Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
முக்கிய செய்திகள்
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (20:57 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (21:6 IST)

தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி!
 - புகழேந்தி பேட்டி

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று வீடுதிரும்பும் அவர் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொள்ளையர்களை பிடிக்க சென்று வீர மரணம் அடைந்து சாதனைபடைத்துள்ள காவல் ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வீர வணக்கத்தை  கழகம் சார்பில் தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து வடமாநிலத்தவர்கள் கொள்ளை அடிப்பது ரொம்ப நாட்களாக நடந்து வருகிறது.மத்திய அரசு மற்றும் மத்திய காவல்துறையும் வடமாநில கொள்ளையர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இங்கு  ஆட்சியில் இருந்து கொள்ளை அடிப்பவர்களை ஒன்று செய்ய முடியவில்லை, இதில் வெளி மாநிலதில் இருந்து கொள்ளை கும்பல் வருகிறது என விமர்சித்தார்.

ஆர்.கே.நகர்  தேர்தலில் டிடிவி தினகரனே வெற்றி பெருவார் என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் ,  இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். டி.டி.வி தினகரன் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாகவும்,  திண்டுக்கல் வெற்றியாக இது மாறும் என தெரிவித்தார்.  தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை அமைச்சர்கள் ஆர்.கே.நகரில்  செலவு செய்ய தயாராக  உள்ளதாக குற்றச்சாட்டியவர், 

அமைச்சர்கள் கொடுக்கும் பணத்தை  அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் வாங்க வேண்டும் என  வலியுறுத்தினார். மேலும் அந்த பணத்தை  வாக்காளர்களுக்கு சேர்க்காமல், நல்லகாரியத்திற்கு பயண்படுத்துங்க என கோரிக்கை விடுத்தார். அரசியல் அனாதைகள் தான் குக்கரை  பற்றி விமர்சிப்பார்கள் ,அதை பற்றி கவலை இல்லை என தெரிவித்தவர்,  தமிழிசை 3 ஆயிரம் ஓட்டு வாங்கினால் கட்சியில் இருந்தே விலகி கொள்கிறேன் என தெரிவித்தார்.

திருமாவளவனை பா.ஜ.கவினர் வம்புக்கு இழுப்பதாகவும் இது தேவையற்றது எனவும் விமர்சித்தார்.

டிடிவி ,தினகரனுக்கும் அந்த இரட்டை இலை வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும், அவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் டிஸ்டார் மனு தாக்கல்  டிடிவி தினகரன்  என தெரிவித்தார். மேலும் சுகேஷ் சந்தர சேகர் யாருக்காக பணம் கொடுக்க வந்தார்,யாருக்கு கொடுக்க வந்தார் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  அமைச்சர் ஜெயகுமார் ஒரு பைத்தியகாரன். எனவே தான் தேவையில்லாமல் வாய்விட்டு வருவதாகவும் தேர்தலில் வெற்றி பெற்றால் எஞ்சி உள்ள தொண்டர்களும் அமைச்சர்களும்  தினகரன் அணியில் சேர்வார்கள் எனவும் கூறினார்.

குமரியை கேரளாவில் இணைத்து விடுங்கள் என மக்கள் கூறும் நிலையை விட கேவலம் எதுவும் இல்லை என தெரிவித்த அவர், குமரிக்கு  முதல்வர் சென்ற  நிலையை பாருங்கள் என விமர்சித்தார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால், குமரியில் நான்கு ஐந்து அமைச்சர்கள் முகாமிட்டு இருப்பார்கள், ஆனால் தற்போதய முதல்வர் ஆட்சி போய்விடும் எனவும், அமைச்சர்கள் வசூல் போய்விடும் எனவும் சென்னையிலே முகாமிட்டு இருப்பதாக விமர்சித்தார்.

தேர்தல் ஆணையத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறிய அவர்,  பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்காது எனவும்,  தேர்தலை நடத்துவது, தமிழிசையும் மோடியும் தான் என குறிப்பிட்டார். குக்கரில் பணம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய  புகழேந்தி தமிழகத்தின் எதிர்கட்சி திமுக இல்லை, டிடிவி தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி என தெரிவித்தார். 

- அருள்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :