Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (17:23 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (17:23 IST)


காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு!

பெற்றோரிடம் இருந்து தொலைந்துபோன 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டையின் உதவியால் மீட்கப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தனி மனித அடையாளத்திற்கான ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.



டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய இந்திய தனி மனித அடையாளத்திற்கான ஆணைய தலைவர் அஜய் பாண்டே, கடந்த சில மாதங்களில் காணாமல் போன ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதார் அட்டையின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தைகள் சரியான நேரத்தில் ஆதார் அட்டை பதிந்து கொண்டதுதான் அதற்குக் காரணம். முன்பெல்லாம், பாலிவுட் படங்களில் காணாமல் போன குழந்தைகள் பெரியவர்களான பிறகுதான் அவர்களது பெற்றோர்களிடம் சேர்வார்கள். ஆனால், அந்தக் கதையை இனி மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு திட்டங்களும், மானியங்களும் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு 10 பில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலக அளவில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடு இந்தியா. இங்கு ஆண்டொன்றுக்கு கணிசமான அளவிலான குழந்தைகள் காணாமல் போகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :