Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
சிறப்பு செய்திகள்
"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!" ராகுலிடம்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகுமா?
 ................................................................
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து
 ................................................................
காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?
 ................................................................
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 5, டிசம்பர் 2017 (12:15 IST)
மாற்றம் செய்த நாள் :5, டிசம்பர் 2017 (12:15 IST)


அவுரங்கசீப் மோடியைவிட கெட்டவர் இல்லை! 

ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கியது மோடிக்கும் பாஜகவின் தலைவர்களுக்கும் கடுப்பாக்கி இருக்கிறது போல.காங்கிரஸின் அவுரங்கசீப் ஆட்சியை ஏற்க முடியாது என்று குஜராத்தில் மோடி புலம்பியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியே ராகுலை ஏற்றுக் கொண்டிருக்கும்போது மோடிக்கு என்ன கவலை வந்ததோ தெரியவில்லை.

காங்கிரஸில் ராகுலுக்கு எதிராக மூத்த தலைவர்கள் யாரேனும் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்று மோடியும் பாஜகவும் எதிர்பார்த்திருக்கலாம். சுமுகமாக ஒருமித்த கருத்தோடு ராகுலை தலைவராக தேர்வு செய்தவுடன் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் தாங்கமுடியவில்லை போல.

யோசித்துப் பார்த்தால், அவுரங்கசீப் ரொம்ப நல்லவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

தனது தந்தை ஷாஜஹானின் ஆடம்பர நிர்வாகம் அவுரங்கசீப்பிற்கு பிடிக்கவில்லை. அதனால்தான் தந்தையை சிறை வைத்து ஆட்சியை கைப்பற்றினார் என்பது வரலாறு.

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அவுரங்கசீப் அவருடைய வாழ்க்கைக்கு அவரே சம்பாதித்தார். ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ்க்கை நடத்தினார் என்பதெல்லாம் வரலாற்று உண்மைதானே.

ஆனால், மோடியைப் போன்ற ஆடம்பரமான பிரதமரை சுதந்திர இந்தியா பார்த்தே இல்லை என்பது கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை என்கிறார்கள் காங்கிரஸ்கார்ரகள்.

ஒருமுறை அணிந்த ட்ரெஸ்ஸை மறுமுறை அணிவதில்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு கோட் அணிந்து உலகையே அதிர வைத்த பிரதமராகவும் மோடி இருந்தார். தனக்கென உடை வடிவமைக்க தனியாக வடிவமைப்பாளரையே நியமித்திருக்கும் பிரதமர் இவர்தான் என்கிறார்கள்.அவுரங்கசீப் காலத்தில் நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பாக வைத்திருந்தார். தனது வருவாய்க்காக குல்லா தைத்து விற்பார் அவுரங்கசீப் என்கிறது வரலாறு. ஆனால், மதப்பற்று மட்டுமே ரொம்ப அதிகம் என்கிறார்கள்.

மோடியின் ஆட்சியில் பொருளாதாரமும் சீர்குலைந்து, ஆடம்பரமும் அதிகரித்து, கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் நாட்டை ஒப்படைக்கும் கயமைத்தனமும் அதிகரித்து, மதவெறியும் தலைவிரித்தாடும் நிலைமை உருவாகியிருக்கிறது.

எனவே, மதசார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் காங்கிரஸை மோடி விமர்சிக்க தகுதியில்லை என்றே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

-ஆதனூர் சோழன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : ravi Country : Hong Kong Date :12/8/2017 9:37:29 AM
s.கோவிந்தராஜன் - மோடி வேற என்னல்லாம் பண்ணி இருக்கிறார். காங்கிரஸ் ஒரு முன் உதாரணம் இப்ப பாரு மணி சங்கர் அய்யர் நீக்கம் , மோடி எத்தனை பேரை பிஜேபி இருந்து நீக்கி இருக்கார் ? RSS & பிஜேபி எத்தனை தடவை மோசமான வார்த்தைகள் சொல்லி இருப்பார்கள் ? மோடிக்கு திராணி இருக்குதா கட்சியில் இருந்து நீக்க ?
Name : ravi Country : Hong Kong Date :12/8/2017 9:36:48 AM
s.கோவிந்தராஜன் - மோடி வேற என்னல்லாம் பண்ணி இருக்கிறார். காங்கிரஸ் ஒரு முன் உதாரணம் இப்ப பாரு மணி சங்கர் அய்யர் நீக்கம் , மோடி எத்தனை பேரை பிஜேபி இருந்து நீக்கி இருக்கார் ? RSS & பிஜேபி எத்தனை தடவை மோசமான வார்த்தைகள் சொல்லி இருப்பார்கள் ? மோடிக்கு திராணி இருக்குதா கட்சியில் இருந்து நீக்க ?
Name : S.Govinarajan Country : United Kingdom Date :12/7/2017 6:27:47 PM
பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என்பது ஒரு கட்டாய கடமை அல்ல. எத்தனை பத்த்ரிக்கைகள் நடுவு நிலையோடு செய்திகளை வெளி இடுகின்றன.(நக்கீரன் உட்பட ).நாடாளுமன்றத்தில் தேவைப்படும் போது பதில் அளிக்கிறார். மோடி ஒவ்வொரு மாதமும் வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். மக்களை சந்திக்கிறார். எதிர் முகாமில் இருந்தால் கூட கருணாநிதியை வந்து பார்த்தார். தற்போது கூட தாழ்த்தப்பட்டவர்களைத் திருமணம் செய்தால் 25 லட்ச ரூபாய் உதவித் தொகையை அறிவித்துள்ளார். மோடி எதை செய்தாலும் அதை எதிர்ப்பதையே சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். அதில் நீங்களும் ஒருவர்.நீங்கள் தலையில் வைத்துக் கூத்தாடும் தானைத் தலைவர் புத்தனோ ,காந்தியோ அல்ல. அவரும் பல தவறுகளுக்கு காரணமாக இருந்துள்ளார்.
Name : ஆதனூர் சோழன் Country : India Date :12/7/2017 1:06:46 PM
சரி. உடையைப் பற்றி நான் பேசவில்லை. இதுவரை மோடி எத்தனை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எத்தனை முறை பதில் அளித்திருக்கிறார். இதுவரை அவருடைய திட்டங்களில் எது மக்களுக்கு பயன் அளித்திருக்கிறது?
Name : S.Govinarajan Country : United Kingdom Date :12/6/2017 4:17:13 PM
மோடியை பலமுறை பலவிதமாக விமர்சித்த நீங்கள் இப்போது உடையைக் குறை கூறுகிறீர்கள்.இப்படித்தான் உடை உடுத்தவேண்டும் என்று நீங்கள் உத்தரவு இட முடியுமா?ஒரு பிரதமர் ,வெளிநாட்டு பிரமுகர்களை சந்திப்பவர் நல்ல உடை அணிவது அவசியம். முதலில் எதையாவது குறை கூறும் வழக்கத்தை நிறுத்துங்கள். மோடி ராஹுலைப் போல் நாடாளு மன்றத்தில் விவாதத்த்தின் போது தூங்க வில்லை.இங்கு முக்கிய வேலை இருக்கும் போது ராஹுல் இத்தாலி பாட்டி வீட்டிற்கு ஓடிப்போகிறார். உங்கள் தானைத் தலைவர் தன்னை அரசர் போல் நினைத்து மலர் கிரீடம் அணிந்து போஸ் கொடுத்த கதை எல்லாம் தெரியும்.அவ்ரங்க சீப்பிற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் கஜினி முஹம்மது ,மோடி மீது பலமுறை வசை மாறி பொழிந்து உங்கள் எஜமான விசுவாசத்தை காட்டுகிறீர்கள்.
Name : ஆதனூர் சோழன் Country : India Date :12/6/2017 1:09:19 PM
S.கோவினராஜன்... ராகுலை மோடி திட்டியது இருக்கட்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி தனது தலைவரை எப்படியோ முடிவு செய்துவிட்டு போகட்டும். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் விருப்பம். ஆனால், ராகுல் வெறும் கதர் ஜிப்பாதானே அணிகிறார். மோடி ஏன் ராஜா பரம்பரை மாதிரி ஒரு நாளைக்கு மூன்று நிகழ்ச்சிகள் என்றால் மூன்று விதமான உடை அணிகிறார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...
Name : rishya Country : France Date :12/5/2017 9:14:14 PM
இந்திய ஊடகங்களுக்கு இடையிலும் மனசாட்சியுள்ளோர் இருப்பது புலப்படுகிறது
Name : S.Govinarajan Date :12/5/2017 3:54:02 PM
மணி சங்கர் ஐயர் ,ஜஹாங்கீர், ஹுமாயூன், பாபர், அக்பர், அவ்ரங்க சீப் ஆகியோர் வாரிசுகளாக ஆட்சி புரிந்தார்கள் .அப்போது தேர்தல் நடந்ததா ? என்றார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மோடி காங்கிரஸ் கட்சியை மொகலாய ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசினார்.நேரு, இந்திரா, சஞ்சய், ராஜீவ், சோனியா, ராஹுல் என்று வாரிசு அரசியல் நடக்கிறது. ஆதனூராருக்குப் பிடித்த தி.மு.க.வில் கருணாநிதி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின் ,கனிமொழி என்று வாரிசு அரசியல் நடக்கிறது. இந்த அழகில் மற்றவரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?.அரைகுறையாக சட்டமன்றத்தைக் கட்டி திறப்புவிழா நடத்திய கருணாவை ஷாஜஹானுக்கும், அவருடைய மகனை அவ்ரங்கசீப்பிற்கும் ஒப்பிடலாமா?