Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
தமிழகம்
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (12:31 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (12:31 IST)


விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்!
அதிகரிக்கும் தற்கொலைகள்!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலாதளம் என்பதால், சுற்றுலா பயணிகளுக்காக ஏராளமான கடைகள் உள்ளன. அங்குள்ள கடைகளில் ஹோம்மேட் சாக்லேட், வாசனை எண்ணெய் விற்பனை மோகமாக நடக்கும்.

இந்தக் கடைகளில் வின்டர்கிரீன் ஆயில் என்ற பெயரில் ஓர் எண்ணெயை விற்பனை செய்கிறார்கள். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த எண்ணையைத் தேய்த்தால் கை, கால் மூட்டு வலிகள் நீங்கும் எனச் சொல்லி விற்பனை செய்கிறார்கள். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த எண்ணெயை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இது கொடிய விஷத்தன்மை வாய்ந்தது. நாகப்பாம்பு விஷத்தை விடவும் கொடிய விஷம் கொண்டது என்கிறார்கள். இந்த எண்ணெயை குடித்தால் உடனடியாக உயிர் பிரிந்துவிடும். கொடைக்கானலில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இந்த எண்ணெய் குடித்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.

கடந்த வாரம் கொடைக்கானலைச் சேர்ந்த மெர்சி அவரது மூத்த மகள் தபிதா மற்றும் மூன்று வயது குழந்தை  கென்ஸ் ஆகியோர் வின்டர் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மெர்சியும், தபிதாவும் உயரிழந்துவிட்டனர். குழந்தை கென்ஸ் உயிருக்குப் போராடி வருகிறது. இந்த எண்ணெயை விற்பனை செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி கொடைக்கானலில் பல இடங்களில் வின்டர்கிரீன் ஆயில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் சுற்றுலாத்தளங்களில் உள்ள கடைகளிலும், நகர்ப்பகுதிகளில் உள்ள கடைகளிலும் வின்டர்கிரீன் ஆயில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் குடிசைத் தொழில் என்ற பெயரில் தமிழக அரசின் அங்கீகாரம் வாங்கிவிட்டோம் என ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள். இந்த வின்டர்க்ரீன் ஆயில் கொடைக்கானலில் ஒரு சில சமூக விரோதிகளால் மொத்தமாக தயார் செய்யப்பட்டு கடைகளுக்கு விற்பனைக்காக வழங்கப்படுகிறது.

கொடிய விஷத்தன்மை வாய்ந்த வின்டர்க்ரீன் ஆயிலைக் குடித்து தற்கொலைக்கு முயல்வோரைக் காப்பாற்ற முடியாது. தடையை மீறி வின்டர் ஆயில் விற்பனை செய்வது தொடர்பாக, தொடர் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சரவணனும் ஆய்வு செய்தும் இருக்கிறார். கொடைக்கானல் நகரம் மற்றும் சுற்றுலாப் பகுதிகிளல் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வின்டர்க்ரீன் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த கடைகளுக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

வின்டர்க்ரீன் ஆயில் விற்பனை செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள ராஜேந்திரனிடம் இதுபற்றி கேட்டபோது... இந்த வகையான ஆயிலை சோதனை இடும் வசதி திண்டுக்கல்லில் மட்டுமே உள்ளது. வின்டர்க்ரீன் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்று உயிரிழப்புகள் ஏற்படும் போது மட்டும் கண் துடைப்புக்காக அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். கடைகளில் வின்டர்க்ரீன் ஆயில் விற்பது குற்றம் என்று கடை உரிமையாளர்கள் உணரும் வகையில், விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மேலும் வின்டர்க்ரீன் ஆயிலை மொத்தமாகத் தயாரிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

- சக்தி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :