Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (13:8 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (13:8 IST)


காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!!

காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆதார் அட்டையின் உதவியால் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் தெலக்கபள்ளியில் உள்ள பண்டபள்ளியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு சுவாதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ராஜேஷ் என்பவருடன் சுவாதி தகாத முறையில் பழகி வந்துள்ளார். 

இதையறிந்த சுதாகர் சுவாதியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுவாதி தனது காதலனுடன் இணைந்து சுதாகரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று அருகிலுள்ள பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளார். மேலும், ராஜேஷ் முகத்தில் ஆசிட் அடித்துவிட்டு, சுதாகர் முகத்தில் காயம் பட்டதாகக் கூறி தனது மாமியாரிடம் ஐந்து லட்சம் பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ராஜேஷின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுதாகரின் தாயார் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். ராஜேஷ் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே வந்த காவல்துறையினர், அவரது கைரேகை, கருவிழி உள்ளிட்ட ஆதார் அடையாளங்கள் மூலம் அவரை ராஜேஷ் என உறுதி செய்தனர். இதையடுத்து, ராஜேஷ் மற்றும் சுவாதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த எவடு திரைப்படப் பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், தகவல் வேகமாக பரவி அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :