Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (13:26 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (13:26 IST)


திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை!
பின்னணி காரணம்?

திண்டுக்கல்லில் உள்ள நெட்டுத் தெருவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களாகவும், தனியார் ஓப்பந்ததாரர்களிடம் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தான் தனியார் ஓப்பந்ததாரர்களிடம் துப்புரவு பணியாளராக பாலமுருகன் வேலைபார்த்து வந்தார். இன்று அதிகாலையில் வழக்கம்போல் எம்.எஸ்.பி. ஸ்கூல் அருகே பாலமுருகன் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது இரண்டு டூவீலரில் வந்த ஐந்து மர்மநபர்கள் பாலமுருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ஓடியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் நகரின் மற்றொரு பகுதியான என்விஜிபி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாலமுருகனின் மாப்பிள்ளையான சரவணனையும் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சரவணின் தம்பியான வீரன் என்ற மதுரைவீரனையும் அந்த மர்மகும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று துப்புரவு தொழிலாளர்களையும் கொலை செய்தது திண்டுக்கல் நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.அதோடு கொலை செய்யப்பட்ட மூன்று துப்புரவு தொழிலாளர்களுமே உறவினர்கள் என்பதால் இந்த படுகொலையை கேள்விபட்ட நகரில் உள்ள மற்ற துப்புரவு தொழிலாளர்களும் பதறி அடித்துக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட மூன்று சடலங்களையும் கண்டு கதறி துடித்த உறவினர்கள் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. உடனே நகர் வடக்குக்காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான காக்கிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சாலைமறியலை கைவிட செய்தனர். இப்படி நகரில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்ததை கண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல், டிஐஜி கார்த்திகேயன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு சென்று கொலை நடந்த விவரங்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தனர். அதன் எதிரொலியாக அந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் காக்கிகள் இறங்கியுள்ளனர்.

பட்டப்பகலில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்ததற்கு என்ன பின்னணி என நாம் விசாரித்தபோது, கடந்த 2016 ஏப்ரல் மாதம் மாநகரின் மையப்பகுதியான கிழக்கு ரதவீதி அருகே உள்ள சர்ச் மேற்குவாசல் எதிர்புற ரோட்டில் சோமுவை ஒரு மர்மகும்பல் பட்டப்பகலில் வெட்டி சரமாரியாக கொலை செய்தனர். அந்த கொலையும் குற்றவாளிகள் 15 பேரை காக்கிகள் கைது செய்தனர். அதில் இந்த பாலமுருகன், சரவணன், வீரன் என்ற மதுரைவீரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கு பலிக்குப் பலியாகத்தான் இந்த மூன்று பேரை சோமு ஆதரவாளர்கள் கொலை செய்திருப்பார்கள் என்ற அடிப்படையில் காக்கிகள் விசாரணையை தெரியப்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாநகரில் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மூன்று கொலைகள் நடந்ததை கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது!

- சக்தி


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : HARIHARAN SUBRAMANIAN Date :11/24/2017 2:09:49 PM
திட்டமிட்டு கொலைசெய்பவர்களை மற்றும் அவர்களை ஏவியர்களையும் தூக்கில் போடவேண்டும். கருணையே காட்டக்கூடாது