Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக; ஓய்வூதியர்கள் கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் உத்தரவு! காற்றில் பறக்கும் அவலம்...
 ................................................................
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (22:15 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (22:26 IST)

புதுச்சேரி: மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு பொது செயலாளர் இரா.முருகானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் ஆர்.வி.லெனின், ஆலோசகர் முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், மனோகரன், எத்திராஜ், செல்வம், காமராஜ், கோபால், சண்முகம், குணபூஷணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் டிசம்பர் 2-ஆம் தேதி போபால் நினைவு தினத்தை முன்னிட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மாநில உரிமைகளை பறிக்கும் செயலிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத பா.ஜ.க. துணை நிலை ஆளுனர் மூலம் ஆட்சிநடத்தி வருகிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில உரிமைகள் என்ற தலைப்பில் பொது உரையாடல் நடத்துவது.
  
காங்கிரஸ் அரசு எப்போதும் இல்லாத வகையில் குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவைகளை அதிகளவு உயர்த்தியிருப்பதுடன், புதியதாக குப்பைக்கும் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துகிறது.
 
போபாலில் ஏற்பட்டதைப்போல் தொழிற்சாலைகளில் விஷவாயு உருவாகி நாட்டில் எங்கும் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதுபோன்ற தொழிற்சாலைகளை ஆபத்து விளைவிக்கும் தொழிற்சாலைகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், புதுச்சேரியில் விஷவாயுவை உருவாக்கும் பல தொழிற்சாலைகள் எந்தவித எச்சரிக்கையும், தடையும் இன்றி இயங்கி வருகின்றன. எனவே, உடனடியாக இந்த தொழிற்சாலைகளை அடையாளம் கண்டு புதுச்சேரியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசுத்துறை நிறுவனங்களில் இதுவரை பாண்லேவில் மட்டுமே ஏழாவது ஊதியக்குழு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது அங்கு பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே பயனாக உள்ளது. அதேசமயம், அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே குறைவான சம்பளம் பெற்று வருபவர்கள் அதே இடத்தில் நீடிக்க, அதிகம் சம்பளம் பெற்றுவந்தவர்கள் மேலும் அதிக சம்பளம் கிடைக்க அரசு வழி செய்து, ஊழியர்களுக்கிடையில் மோதல், போட்டி, பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்திய தற்காலிக ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்திய அரசை கண்டிக்கிறோம்.  
உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

- சுந்தரபாண்டியன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :