Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
தமிழகம்
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (17:55 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (18:0 IST)

இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை

திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால் அதற்குப் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தலித் - இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திசம்பர் 6 அன்று சென்னையில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திருமாவளவன் அவர்கள் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகத் தர்க்கரீதியான கருத்துகள் சிலவற்றை முன்வைத்தார். அக்கருத்துகள் யாவும் முழுமையாகத் திரிக்கப்பட்டு இந்துக் கோயில்களை இடிக்கச் சொன்னதாகத் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

அண்ணன் திருமாவளவன் பேசிய காணொளியின் முழுப் பகுதியையும் வெளியிடாமல் சில பகுதிகளை மட்டும் வெட்டி திருத்தி அதனைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதன் மூலம் மத அடிப்படைவாதிகளின் உள்நோக்கத்தையும், கயமைத்தனத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரிய மேடைகளிலும், கம்யூனிச மேடைகளிலும் நான் பேசியதைக் கத்தரித்து அதனைத் தேர்தல் நேரத்தில் பரப்பி எனக்கு எதிராய் அவதூறு பரப்பியவர்கள் தற்போது திருமாவளவனுக்கும் அதனையே செய்கிறார்கள். கருத்தியலாகவும், அரசியலாகவும் வீழ்த்தத் திராணியற்றக் கோழைகள் தனது கையாலாகத்தனத்தின் விளைவாகக் கையாளும் ஆயுதம்தான் இதுபோன்ற இழிசெயல்களாகும். மதவெறிக்கு எதிராகச் சமரசமற்றுத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகிற அண்ணன் திருமாவளவனின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற வன்மத்தோடே இவ்விதப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது வெளிப்படையாகும்.

இந்துக்கோயில்களை இடிக்க வேண்டும் என்கிற பொருள்பட எந்த இடத்திலும் அவர் பேசவில்லை. மாறாக, தர்க்கரீதியாகச் சில வாதங்களை முன்வைத்தார். ‘இராமர் கோவில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்துவிட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலைக் கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசுகின்றனர். இந்த வாதம் சரியென்றால் சிவன் கோயில்களையும், பெருமாள் கோயில்களையும் இடித்துவிட்டு, அங்கே மீண்டும் பவுத்த விகார்களைக் கட்டுவோம் எனக் கூறுவது சரியாக இருக்குமா?’ என்கிற கேள்வியைத்தான் எழுப்பினார். இதில் எவ்வித மதவிரோதக் கருத்துகளும் இல்லை. இது ஒரு தர்க்கரீதியான, ஆய்வுக்குட்படுத்த வேண்டிய வாதம் அவ்வளவே! ஆனால், இதனை வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி வகுப்புவாத கலவரங்களை ஏற்படுத்த முனைந்து அதன்மூலம் இந்துத்துவத்தின் வேர்பரப்பத் துடிக்கின்றன மதவாத அமைப்புகள்.

அண்ணன் திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மட்டும் அல்லர்! அவர் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர். ஒடுக்கப்பட்டுக் கிடக்கிற அடித்தட்டு மக்களின் உயர்வுக்காய் போராடுகிற தமிழினத் தலைவர்களில் முதன்மையானவர். அவர் மீது தொடுக்கப்படும் அவதூறுகளையும், அவருக்கு எதிரான வன்முறை பேச்சுகளையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. கருத்தியல்ரீதியிலும், அரசியல் முடிவுகளிலும் அவரோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக அவரோடு இருக்கிற உறவிலும், அன்பிலும் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆகவே, அண்ணன் திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் செயல்படுத்த முயன்றால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மதத்துவேச அமைப்புகளை எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Paatali Country : India Date :12/12/2017 9:00:22 AM
இசுலாமியருக்கு அண்ணன் திருமாவும் கிருத்துவருக்கு தம்பி சைமன் சீமானும் களம் காணுவது சிறப்பு அதற்காக தங்கள் பேசியதை எல்லாம் தர்க ரீதியில் என்று கூறுவது ஏற்புடையதா ? ஒரு மதத்தை புண்படுத்துவது தவறு ஹிந்து கோவிலை இடிப்பேன் எனில் எந்த ஹிந்துவுக்கு ஆத்திரம் வராது ? ஒருவர் தான் பவுத்தத்தை தழுவிவிட்டேன் என்கிறார் நீங்க ஏற்கனவே கிருத்துவத்தை தழுவி விட்டீர்கள் ஹிந்து மதத்தில் பிறந்த நீங்க அரசியல் பிழைப்புக்காக பிறந்த மதத்தை ஏன் வம்புக்கு இழுப்பானேன் அப்புறம் உங்கள் தோணியில் எச் ராஜா அவர்களும் பேசுவார்கள் இது தேவையா நாட்டில் எவ்வளவோ பிரச்சனை தலையாய பிரச்சனை இருக்க இது ரொம்ப முக்கியமா ?!
Name : V.K.SELVAKUMAR. Country : Australia Date :12/11/2017 7:03:02 PM
1500 - 2000 வருடங்களுக்கு மேலாக தலித்துகள்தான் இவர்களுக்கு எதிரிகள். .முதலில் இவர்களை சூத்திரர் நிலைக்கும் பிறகு பஞ்சமர் சண்டாளர் நிலைக்கும் அரசர்களின் உதவியுடன் கீழே தள்ளினர். இப்போது தலித் தலைவர்களுக்கு எதிராக பிற SC BC இனமக்களை தலித் எதிரிகளாக உருவாக்கி பின்னாலிருந்து (சூழ்ச்சித்தந்திரம் மூலமாக) தாக்கி வருகிறார்கள் . மீனவர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் எல்லோருமே அடிமட்ட நிலையிலேயே வாழவேண்டும் என்பது இவர்களின் நீடித்த எதிர்பார்ப்பு. சேது சமுத்திர திட்டம் ஒழிப்பு, விவசாய நிலங்கள் ஒழிப்பு இடஒதுக்கீட்டிற்கு ஆப்பு, திருட்டு அரசியல் எல்லாம் இவர்களின் தந்திர/சூழ்ச்சி செயல்கள்தான்
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/11/2017 6:14:01 PM
வெளிக்கு ஓணான் சாட்சி சொல்கிறது.