Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
சிறப்பு செய்திகள்
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, ஜனவரி 2018 (17:3 IST)
மாற்றம் செய்த நாள் :11, ஜனவரி 2018 (17:4 IST)

ராக்கெட் மனிதன்ராக்கெட் விஞ்ஞானி சிவன் நேற்று (புதன் கிழமை)  இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இஸ்ரோவில் "கிரையோஜெனிக் என்ஜின்" மேம்பாட்டில் முக்கிய பங்காற்றியதால் இவருக்கு 'ராக்கெட் மனிதன்' என்ற பெயரையும் பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த முதல் இஸ்ரோ தலைமை பொறுப்பு ஏற்றவர். இஸ்ரோ தலைமை பொறுப்பேற்றுள்ள இரண்டாவது ராக்கெட் விஞ்ஞானி என்ற பெருமைகளை பெறுகிறார். 

சிவன் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் பிறந்தவர். சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோனாட்டிகள் பயின்று பின்னர் முதுகலை ஏரோ ஸ்பேஸ் படிப்பை பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி.யில் முடித்துள்ளார். சில வருடங்கள் கழித்து 2006ல் பம்பாயிலுள்ள ஐ.ஐ.டி.யில்  பி.எச்.டி. ஏரோ ஸ்பேஸ்  முடித்தார். 1982லிலேயே இஸ்ரோவில் பிஎஸ்எல்வி ராக்கெட் உருவாக்கம், ஆராய்ச்சி என்று பலவிஷயங்களுக்கு உதவியாகவும், முக்கியமானவராகவும்  விளங்கியுள்ளார். இஸ்ரோவின் பல மேம்பாட்டு திட்டங்களுக்கு இவரது பங்கு நிறையவே உள்ளது என்கின்றனர் இஸ்ரோவில் உள்ள முக்கிய விஞ்ஞானிகள்.  கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இவரது ஆராய்ச்சி கட்டுரைகள் நிறையவே வெளிவந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவர் இந்தியன் நேஷனல் அகாடமி ஆப் என்ஜினியரிங், ஏரோநாட்டிகள் சொசைட்டி ஆப் இந்தியா, சிஸ்டெம் சொசைட்டி ஆப் இந்தியா, சிஸ்டெம் சொசைட்டி ஃபார் சைன்ஸ், என்ஜினீயரிங் போன்ற சங்கங்களில் நிருபராகவும் உள்ளார். இவர் தன்துறை சார்ந்த பல விருதுகளை பெற்றுள்ளார். சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் 2014ல் முனைவர் பட்டமும் இவருக்கு தந்து சிறப்பித்துள்ளது.

இவர் இந்தியாவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற இரண்டு திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரே ராக்கெட்டில் 104 சாட்டிலைட் அனுப்பப்பட்டு இந்தியா சாதனை படைத்தது, இந்த ராக்கெட் திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் "ராக்கெட் மனிதன்" சிவன். இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை 30 சாட்டிலைட்டுடன் நாளை விண்ணில் பறக்க காத்திருக்கிறது. இவர் பொறுப்பேற்ற பின்பு விண்ணிற்கு செல்லும் முதல் ராக்கெட் இது என்பது கூடுதல் சிறப்பு .

-சந்தோஷ் குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : bharathidasan Country : United Arab Emirates Date :1/15/2018 10:11:44 AM
congratulation sir....
Name : ondi.udayakumar tamilnadu [coimbatore] Date :1/14/2018 11:33:36 AM
விண்கலம் மனிதரின் , மனவெண்ணங்கள் கொண்டு , அளவில்லா விண்கலங்கள் வானில் வண்ண மீன்களாக வானை சிங்காரிக்கட்டும் ,இந்தியம் வரலாற்றின் அங்கமாகட்டுமே , சிவனின் பயணம் சாதனைகள் பலவென்று .
Name : dhanabalan Date :1/12/2018 5:09:54 PM
வாழ்த்துக்கள் .
Name : Bala Date :1/11/2018 6:36:18 PM
வாழ்த்துக்கள் ஐயா!