Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக; ஓய்வூதியர்கள் கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் உத்தரவு! காற்றில் பறக்கும் அவலம்...
 ................................................................
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (21:40 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (21:46 IST)


கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர்
 என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு!
பெ. மணியரசன்


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்  தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
  
‘’நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், நேற்று (23.11.2017) சென்னையில் செய்தியாளர்களிடம் கோதாவரியிலிருந்து இரும்புக் குழாய் போட்டு, காவிரிக்குத் தண்ணீர் கொண்டு வரப்போவதாகவும், அதற்குப் பிறகு மாநிலங்களுக்கிடையே தண்ணீர்ப் பற்றாக் குறையால் ஏற்படும் சிக்கல்கள் தீர்ந்து போகும் என்றும் கூறியுள்ளார். 

இதுவரை கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணப் போவதாக சொல்லி வந்தவர்கள், இப்போது கோதாவரியிலிருந்து கொண்டு வரப்போவதாகச் சொல்கிறார்கள்.

 கோதாவரியிலிருந்து 300 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கொண்டு வந்து, கிருஷ்ணா ஆற்றில் விட்டு, பின்னர் அதிலிருந்து சோமசீலா அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும், சோசீலாவிலிருந்து 100 ஆ.மி.க. தண்ணீர் எடுத்து கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் பயன்படும் வகையில் காவிரியில் விடப்படும் என்றும் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். 

இந்தக் கற்பனைத் திட்டம் நிறைவேற்றப்படுவதாகவே வைத்துக் கொண்டாலும், 100 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகமும், தமிழ்நாடும் பங்கிட்டுக் கொண்டால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்? அது எப்படி காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்த்துவிடும்? 

ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு பணம் கொடுத்து கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு சென்னை குடிநீருக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஓராண்டுக்கு 12 ஆ.மி.க. கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வேண்டும். இதுவரை எந்த ஆண்டிலும், 12 ஆ.மி.க. தண்ணீர் சென்னைக் குடிநீருக்கு ஆந்திரப்பிரதேசம் விட்டதே கிடையாது! 

கிருஷ்ணாவிலிருந்து 12 ஆ.மி.க. தண்ணீர் பெறுவதற்காக தமிழ்நாடு அரசுக்கும் ஆந்திரப்பிரதேச அரசுக்குமிடையே 1983 இல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்திற்காக, 2015 மார்ச் வரை மட்டும், சற்றொப்ப 662 கோடி ரூபாயை ஆந்திராவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. ஆனால், இத்திட்டப்படி 12 ஆ.மி.க. தண்ணீர் வரவில்லை, அதிக அளவாக ஓராண்டிற்கு 3.5 ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே வந்திருக்கிறது!

இந்த நிலையில், கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் வரும் என்றும், அது கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலுள்ள காவிரிச் சிக்கலைத் தீர்த்துவிடும் என்றும்  கூறுவது, தமிழ் மக்களை ஏமாளிகளாகக் கருதிக் கொண்டு கூறுவதாகும்! 

“கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் கோரும் உரிமையை மறந்துவிடுங்கள், கங்கையை நினையுங்கள், கோதாவரியை நினையுங்கள்” என்று தந்திரமாக திசைதிருப்பிவிட்டு - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கம்தான் நடுவண் அமைச்சரின் கோதாவரித் திட்ட அறிவிப்பில் தெரிகிறது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , செய்தியாளர்களிடம் “கோதாவரி நீர் கொண்டு வரும் அற்புதமான திட்டத்தை நடுவண் அமைச்சர் அறிவித்திருக்கிறார்” என்று கூறி, மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். கோதாவரித் தண்ணீர் வந்துவிட்டால், டெல்டா மாவட்டங்களில் பருவமழை தவறும்போது ஏற்படும் சாகுபடி பாதிப்பு நீங்கிவிடும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். 

காவிரி டெல்டாவில் சாகுபடி பாதிக்கப்படுவதற்கான முதற்பெரும் காரணம், கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்து விட மறுப்பதுதான் என்பதை மறைத்து, பருவமழைப் பொய்த்துப் போவதுதான் காரணம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவது ஞாயமா?’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :