Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (16:5 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (19:45 IST)


இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி!



இந்தியா இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அனி 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஈடன் கார்டனில் வைத்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்தே சுமாராக ஆடிவந்த இலங்கை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சண்டிமால் 57 ரன்களும், கருணரத்னே 51 ரன்களும் எடுத்திருந்தனர். மொத்தமாக அந்த அணி 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சராசரியாக முதல் இன்னிங்க்ஸில் 380 ரன்கள் எடுக்கக்கூடிய இந்த பிட்சில் 205 ரன்கள் எடுத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :