Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (23:48 IST)
மாற்றம் செய்த நாள் :8, டிசம்பர் 2017 (0:10 IST)
பகலிலும் வாகன விளக்குகள் எரிய வேண்டும்! - ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்புஜார்க்கண்ட் மாநிலத்தில் பகல் நேரங்களிலும் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிக்கவேண்டும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த சாலைப் பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனையில் கலந்துகொண்ட முதல்வர் ரகுபர் தாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பகல் நேரங்களில் விளக்குகளை எரிய விடுதல், இரு சக்கர் வாகனங்களில் பின் இருக்கையில் இருப்பவர்கள் தலைக்கவசம் அணியவேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

400 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மைசூரு வம்சத்தில் பிறந்த குழந்தை!மைசூரு ராஜவம்சத்தில் 400 ஆண்டுகால சாபத்தை முறியடித்து அரச குடும்பத்தில் வாரிசு பிறந்துள்ளது. மைசூரில் 1612ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஸ்ரீரங்கப்பட்டினத்தை உடையார் சாம்ராஜ்ஜியம் வென்றது. அப்போது உடையார் சாம்ராஜ்ஜியம் ராணி அலமேலம்மாவை துரத்தியதால், அவர் காவிரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அப்போது குழந்தை பாக்கியம் கிடைக்காமல் சாபம் விட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. இந்நிலையில், தத்துப்பிள்ளைகளே மைசூரு ராஜவம்சத்தை ஆண்டு வந்தனர். தற்போது, அந்த சாபம் முறியடிக்கப்பட்டு மைசூரு ராஜவம்சத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. 

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல்!கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கருப்பு கொடியுடன் ஏராளமான பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி பல கிலோமீட்டர்கள் பேரணியாக சென்ற மீனவர்கள், குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆட்சியர், டிஜிபி என யாருடைய வேண்டுகோளையும் ஏற்காத மீனவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள சம்மதிக்கவில்லை. இரவு போராட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

கைவிட்ட தமிழக அரசு - கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்! மீன்பிடிக்கச் சென்ற தங்களின் உறவினர்கள், ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடலை அடையாளம் கண்டு, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அதற்கான டிஎன்ஏ பரிசோதனையை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பிய இயக்குனர் கவுதம் மேனன்! மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த இயக்குநர் கவுதம் மேனின் சொகுசு கார் செம்மஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்த போது டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கவுதம் மேனின் சொகுசு கார் நெருங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக கவுதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க தீபா உள்ளிட்டோருக்கு விசாரணைக் கமிஷன் சம்மன்!மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்தது தமிழக அரசு. இந்நிலையில், ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஆஜராக மருத்துவர் ஷங்கர் (டிச. 12 ம் தேதி), தீபா (டிச. 13ம் தேதி), தீபக் (டிச. 14ம் தேதி), மாதவன் (டிச. 15ம் தேதி), மருத்துவர் மகேந்திரன் (டிச. 19ம் தேதி), ஷீலா பாலகிருஷ்ணன் (டிச. 20 ம் தேதி), மருத்துவர் ஜோஷப் மற்றும் ராம்மோகன் ராவ் (டிச. 21 ம் தேதி), அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கும் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பாலஸ்தீனியர்கள் போராட்டம்!ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது பாலஸ்தீனத்தில் போராட்டத்தைக் களத்தை உருவாக்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதில் வன்முறை மூண்டது. வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் சிலர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களைக் கலைப்பதற்காக இஸ்ரேலியப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனியர்கள் கற்களை வீசியதால் வன்முறைச் சூழல் உருவானது.

மோடியை அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் தற்காலிக நீக்கம்!காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் ஐயர் நீச் ஆத்மி என விமர்சித்தார். ‘நீச்’ என்றால் இந்தியில் நேரடியாகவே தீண்டத்தகாதவன் என்று அர்த்தப்படும். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தக் கருத்துக்கு மணி சங்கர் ஐயரும், காங்கிரஸும் மன்னிப்பு கூறவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், மணி சங்கர் ஐயரை தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்!ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு சின்னம் வழங்குவதில் இழுபறி இருந்தது. பணப்பட்டுவாடா தொடர்பாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்கவேண்டும் என டிடிவி தினகரன் கோரியிருந்தார். ஆனால், பதிவு செய்யப்பட்ட கட்சியினரும் அதே சின்னத்தைக் கோரியதால் அவருக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. பின்னர், டிடிவி தினகரனுக்கு குலுக்கல் முறையில் பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மும்பையில் தஷ்வந்த் காவல்துறையினர் பிடியிலிருந்து தப்பியோட்டம்!சென்னை போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தான். குன்றத்துாரில், 25 பவுன் நகைகளுக்காக பெற்ற தாயையே கொன்றுவிட்டு தஷ்வந்த் தலைமறைவானான். அவனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையில் காவல்துறை தனிப்படையில் சிக்கிய தஷ்வந்த் விமான நிலையத்திற்கு கொண்டுவரும் வழியில் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பியோடிய தஷ்வந்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொகுப்பு - ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :