Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
தமிழகம்
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (13:32 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (13:32 IST)

98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன?
அன்புமணி கேள்வி

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களில் 98 மீனவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று மீனவர்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. மீனவச் சொந்தங்களைக் காப்பாற்ற மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து வழிகளிலும் போராடிய நிலையில், ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக 98 பேர் உயிரிழந்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

தெற்காசிய மீனவர் அமைப்புகளின் பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட பாதிரியாருமான சர்ச்சில், கடலோரக் கிராமங்களில் உள்ள தேவாலயங்களின் மூலம் இந்த விவரங்களைத் திரட்டியுள்ளார். அதிகபட்சமாக நீரோடி கிராமத்தில் 37 பேரும், சின்னத்துறை கிராமத்தில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்., குளச்சலைச் சேர்ந்த 13 பேர், இறைவிபுத்தன் புதூரில் 7 பேர், மற்ற ஊர்களில் 19 பேரும் இறந்துள்ளனர். உலக வல்லரசாக உருவெடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காப்பாற்ற முடியாததால் சுமார் 100 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது அவலத்திலும், அவலம் ஆகும். இந்திய கடலோரக் காவல்படையும், கடற்படையும் நினைத்திருந்தால் அனைத்து மீனவர்களையும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உயிருடன் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் தான் இவ்வளவு பெரிய சோகத்திற்கு வித்திட்டிருக்கிறது. ஒக்கி புயல் தாக்கிய அடுத்த நாளே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல்படையும், கடற்படையும் முறையாக மேற்கொண்டிருந்தால் காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற அடிப்படையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடியவில்லை. ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் மேலும் 500 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் அவற்றிடம் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்கள், கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவரை  உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Paatali Country : India Date :12/13/2017 10:32:50 AM
மீனவர்கள் காணாப்போன கணக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு கணக்கு சொல்றார் மாநில உள்துறை ஒரு கணக்கு சொல்லுது எது சரியானது என்று முன்பே ஊடகங்கள் கேட்டன அதற்க்கு இன்றுவரை ஒரு பதிலும் இல்லை அரசிடம் இருந்து திரு ஜெய்குமாரோ இது வரை நாலு பேர்தான் இறந்திருக்கிறார்கள் என்று ஊடகத்துக்கு பேட்டி கொடுக்கின்றார் இப்படி இருக்கு தமிழக அரசின் செயல்பாடு.இந்திய விமானப்படை, கப்பற்படை பாகிஸ்தான் குஜராத் கடல் எல்லையில் புயல்வந்தால் தான் நடவடிக்கை எடுக்குமா ? நடுவண் மத்திய மந்திரிகள் வாய்கிழிய பேச தான் லாயக்கு இங்கே இருக்கும் பாஜக தலைவர்களும் அவ்வாறே செயல்படுகிறார்கள்.