Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி கதை" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (16:2 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (16:10 IST)


மோடியின் கண்ணில் தெரியுது தோல்வி பீதி!

தொடர்ந்து 22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜகவிற்கு, நடந்து முடிந்துள்ள முதல் கட்டத் தேர்தல் நிலவரமே பெருத்த அடியாக அமைந்துள்ளது என்பதையும், ஆளும் பாஜகவின் தோல்வி பீதியையும் கண்கூடாகக் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. ஆனால், ஒரு இடத்தில் கூட ‘குஜராத் மாடல்’ என்ற வார்த்தையை உபயோகிக்காதது வேறு கதை. அந்தளவிற்கு குஜராத் மாடலின் மீது அவருக்கே அதிருப்தி ஏற்பட்டிருக்கும் போல.

முதல்கட்ட வாக்குப்பதிவிற்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், தன்னை தீண்டத்தகாதவன் (நீச்) என்று கூறியதை, அனைத்து பிரச்சாரங்களிலும் பேசிய மோடி, தற்போது அதற்கும் ஒருபடி மேலே போய் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

டிசம்பர் 9ஆம் தேதி நடந்துமுடிந்த முதல்கட்ட வாக்குப்பதிவிற்குப் பின்னர், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தில் பாஜகவின் வெற்றியை முறியடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்ற குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடக்கு குஜராத் பகுதியில் உள்ள பலன்பூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய மோடி, பாகிஸ்தான் தூதரும், பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரியுடன் மணிசங்கர் ஐயரின் வீட்டில் வைத்து ரகசியமாக சந்தித்தனர். அந்த சந்திப்பில் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இராணுவத் தலைவர் அர்சத் ரஃபீக், சோனியாவின் மூத்த ஆலோசகரான அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக ஆக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தது தொடர்பாக பேசியுள்ளனர். அந்த ரகசிய சந்திப்பிற்குப் பிறகுதான் மணிசங்கர் ஐயர் என்னை ‘நீச்’ என்று விமர்சித்தார் என தெரிவித்தார்.

பாஜகவிற்கு இதுமாதிரியான பிரச்சாரமெல்லாம் புதிதல்ல..

பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் ஐந்து கட்டமாக நடைபெற்றது. தெற்கு மற்றும் மத்திய பீகாரில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், எதிர்பார்த்த அளவிற்கான வாக்குவங்கியை பெற்றிருக்கவில்லை என்பதை உணர்ந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ‘பீகாரில் பாஜக தோற்றுப்போனால், அந்தத் தோல்வியை பாகிஸ்தான் கொண்டாடும்’ என பிரச்சாரங்களில் பேசினார். இருந்தபோதிலும், அந்தத் தேர்தலில் பாஜக நினைத்த அளவிற்கான வெற்றியைப் பெறமுடியாமல், அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரை விலைக்கு வாங்கி புறவாசல் வழியாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘கான்பூரில் மிகப்பெரிய ரயில்விபத்து ஏற்பட்டது. அது சாதாரண விபத்தாக எனக்குப் படவில்லை. இதில் தீவிரவாதிகளின் சதி இருக்கிறது. நேபாள எல்லைக்குத் தப்பிச் சென்ற தீவிரவாதிகளைப் பிடிக்கவேண்டுமென்றால், பாஜகவிற்கு வாக்களியுங்கள்’ என கெஞ்சாத குறையாக பேசி முடித்தார். அங்கு ஆட்சியைப் பிடித்திருந்தாலும், மக்களின் அதிருதியைத் தவிர பாஜக வேறெதையும் சம்பாதித்ததாகத் தெரியவில்லை.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குவங்கியோடு வெற்றிபெறத் துடிக்கும் பாஜக, அதன் அதிகார மையங்களாக கருதப்படும் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவே தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.சவுராஷ்டிரா பகுதியில் உள்ள படிதார் சமுதாய மக்களில் பெரும்பான்மையான வாக்குகளும், 18 முதல் 30 வயதுவரையிலான, அந்த சமுதாய இளைஞர்களின் வாக்குகளும் ஹர்தீக் பட்டேலுக்கே கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் நம்பகத்தன்மையாக நடந்துகொள்ளாத ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடும் இந்த நிலைக்கு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

89 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 60 தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என பாஜக தரப்பில் சொல்லப்பட்டாலும், அதற்குப் போட்டியாக ஐம்பதுக்கும் நெருக்கமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என காங்கிரஸ் தரப்பிலும் கூறிவருகின்றனர்.

மூன்றில் இரண்டு பங்கு வாக்குவங்கியோடு கூடிய வெற்றி என்ற நிலைமாறி, தற்போது வெற்றி என்பதே கேள்விக்குறியாகி இருப்பதுதான் மோடியின் தேசியவாத, இனவாத பிரச்சாரங்கள் தலைத்தூக்கிப் பார்ப்பதற்குக் காரணம்.
தேர்தலில் தோல்விபயம் எழும்போதெல்லாம் அண்டை மாநிலங்களையும், நாடுகளையும் வாய்க்கு வந்தபடி இழுத்துப் பேசுவது பாஜகவிற்கு புதிதொன்றும் இல்லையே!

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/13/2017 6:27:13 PM
ஒரு முன்னாள் பிரதமர் என்று மன்மோஹனுக்கு மரியாதை கொடுக்கிறார் மோடி காங்கிரஸ் காரர்கள் செய்த செயலுக்கு விசாரணை கமிஷன் எதற்கு கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?இவர்களுக்கு வக்காலத்து வாங்க சிலர் இருக்கிறார்கள்..
Name : Mathivanan Country : India Date :12/12/2017 4:15:32 PM
பாக். அதிகாரிகளோடு மன்மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தித்ததாகவே இருக்கட்டும். அதை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவே இருக்கட்டும். இதுமாதிரியான விஷயங்களைக் குறித்து தக்க முடிவெடுக்க, விசாரணைக் குழு அமைக்க என எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கத் திராணியுள்ள பதவியில் உள்ள ஒரு நாட்டின் பிரதமர்.. எதற்காக தேர்தலில் போய் இதையெல்லாம் பற்றி பேசி கண்ணீர் சிந்தவேண்டும். தேர்தலுக்காக இதைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவீர்களானால், சிந்தித்துக் கொள்ளுங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிற பிரதமரின் பெருமையை!
Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/12/2017 10:56:00 AM
மன்மோகன் சிங் கூட்டம் நடந்ததை ஒப்புக்கொள்கிறார். ஆனால் குஜராத் தேர்தல் பற்றி பேசவில்லை என்கிறார்., பாகிஸ்தான் ஆட்களுடன் மூன்று மணி நேரம் என்ன ரகசிய பேச்சு நடந்தது?பாக்கிஸ்த்தானோடு பேசவேண்டிய அவசியம் என்ன.?காங்கிரஸ் காரர்களின் தேச பக்திக்கு இது உதாரணம்.
Name : SIVA Date :12/12/2017 9:49:09 AM
நாங்கள் பாகிஸ்தான் என்வாயை சந்திக்கவே இல்லை என்று மண் மோகன் கூறி விட்டது போல கருத்து எழுதி இருக்கிறீர்களே! நாங்கள் குஜராத் பற்றி பேசவில்லை என்றுதான் கூறியுள்ளார்.! சந்திப்பில் மர்மம் எதுவும் இல்லாமல் இருந்தால் , வெளிப்படையாக இதுதான் பேசினோம் என்று சொல்லி விடலாமே?? ஏற்கனவே போன முறை இந்த மணிசங்கர் பாகிஸ்தான் தொலை காட்சியிலேயே மோடியை மட்டும் பதவியில் இருந்து விலக்க முடியுமா என்று பாருங்கள் .. மற்றதை எளிதாக சரி செய்து கொள்ளலாம் என்று பேசியது கட்டுரையாளருக்கு தெரியாதா? பாகிஸ்தானுடன் சுமுகமாக எளிதாக சரி செய்யக் கூடியது என்பது என்ன? பாக் அனுப்பும் போலி கரன்சியை விநியோகம் செய்வது , போதை மருந்து கடத்தலை அனுமதிப்பது மற்றும் ஹவாலா பணபரிமாற்றத்தை அனுமதிப்பது போன்றவைதான் எளிதாக தீர்க்கக் கூடிய விஷயங்களா? இதை பற்றி விவாதித்து முடிவு எடுக்கத்தான் சங்கரன் வீட்டில் ரகசிய கூட்டம் நடத்தப் பட்டதா?