Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
சரத்பிரபுவின் உடல் அடக்கம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (23:42 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (0:3 IST)

இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு ஜாமின்


இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றக்கிளை.  தஞ்சை பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலின் 6 சிலைகள் காணாமல் போனது.  சிலைகள் காணாமல் போனது தொடர்பாக பந்தநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் புகார் அளித்திருந்தார்.  இப்புகார்  வழக்கில் கைதானார் கஜேந்திரன்.    இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் காமராஜின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.    இந்நிலையில், கஜேந்திரனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. 

விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. -சி40 


ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி40 விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி-சி40ல் வெளிநாட்டை சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் உள்ளன.  கனடா, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.  பூமியை படமெடுத்தல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை கார்டோசாட் மேற்கொள்ளும்.

ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல்! 


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊர்.  தேனிரோட்டில் உள்ள  ஒபிஎஸ்சின் டீகடைக்கு எதிரேயும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்  பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். அந்த இடத்தில் MGR பிறந்த  நாளை முன்னிட்டு  டிடிவி ஆதரவாளர்களும்   பேனர்களை  வைத்துள்ளனர். அந்த பேனர்களில் இருந்த  டிடிவி படத்தை  மட்டும்  மர்ம நபர்கள் சிலர்  கழித்து எரிந்து விட்டனர்.  இதனால் டென்ஷன்  அடைந்த டிடிவி ஆதரவாளர்கள்  பேனர்களை கிறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து  கைது செய்ய கோரி தேனி சாலையில்  உட்கார்ந்து  சாலை மறியலில் குதிக்க தயாரானர்கள்.  இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே சாலை மறியலில் ஈடுபட இருந்த டிடிவி ஆதரவாளர்களை தடுத்தனர். இதனால்  ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவாளர்கள் வடகரையில் உள்ள டிஎஸ்பி  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே  டிஎஸ்பி வினோஷ் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி பேனர்களை  கிழித்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கிறேன்  என்று  டிடிவி ஆதரவாளர்களுக்கு  உறுதி அளித்தார். அதை தொடந்து  முற்றுகை போராட்டத்தை டிடிவி ஆதரவாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இருந்தாலும்  டிடிவி  படத்தை கிழித்தது பெரியகுளம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எச்.ராஜாவை தே.பா. சட்டத்தில் கைது செய்ய வேண்டும் :
 திருமாவளவன்


எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் நீக்கப்படுவார்.. விரைவில் புதிய தலைவர் - ஈவிகேஎஸ்!


பொங்கலுக்கு பிறகு திமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  சில வாரங்களுக்கு முன் திருநாவுக்கரசை தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் நியமித்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9 பேருக்கு தமிழக அரசின் விருதுகள்  அறிவிப்பு


2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் பேரறிஞர்களுக்கான அரசின் விருதுகள் வரும் 16ம் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது.  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.  விருது பெரும் தமிழறிஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கி  சென்னையில் கவுரவிக்கப்படவுள்ளது.  
அ.சுப்பிரமணியனுக்கு  அண்ணாவிருது,  தா. இரா.தினகரனுக்கு  காமராசர் விருது,  கோ. பெரியண்ணனுக்கு திருவள்ளுவர் விருது,  முத்தமிழ   காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் முனைவர் ப.மருதநாயகத்திற்கும்,  பா.வர்மதிக்கு தந்தை பெரியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது எழுத்தாளர் வை.பாலகுமாரனுக்கு வழங்கப்படவுள்ளது.  பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கு வழங்கப்படுகிறது. மாகாகவி பாரதியார் விருது முனைவர் சு.பாலசுப்பிரமணியன் என்கிற பாரதிபாலனுக்கு வழங்கப்படுகிறது.   

தமிழக கவர்னர் ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை: கிரண்பேடி


திருச்சி தேசிய கல்லூரியில் ராஜாஜி அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு பேசினார்.  பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசியபோது, புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க தற்போது கையெழுத்து போட்டுள்ளேன். யார், யாருக்கு வழங்க வேண்டும் என்று ஆராய்ந்து தான் கையெழுத்து போட்டேன். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் கொடுப்பத்தில் அர்த்தம் இல்லை.
வருகிற ஆண்டுகளில் மேலும் ஆராய்ந்து, உண்மையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக கவர்னர், அரசின் திட்டங்களை ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை. அவர் பொதுமக்களோடு தொடர்பில் இருப்பது தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

மதுரை விமான நிலையத்திற்கு 
இம்மானுவேல்சேகரன் பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம்               


மதுரை விமான நிலையத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையான இம்மானுவேல் சேகரன் பெயர் வைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 

 சிறைக்கைதிகள் உறுப்புதானம் வழங்க கேரள அரசு அனுமதி!


சிறைதண்டனையில் இருக்கும் கைதிகள் தங்களது உறவினர்களுக்கு உறுப்புதானம் வழங்க கேரள அனுமதி வழங்கியுள்ளது.  சிறைதண்டனை அனுபவித்து வரும் கைதிகள், தண்டனைக் காலத்தில் சொந்த மருத்துவக் காரணங்களுக்காக வெளியில் செல்வதே மிகப்பெரிய சவாலான காரியம். பல்வேறு விதிமுறைகளைக் கடந்தே அவர்களுக்கான அனுமதியானது வழங்கப்படுகிறது.  இந்நிலையில், கேரள மாநில சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் தங்களது நெருங்கிய உறவினர்களுக்கு உறுப்புதானம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதற்காக சம்மந்தப்பட்ட கைதி கேரள மருத்துவ வாரியம் மற்றும் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெறவேண்டும். 

முன்னதாக, தமது நெருங்கிய உறவினருக்கு கைதி ஒருவரால் உடல்தானம் செய்ய முடியாமல் போனது. இதனால், பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். சிறை விதிமுறைகளில் இருக்கும் கெடுபிடிகளே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அசத்திய அர்ஜூன் தெண்டுல்கர்!ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டியில் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அசத்தியுள்ளார். முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் அவர், இந்திய அணியின் சார்பில் களம் இறங்கியுள்ளார். பொதுவாக தனது பவுலிங்கின் மூலம் பிரபலமடைந்து வரும் அர்ஜூன் தெண்டுல்கர், பேட்டிங்கிலும் பந்துகளை விளாசியுள்ளார்.

தொக்குப்பு: கதிரவன்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :