Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
தமிழகம்
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (0:13 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (0:14 IST)


பார் கவுன்சிலில் அரசியல்  நுழைவதை தடுக்க 
நீதிபதி கிருபாகரன் பரிந்துரை

பார் கவுன்சிலில் அரசியல்  நுழைவதை தடுக்க அரசியல் கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ( ஸ்ரீபெரும்புதூர் அன்னை) தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்னையில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து நடந்ததாக நீதிபதி கிருபாகரன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் பதிவு, சட்ட கல்லூரிகள் தொடர்பாக எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதே சமயம் பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டுமென இந்திய பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும், பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களையும் பார் கவுன்சில் தேர்தலில் அனுமதிக்க கூடாது எனவும் இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி ஆலோசனை கூறியுள்ளார்.

தனது ஆலோசனைகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள அனில் தவே குழுவிடமும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

 - சி.ஜீவா பாரதி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :12/12/2017 10:18:27 PM
அரசியலில் மேன்மையான நோக்கங்களையும் .., மென்மையான மனிதாபிமானங்களையும்.., விதைக்காமல்.... வேரூன்ற செய்யாமல்.... அரசியலையே தூக்கி எறிவது.... வடிகட்டின குமாரசுவாமியின் முட்டாள்தனமான கணக்காகவே இருக்கும்??? நீதிபதிகளுமே.., தாறுமாறாக.., பொறுமை அற்று, போய்க்கொண்டு இருக்கும் காலத்தில்.... கோடிக்கணக்கான வழக்குகள்.... நிலுவையில், கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க..., இது தேவையான ஒன்றா....??? சமீபத்தில், சென்னை ஐகோர்ட்டுக்கு சென்றபோது, வக்கீல்களுக்கு, அறைகள் ஒதுக்கி உள்ள, புதிய கட்டிடத்தின் வாயில் பக்கத்தில்... கேன்டீன் ஓரமாக... மூன்று புதிய காலி மதுபான பாட்டில்கள் கிடந்ததை கண்டேன். அதில் இரண்டை உடைத்து இருந்தார்கள்.... உயர் நீதிமன்றமே, கேட்பாரற்று, இப்படித்தான் நாறிக்கிடக்கிறது???