Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
சிறப்பு செய்திகள்
"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!" ராகுலிடம்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகுமா?
 ................................................................
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து
 ................................................................
காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?
 ................................................................
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (16:1 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (18:4 IST)
1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு 1997 ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி வெறும் 141 இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளால் நிலையான ஆட்சி தர முடியாது என்று மக்களை திசைதிருப்ப திட்டமிட்டது. அதனால்தான் அவசரப்பட்டு தேவகவுடாவுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

உடனே, ஐக்கிய முன்னணி தலைவர்கள் காங்கிரஸுடன் பேசி, காங்கிரஸ் கட்சி ஏற்றுகொண்ட .கே.குஜ்ராலை பிரதமராக ஏற்க சம்மதித்தனர். .கே.குஜ்ரால் ஆட்சிக் காலத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற கலவரத்தை காரணம் காட்டி, அங்கு நடைபெற்ற பாஜக ஆட்சியை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அந்த பரிந்துரையை திருப்பி அனுப்பினார்.ஐக்கிய முன்னணி தலைவர்கள்

இந்நிலையில்தான், 1997 நவம்பர் மாத தொடக்கத்தில் ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிஷனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது. ராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுக, ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருந்தது. இதையடுத்து ஜெயின் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு காங்கிரஸ் கட்சி வற்புறுத்தியது.

1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி, ஜெயின் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. இதில் திமுகவை விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஜெயின் கமிஷன் தொடர்பு படுத்தி இருந்தது உறுதியாகியது.

எனவே, காங்கிரஸ், திமுக அமைச்சர்களை அரசைவிட்டு நீக்குமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் பிரதமர் குஜ்ராலும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். ஆனால், குஜ்ரால் காங்கிரஸின் இந்த நெருக்குதலை ஏற்கமறுத்து விட்டார்.

1997 நவம்பர் 23 ஆம் தேதி கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று சூசகமாக தெரிவித்தார். 1997 நவம்பர் 28 ஆம் தேதி குஜ்ரால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து, குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மற்ற கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போனதால் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பில் இருந்தது. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை வாங்கிய முறைகேடு வழக்கு, ஸ்பிக் பங்குகளை வாங்கிய வழக்கு, கொடைக்கானலில் முறைகேடாக பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி கொடுத்த வழக்கு, பாடநூல் டெண்டரை சசி எண்டர்பிரைஸஸுக்கு கொடுத்த வழக்கு என பல வழக்குகளை விசாரிக்க கலைஞர் அரசு சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. அந்த நீதிமன்ற விசாரணைகளை தவிர்ப்பதற்காக ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் நடத்திய  நாடகங்களை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ரசித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில்தான் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்தியில் ஐக்கிய முன்னணி அரசுகள் கவிழந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில், பாஜக, மதிமுக, பாமக, சுப்பிரமணியன் சாமியின் ஜனதாக் கட்சி, வாழப்பாடி தலைமையிலான ராஜிவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

திமுகவுடன் தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைத்திருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் தனித்து போட்டியிட்டன.

தேர்தல் முடிவில் வழக்கம்போலவே கூட்டணிக் கணக்கு வெற்றி பெற்றது. அதிமுக 30 இடங்களையும், திமுக கூட்டணி 9 இடங்களையும் கைப்பற்றின. அதிமுக மட்டும் 18 இடங்களை கையில் வைத்திருந்தது. அந்தக் கூட்டணியில் பாஜக 4, பாமக 4, மதிமுக 3 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.

இந்திய அளவில் இப்போதும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாநிலக் கட்சிகளிடம்தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி இருந்தது. காங்கிரஸ் 141 இடங்களையும், பாஜக 181 இடங்களையும் பெற்றிருந்தன.

கடந்த முறையைப் போல இல்லாமல் இப்போது பாஜக கூட்டணிக் கட்சிகளிடம் போதுமான இடங்கள் இருந்தன. ஆனால் கூட்டணிக் கட்சிகளின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சியை நடத்தவேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருந்தது.

கடந்த முறை 13 நாட்கள் பிரதமராக இருந்த வாஜ்பாய், இந்த முறை மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அதிமுக என்ற முள்படுக்கையில் அவர் தூக்கமின்றித் தவித்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய்க்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இந்தத் தொல்லையை தாங்கமுடியாமல் தவித்தார்.

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே, முந்தைய நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க செயற்கைகோளின் பார்வையில் பட்டு சர்ச்சையானது.

ஆனால், அமெரிக்க செயற்கைக் கோளின் பார்வையில் இருந்து தப்பும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருந்தது. வாஜ்பாய் அரசு பொறுப்பேற்றதும், அப்துல்கலாம் இதை வாஜ்பாயிடம் சொன்னார். உடனே, மே மாதம் 11 ஆம் தேதி பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு சிறி அணுகுண்டுகளும் வெடிக்கப்பட்டன.

1974 ஆம் ஆண்டிலேயே இந்திரா காலத்தில் இதே பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வாஜ்பாய் அரசு அணுகுண்டை வெடித்தவுடன் இந்தியா வல்லரசாகிவிட்டதாக மிகப்பெரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியா அணுகுண்டு வெடித்தவுடன் பாகிஸ்தானும் தன்னிடம் இருந்த அணுகுண்டை வெடித்துக் காட்டியது. இதையடுத்து தானும் ஒரு அணுஆயுத நாடுதான் என்று பாகிஸ்தானும் தன்னை நிரூபித்துக்காட்டியது.

பாகிஸ்தானை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கவே வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை பயன்பட்டது என்பதைத் தாண்டி இதில் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று நடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இது தவிர இன்னொரு விளைவுக்கும் இந்த சோதனை காரணமாக இருந்தது. ஆம், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய அதே மாதத்தில் காஷ்மீரில் உள்ள கார்கில் நகருக்கு அருகே மிகப்பெரிய மலைப்பரப்பை, பாகிஸ்தான் ராணுவத்தினரும், காஷ்மீர் தீவிரவாதிகளும் இணைந்து ஆக்கிரமித்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவத்துக்கு தெரியவே இல்லை. உயர்ந்த மலைத்தொடரில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய ராணுவம் போர்புரிய வேண்டியிருந்தது. இந்தப் போரில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை கண்டித்தன. இதையடுத்து பாகிஸ்தான் தனது ராணுவ நடவடிக்கையை கைவிட்டது. ஆனாலும் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாகவும், வாஜ்பாயை கார்கில் வீரர் என்றும் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் டார்ச்சரால் வாஜ்பாய் தூக்கமிழந்து தவித்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் சிலவற்றில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் அவர் திமுக அரசைக் கலைக்கும்படி வாஜ்பாயை தினமும் துளைத்துக் கொண்டிருந்தார். சிறுபான்மை அரசாக இருந்துகொண்டு திமுக அரசை கலைக்க வாஜ்பாய் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து 18 மாதங்களே ஆன நிலையில் காங்கிரஸுடன் இணைந்து வாஜ்பாய் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப்பெறுவதாக ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து வாஜ்பாய் மக்களவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனவே, 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெற்றது.

கடந்த தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது அப்படியே தலைகீழாக மாறியது. திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று ஜெயலலிதா நினைத்தார். அதைத் தாண்டி, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது திமுக. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இருந்த பாமக, மதிமுக, தமிழக ராஜிவ் காங்கிரஸ், திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அணி அமைத்திருந்தன.

அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரித்தன.

இந்த இரண்டு அணிகள் தவிர்த்து, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தனியாக அணி அமைத்திருந்தன.

தேர்தல் முடிவில் மீண்டும் கூட்டணிக் கணக்கே வெற்றியை பெற்றது. திமுக கூட்டணி 26 இடங்களையும் இதில் திமுக 12 இடங்களையும் பெற்றது. அதிமுக கூட்டணி 13 இடங்களையும், அதிமுக தனித்து 10 இடங்களைப் பெற்றது. இந்திய அளவில் அணுகுண்டு வெடிப்பு, கார்கில் போர் வெற்றி ஆகியவற்றின் தாக்கத்தால் பாஜக கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது.
பாஜக கூட்டணி கட்சிகள் 270 இடங்களை பெற்றிருந்தாலும், உதிர்க்கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன்தான் வாஜ்பாய் அரசு அமைக்க நேர்ந்தது. காங்கிரஸ் கட்சி 159 இடங்களைத்தான் பெற்றது. இனி, மத்தியில் கூட்டணி அரசுதான் அமையும் என்பதை இந்த தேர்தல்கள் உறுதிப்படுத்தின.

1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, தனது ஆட்சிக்காலம் முடிவதற்குள்ளாகவே மேலும் 2 மக்களவைத் தேர்தல்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழகத்தில் நிகழ்ந்த அணிமாற்றங்கள் கொள்கை கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழைய அரசியல் பல்லவியின் அடிப்படையில் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சி முடிவதற்குள் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை வாங்கிய வழக்கிலும், பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கிய வழக்கிலும், ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய வழக்கிலும் ஜெயலலிதாவுக்கும் அவருடைய உடன்பிறவாச் சகோதரி சசிகலாவுக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

(மத்தியில் பாஜக அரசில் திமுக இடம்பெற்றுள்ள நிலையில், நடைபெற்ற அந்த தேர்தல் முடிவையும், சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு வசதியாக, கடைசி நேரத்தில் திமுகவை கழற்றிவிட்ட கட்சிகளையும் திங்கள்கிழமை பார்க்கலாம்)

 -ஆதனூர் சோழன்

முந்தைய பகுதி :

34. கூட்டணிக் கணக்குதான் தமிழக அரசியல்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :