Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
சிறப்பு செய்திகள்
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
விசாரணை கமிஷனா? ராணுவ கோர்ட்டா?
 ................................................................
நீதித்துறையில் மோதல் வெடித்தது ஏன்?
 ................................................................
ஜல்லிக்கட்டு வகைகளும், விதிகளும்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (13:32 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (13:32 IST)


பாஜகவைத் துரத்துகிறது குஜராத்? 

"பாஜகவை தோற்கடிப்பீங்களா?"

ஒரு 24 வயது இளைஞன் தனது பேச்சை இப்படித்தான் தொடங்குகிறான். கூடியிருக்கும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டம், "ஆமா, ஆமா" என்று குரல் எழுப்புகிறது.

குஜராத்தில் பாஜகவின் ஆட்டம் முடியப் போவதாக எல்லாத் தரப்பிலும் கருத்து பரவும் நிலையில், மோடி கடைசி நேரத்தில் கண்ணில் பட்டதையும், கற்பனைக்கு எட்டியதையும் ஆயுதங்களாக பயன்படுத்தத் தொடங்குகிறார்.ஆனால், அந்த ஆயுதங்கள் அவருடைய தரத்தை மேலும் தாழ்த்துகின்றன. ஒரு பிரதமர் தனது சுயநலத்துக்காக யார் மீதும் எத்தகைய பழியையும் போட தயாராக இருப்பாரா என்று நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளார் மோடி.

மன்மோகன் சிங் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருடன் சேர்ந்து குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சதிசெய்கிறார் என்று மோடி குற்றம் சாட்டினார். அமைதிக்கு பெயர்போன மன்மோகன் சீறிவிட்டார். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.

பாஜக இன்னமும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானையே ஆயுதமாக பயன்படுத்த நினைக்கிறது. இது மக்கள் மத்தியில் எரிச்சலைத்தான் ஏற்படுத்தும் என்பது மோடிக்கு புரியவில்லையா என்று கேட்கிறார்கள்.

குஜராத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பு என்பது 22 ஆண்டுகால பாஜகவின் அடக்குமுறை, சர்வாதிகார ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு என்பதை பாஜகவும் மோடியும் உணரவில்லை.

இத்தனை ஆண்டுகள் அந்த மக்களை ஏமாற்றியோ அச்சுறுத்தியோ அடக்கி வைத்திருந்த பாஜகவும் மோடியும், பொங்கி வரும் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம், 24 வயது இளைஞன் ஹர்திக் படேல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனது மக்களிடம் பேசுகிறான். வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள மேஹ்சானா, பதான் மற்றும் வடக்கு குஜராத் மாவட்டங்களில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்கிறான். அதை உறுதிபடுத்துவோம் என்று மக்கள் குரல் கொடுக்கிறார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் மோடியும், ராகுலும் சாலை வழிப் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால், ஹர்திக் பிரச்சாரம் செய்ய வரும்போது போலிஸ் தடுக்கவே இல்லை. தடுத்தால் மேலும் விளைவு மோசமாகும் என்ற பயம் போலிசுக்கு இருக்கிறது.

அதேசமயம், மோடியும் பாஜகவும் தங்களுடைய கீழ்த்தரமான பிர்ச்சார உத்திகளை மாற்றவே இல்லை. காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, எஸ்டிபிஐ அமைப்பிடமிருந்து 50 ஆயிரம் நன்கொடை பெற்றதாகவும், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்றும் பிரச்சாரம் செய்கிறது.

ஆனால், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்றால், இத்தனை ஆண்டுகள் அமித் ஷாவும், மோடியும், ராஜ்நாத் சிங்கும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஜிக்னேஷ் கேள்வி எழுப்பி மடக்குகிறார்.

அதுமட்டுமில்லை, "நான் வெறும் 50 ஆயிரம் ரூபாய்தானே நன்கொடை வாங்கினேன். அமித் ஷாவின் மகனைப் போல, 50 ஆயிரம் ரூபாயை வைத்து ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிக்கவில்லையே" என்றும் பதிலடி கொடுக்கிறார்.

இப்படி எந்த பந்தைப் போட்டாலும் மடக்கி மடக்கி அடித்தால் மோடியும் பாஜகவும் பாவம் என்னதான் செய்ய முடியும்?

- ஆதனூர் சோழன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : siva Date :12/13/2017 12:47:48 PM
மிஸ்டர் சோழன்! குஜராத் மக்கள் தங்கள் தேவைக்கு தங்களுக்கு எவர் சரியெனப் படுகிறாரோ அவரை தேர்ந்தெடுக்கிறார்கள்! உங்களுக்கு என்ன கவலை? நாம் ( தமிழ் நாடு ) பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளோமா? இல்லையே! பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளவர்களுக்கு பாகிஸ்தான் பற்றி நன்றாகவே தெரியும் உங்களை விட! நீங்கள் என் அடிக்கடி உ.பி பற்றியும் குஜராத் பற்றியும் கவலை கொள்கிறீர்கள்? அந்தந்த மாநிலத்து மக்கள் அவரவர் தோதுக்கு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். நீங்கள் நம் மக்களை நினைத்து கவலைப்படுங்கள்! குஜராத்தில் யாரும் ஓட்டுக்கு 10 ,௦௦௦ / 20,000 கொடுப்பதில்லை,அந்த மக்கள் அறிவுள்ளவர்கள்! நம்மைப் போல பகுத்தறிவாளர்கள் அல்ல! கூவத்தூர் புகழ் தினகரன் பற்றியும் சசிகலா பற்றியும் இன்னும் நம் பத்திரிக்கைகள் கட்டுரை எழுத இன்னும் நாம் அவற்றை படித்துக் கொண்டு இருக்கிறோம்! நமக்கு மோடி பற்றி கருத்து எழுத முகம் இல்லை! அதை புரிந்து கொள்ளுங்கள்!உங்கள் அண்டை வீட்டார் மருமகனாக யாரை தேர்வு செய்கிறார் என்று பேச உமக்கு உரிமை கிடையாது! அதே போல அவர்கள் யாரை முதல்வர் ஆக்குகிறார் என்று பேசவும் நமக்கு உரிமை இல்லை!
Name : Thiru Country : United States Date :12/13/2017 3:07:03 AM
பிஜேபி தான் வெற்றி பெறும். இதுதான் கள நிலவரம். பிஜேபி உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக பொய் சொல்ல வேண்டாம்
Name : Praveenkumar Country : Australia Date :12/12/2017 8:18:49 PM
Modi is gone....Rahul is born....#Gujarat
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/12/2017 6:55:05 PM
எது கற்பனை. மன்மோகன் ரகசியக் கூட்டம் நடத்தக் காரணம் என்ன?.அதில் பாக்கிஸ்த்தானுக்கு என்ன வேலை. அப்படி என்ன ரகசியம் பேசப்பட்டது? ஓடப்போவது யார் என்று காலம் காட்டும்.ஆதனூறார் ஆர்கே நகரில் முதலில் கவனம் செலுத்தட்டும்.குஜராத் பற்றி இவருக்கு ரொம்ப கவலை.தினமும், கட்டுரை எழுதுகிறார். மீண்டும் மீண்டும் வருவேன் .போதுமா.?
Name : (n)O. Govindaraj Country : Taiwan, Province of China Date :12/12/2017 3:24:07 PM
(ye)S. Govindaraj அவர்களின் கருத்துக்களை தற்போது காணமுடியவில்லை என்பது ஆதனூர் சோழரின் கட்டுரைகளை நிறைவற்றதாக்குகிறது! ஆகவே, மீண்டும் எப்படியும் தோன்றிவிடுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்!