி படை பெருக்கி பல்லுயிர் வாழ உயிர் நேயத்துடன் அறம் வழி நின்று ஆட்சி செய்தவர் தமிழர்.. கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியா பேரறிவு பார்வையோடு, அறிவியல் ஆற்றலோடு.. விண்வெளி விந்தைகளைப் புரிந்து கொண்ட திறத்தோடு காலக் கணக்கை வகுத்து.. இயற்கை வழி நின்று.. மரபார்ந்த வாழ்க்கை ஒன்றை இம் மண்ணில் நிறுவினர் நம் முன்னோர். மழைப் பெருகி, மண் செழித்துப் புது மணப்பெண்ணாய் புவி பூத்து நிற்கின்ற காலம் தை மாதம். பெய்யெனப் பெய்த மழை நின்று.. குளிரும், வெயிலும் இணைந்து விளைச்சலுக்குறிய மண்ணாய்.. நமது தாய் மண் தழைத்து, ததும்பி தயாராக நிற்கையில் தொடங்குகிறது தமிழரின் புத்தாண்டு.

பார்வியக்க ஏர் செலுத்தி பைந்தமிழ்த் தேனி என உழவு பாட்டு இசைத்து உலகோர் பசி தீர்க்க .‌.நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, தன் உதிரத்தால் உலகை செழிக்க வைத்த இனம் தமிழ் இனம். ஏர் பின்ன நெடு வயல் நெடுக வளைய வரும் மாடு ஐந்தறிவு உயிரி தானே என்று எண்ணாமல் தன் குடும்பத்தில் ஒருவனாய் , தன் மண்ணின் பெருமையாய்.. கால் நடைகளைப் போற்ற மாட்டு பொங்கல் கண்டு தன் உயிர் நேயத்தை உலகிற்கு அறிவித்தவன் தமிழன். வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தான் தமிழ் இனம். ஆனால் வரலாற்றின் போக்கில் இடையில் வந்தோர் சாதி, மதத் தடைகளைத் தமிழர் மண்ணில் நிறுவ உயிரெனப் போற்ற வேண்டிய இனமான ஓர்மை உணர்வை இன்று இழந்து விட்டு நிற்கிறது. இட்டார் பெரியார்.. இடாதோர் இழிகுலத்தோர்.. என அறம் பாடி நின்ற இனம் பிறப்பின் வழி உயர்வு தாழ்வு கற்பித்துத் தனக்குள்ளே பூசலிட்டு வேரை மறந்து விவேகத்தைத் தொலைத்து திக்கற்று நிற்கின்றது..

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழர் நிலம் ஒரு பக்கம் எதிரிகளால் இனப்படுகொலைக்கு உள்ளாகி நீதியற்று நிற்கிறது. இன்னொரு பக்கம் இயற்கை வளங்களைக் கொள்ளை கொடுக்கிற நிலமாய், பெரும் செல்வமெனப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஆற்று மணலை அயலானுக்கு அள்ளித்தருகிற பூமியாய் மாறி.. தரணி சிறக்க செழித்த நிலம் இன்று தரிசு காடாய் மாறியிருக்கிறது. தன் இலக்கண இலக்கியச் செழுமையால் உலகின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தைக் கண்ட செந்தமிழை இன்று நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்..

முப்படை கட்டி எட்டு திசையும் படையெடுத்து மனிதன் காலடி பட்ட மண்ணெல்லாம் புலிக் கொடி நட்டு உலகை ஆண்ட உன்னதத் தமிழினம் தான் இன்று ஆற்றலை இழந்து, அதிகாரத்தை இழந்து, மானத்தை இழந்து இந்த இழிநிலையை மாற்ற மாற்றான் எவனாவது வருவானா என்று மண்டியிட்டு கிடக்கிற இழிநிலை கண்டு உணர்வும் அழிவும் ஒருங்கே பெற்ற தமிழின இளையோர் விழி சிவந்து முளைக்கிற பெரும் கோபத்தைத் தன் இதயத்திலே தேக்கி தனக்கென அரசியல் அதிகாரம் நிறுவ நாம்தமிழர் என்கிற பெரும் படை கட்டி இனம் வாழ தன்னைக் கொடுத்து நிற்கின்றனர். அரசியல் அதிகாரத்தை மட்டும் இல்லாமல்.. கலை, பண்பாடு, வேளாண்மை, தமிழரின் அறிவு சார்ந்த இறை நம்பிக்கைகள் ஆகியவற்றை மீளெழுப்பிக் கட்டமைக்கிற பெரும் வரலாற்று பணியையும் இனைத்தே இந்த மண்ணில் மகத்தான புரட்சி பூபாளம் ஒன்றினை எழுப்பிட ..நாம் தமிழர் திரளத் தொடங்கியிருக்கும் காலத்தில் தான் தைத்திருமகள் வளம் திரண்ட நம்பிக்கைகளோடு களம் பற்றிய கனவுகளோடு தைத்திருமகள் கம்பீரமாக வருகிறாள். நெஞ்சம் முழுக்க மகிழ்சியோடும் நம்பிக்கைகளோடும் உலகத் தமிழர் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

அநீதிக்கு எதிராக, சாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை, இயற்கை வள நலச்சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை போன்ற கேடுகளுக்கு எதிராக உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்! வாழ்த்துகளுடன். செந்தமிழன் சீமான்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Sivasankaran Ramaswamy Country : Indonesia Date :1/14/2018 11:23:40 AM
பொங்கல் வாழ்த்து சொல்லாத தலைவர்கள் பட்டியலை வெளியிடுங்கள்.அடுத்த தேர்தலில் அவர்களையெல்லாம் கவனிக்கவேண்டும்.