Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
தமிழகம்
பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம்
 ................................................................
எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்)
 ................................................................
தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம்
 ................................................................
போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்)
 ................................................................
மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி
 ................................................................
குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!!
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு!
 ................................................................
இன்னோவா காரினை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்!
 ................................................................
தனியார் உர விற்பனையாளர்களுக்கு கடும் கெடுபிடி கொடுத்த வேளாண் உதவி இயக்குனர்!
 ................................................................
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது!
 ................................................................
ஜல்லிக்கட்டு காளை முட்டி பூ வியாபாரி உயிரிழப்பு!
 ................................................................
அமைச்சர் தொகுதியில் டிரான்ஸ்ஃபார்மருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
 ................................................................
‘லாபத்தில் ஆளுக்குப் பாதி’ - மதுவிற்பனையில் பங்கு பிரித்த காவல்துறையினர்!
 ................................................................
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்
 ................................................................
கன்னியாகுமரி விமான நிலையத்துக்கு முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு!
 ................................................................
ஹஜ் மானியத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது! - விஜயகாந்த்
 ................................................................
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நண்பர்கள்! - நெகிழ்ச்சியான தருணம்
 ................................................................
41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி எட்டாவது நாள்!
 ................................................................
வைரமுத்து மீது மேலும் தொடரப்படும் வழக்குகள்!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (19:29 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (19:29 IST)

கடல் கொந்தளிப்பால் நடுக்கடலில் சிக்கி தவித்தோம்
உயிர் தப்பிய கடலூர், பரங்கிப்பேட்டை மீனவர்கள் பேட்டிகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் வடக்கு, சின்னூர் தெற்கு மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 10 பேர் கன்னியாகுமாரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கடந்த மாதம் 28ம் தேதி கடலூர்கு மீன்பிடிக்க சென்ற போது ஓகி புயலில் சிக்கி மாயமனார்கள். மாயமான மீனவர்களில் சிலர் கடலில் தீவுகளில் பாதுகாப்பாக ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்தது. இந்த நிலையில் இவர்களில் ராமையன்(52), மதியழகன்(39), காமராஜ்(36), குமார்(52) ஆகிய 4 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரான பரங்கிப்பேட்டைக்கு திரும்பினர். மேலும் செல்லதுரை, ராஜா, ரகுபதி, தட்சிணா மூர்த்தி ஆகிய 4 மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்தனர். ராமையா(50), சங்கர்(48), கோவிந்தராஜ்(37) ஆகிய 3 பேர் மட்டும் இன்னும் இருக்கும் இடம் தெரியவில்லை. உயிர் தப்பி வந்த மீனவர்கள் ராமையன், மதியழகன் ஆகிய 3 பேரும் கூறியதா வது:

பயங்கரமான கடல் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பில் எங்கள் படகு சிக்கியது. நாங்கள் கடுமையாக போராடி படகை கவிழாமல் பார்த்து கொண்டோம். அனைத்து பொருள்களையும் இழந்ததால் உணவு சமைக்கமுடியாமல் பசியால் வாடினோம். காற்றின் வேகத்தினால் படகு அடிக்கடி விழந்ததால் அனைவருக்கும் உள்காயம் ஏற்பட்டது. நாங்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கும் போதே எங்கள் கண்ணெதிரில் பல படகுகள் கடலில் முழுகுவதை பார்த்து பயந்து போனோம். பின்னர் கர்நாடக மாசிலம் மங்களூர் அருகே மலப்பை என்ற இடத்தில் கரை ஏறினோம். அப்போது தான் எங்களுக்கு உயிரே வந்தது. புயல் சற்று ஓய்ந்த நிலையில் ஊருக்கு மீண்டும் கடல் வழியாக வந்தோம். கடல் கொந்தளிப்பால் தொடர்ந்து படகை செலுத்த முடியவில்லை. அதனால் கேரள மாநிலத்தில் உள்ள மொனப்பம் என்ற இடத்தில் படகை நிறுத்தி விட்டு ஒவ்வொருவரும் ரூ.500 கடன் வாங்கிக் கொண்டு பேருந்தில் ஊர் திரும்பினோம். ஆனால் மாயமான எங்கள் ஊரைச் சேர்ந்த 3 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை என்றனர்.கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த அருள்செல்வம், முருகன், மூர்த்தி, மலர்வண்ணன் மற்றும் பூம்புகார் பகுதியை சேர்ந்த 13 பேர் தேவனாம்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு மீன்பிடிக்க கடந்த 31ம் தேதி விசைபடகில் சென்றனர். ஒகி புயலில் சிக்கிய அவர்கள் 42 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். பூம்புகாரை சேர்ந்தவர்கள் அவர்கள் பகுதிக்கு சென்றனர். இது குறித்து அருள்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கூறியதாவது நாங்கள் 13 பேர் விசைபடகில் கொச்சினுக்கு மீன்பிடிக்க சென்றோம். 6 நாள் பயணம் செய்து நடுகடலூக்கு சென்றோம். அங்கு 15 நாள் தங்கி மீன்பிடிந்தோம். அப்போது வாக்கி டாக்கியில் புயல் அதிகமாக தாக்குகிறது என்று எங்களுக்கு தகவல் வந்தது. உடனே கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தது. 

அதனால் நடுகடலில் 13 நாள் போராடினோம். உணவு இல்லாமல் கிடந்தோம். புயல் கடுமையாக தாக்கியது. இனில் எந்த திசையில் செல்கிறோம் என்பது கூட தெரியவில்லை. அந்த சமயம் நாங்கள் வைத்திருந்த வாக்கி டாக்கி திடீரென செயல்பட தொடங்கியது. கோவா கடல் பகுதிக்கு சென்று அங்கிருந்து துறைமுகப்பகுதிக்கு சென்றுவிட்டோம். பின்னர் கொச்சி சென்றோம். அப்போது தான் எங்களுக்கு உயிர் வந்தது. கொச்சியில் இருந்து ரயில் மூலம் காரைக்காலுக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் கடலூரிருக்கு வந்தோம். நாங்கள் உயிர் பிழைத்து வந்தது மறுபிறவி எடுத்ததை போல உள்ளது என்றனர். நாங்கள் கடலில் தத்தளித்த நேரத்தில் எந்த விதமான ஹெலிகாப்டர் மற்றும் கப்பலையும் பார்க்கவில்லை என்றனர்.

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :