Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
முக்கிய செய்திகள்
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (23:53 IST)
மாற்றம் செய்த நாள் :15, டிசம்பர் 2017 (0:21 IST)
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிநீண்ட கால இடைவெளிக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.  காலா படத்தின் படப்பிடிப்பினால் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது மீண்டும் ரசிகர்களை சந்திக்க முடிவெடுத்துள்ளார் ரஜினி.

டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.  கோடாம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. தினமும் ஆயிரம் ரசிகர்களை சந்திக்கவும்,  காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் இந்த நிகழ்வு நடைபெறவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
  


சோலார் பேனல் அமைத்துத்தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள நடிகை சரிதா நாயர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானர்.  கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தருவதாக ரூ.26 இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரிதாநாயர் ஆஜர் ஆனார். சாட்சிகள் வராததால் வழக்கு வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்தி வைத்தார். 

ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!ஆர்.கே.நகர் சாஸ்திரி நகரில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஆவடிக்குமார் அமர்ந்திருக்கும் காரை டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 

உள்ளே பணம் இருப்பதாக டிடிவி ஆதரவாளர்கள் புகார் கூறி முற்றுகையிட்டனர். பதட்டமான சூழ்நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டது.  காரை சோதனையிட்டு அதில் பணம் இல்லை என்று போலீசார் கூறியதும்,  ஆவடிக்குமார் கட்சிக்காரர்தானே, அவரின் காரில் எதற்கு பிரஸ்(press) என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்று, காரை முற்றுகையிட்டபடியே தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த ஆவடிக்குமார், காரை விட்டு இறங்கி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.  வேறு வழியின்றி காவல்துறையினர் லத்தி சார்ஜ் நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர்.   இதன்பின்னர் ஆவடிக்குமாரின் கார் விடுவிக்கப்பட்டது.

குமரியில் ராகுல்காந்தி ஆய்வுகுமரியில்  சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவரிடம் புயலில் மாயமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனவும், அவர்களை மீட்க உதவி செய்ய வேண்டும் எனவும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மீனவர்களுக்கென தனி அமைச்சர் இருந்திருந்தால் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்கள் பிரச்சனைகளை உரத்த குரலில் எழுப்புவோம் என்று கூறினார்

திருச்செந்தூர் முருகன் கோவில் மண்டபம் இடிந்து விபத்துதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரகார மண்டபம் இன்று காலை 10.45 மணி அளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 15 அடி நீளத்திற்கு மேற்கூரை விழுந்துள்ளது.

அங்கு எப்போதும் உள்ளுரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்மணி மோர் விற்றுக்கொண்டிருப்பார். இன்று பிரகார மண்டபம் இடிந்து விழுந்தபோது, அந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புப்பணிகளின் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர்!குஜராத் தேர்தலில் வாக்களிக்க சபர்மதி சென்ற பிரதமர் மோடி அங்கு சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வழக்கமாக அகமதாபாத்தில் உள்ள பள்ளியிலே மோடி வாக்களிப்பார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க வந்த போது குஜராத் முதல்வராக இருந்தார் மோடி. தற்போது நாட்டின் பிரதமராக அவர் வாக்களிக்க அதே இடத்திற்கு வருகை தந்துள்ளார். இதனால் மோடியை காண அதிக அளவில் மக்கள் கூட்டம் வாக்குச்சாவடியை சுற்றி சூழ்ந்தது.

ஆளுநருக்கு கருப்புக்கொடி!நாளை கடலூர் மாவட்டத்தில் அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகார வரம்பு மீறிய இந்தச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். எமது எதிர்ப்பைத்தெரிவிக்கும் விதமாக கடலூருக்கு வரும் ஆளுநருக்கு அமைதியான முறையில் கறுப்புக் கொடி காட்டப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் சோதனை சென்னை ராயபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் பில் இல்லாமல் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறி வருமான வரித்துறையினர் இன்று கடையில் சோதனை நடத்தினர்.

பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் அங்குக் கொள்ளையர் கூட்டத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பெரும் துயரத்தையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.

மூவிருந்தாளியில் பெரியபாண்டியன் உடல்!


ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச்சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் அவரது சொந்த கிராமமான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது.   பெரியபாண்டியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் தலைமையில் போலீஸ்மரியாதை செலுத்தப்பட்டது.  ஆட்சியர், வைகோ, திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினர்.  பெரியபாண்டியன் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

தொகுப்பு: கதிரவன் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :