Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (18:41 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (18:41 IST)


வேகமெடுக்கும் நித்தியானந்தா பாலியல் வழக்கு!

நித்தியானந்தா மூலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனக்கூறி லெனின் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். நவம்பர் 27, 2010ல் இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டில் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.



2014 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனைகள் நடைபெற்றன. இதன் அடிப்படையில் கர்நாடக சிஐடி போலீசார் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு அருகேயுள்ள ராம்நகர் 2வது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், தான் ஒரு 6 வயதுக் குழந்தை என்றும் தன்னால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முடியாது என்றும் மனுவில் கூறியிருந்தார்.
 
இதற்கு ஆதாரமாக, டில்லி தனியார் மருத்துவமனை ஒன்றின் சோதனை அறிக்கையையும் அவர் தாக்கல் செய்திருந்தார். மேலும், நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யுமாறு கூறியிருந்தார். 

நித்தியானந்தா ஒரு நிரபராதி என்று நடிகை ரஞ்சிதா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்நிலையில் லெனின் மற்றும் கர்நாடக சிஐடி பிரிவு போலீசார் இந்தக் கருத்துக்களை ரத்து செய்யக்கோரி கடந்த 2015ம் ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எனினும் இது தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு இன்று (டிசம்பர் 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைவாக நடத்தவேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அறிவுறுத்தியது. 

மேலும், வழக்கு விசாரணை தொடங்கப்படாத நிலையில், தான் தாக்கல் செய்யும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற தெரிவித்த நீதிமன்றம், விசாரணை தொடங்கிய பின்னர் நீதிமன்றம் விரும்பினால் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடாத ஆவணங்களைப் பரிசோதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்குத் தொடுத்த லெனினை நாம் தொடர்புகொண்டபோது, “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கின்றேன். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். 
மேலும், இந்த வழக்கில் நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- தாமோதரன் பிரகாஷ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :