Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, நவம்பர் 2017 (23:12 IST)
மாற்றம் செய்த நாள் :23, நவம்பர் 2017 (23:20 IST)


அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய 
கால மாஜி எம்.எல்.ஏவை  மரணத்திற்கு தள்ளியது!தி.மு.க வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது புதிய கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கையின் போது முதல் படிவத்தில் முதல் 5 உறுப்பினர்களில் 5 வது உறுப்பினராகவும் பேராவூரணி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ வாகவும் இருந்த குழ.செல்லையா தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள முதுகாடு கிராமத்தில் உடல்நலக் கோளாறால் இறந்தார். 

தி.மு.க தீவிர உறுப்பினராக இருந்து கட்சி பணியாற்றி வந்த குழ.செல்லையா பேராவூரணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது கட்சியால் மறுக்கப்பட்டது. அதனால் சுயேட்சையாக களமிறங்கியவர் சிங்கம் சின்னத்தில்  நின்று தி.மு.க வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். புதிய கட்சியை தொடங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட முதல் 5 உறுப்பினர்களில் ( எம்.ஜி.ஆர் உள்பட) 5 வது உறுப்பினராக முதல் படிவத்தில் கையெழுத்து போட்டவர் குழ.செல்லையா. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர். தொடர்ந்து முத்தரையர் சங்கம் தொடங்கினார். முதலில் தனது கட்சிக்கு வந்தார் என்பதற்காக புதுக்கோட்டையில் நடந்த முத்தரையர் மாநாட்டிற்கு எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட ஒரே சாதி மாநாடு அது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். அந்த மாநாட்டில் இது சமூகநீதி மாநாடு என்று எம்.ஜி.ஆர். பேசினார். தி.மு.க ஆட்சி காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது பட்டுக்கோட்டையில் அஞ்சா நெஞ்சன் அழிகிரிக்கு சிலை அமைத்து அதை கலைஞர் திறக்க வந்த போது சிலை திறப்புக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியவராக திகழ்ந்தார். 

1977 ல் கட்சி கொடியை கைகளில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கட்டளை இட்ட போது அதை ஏற்க மறுத்து கட்சியைவிட்டு வெளியேறினார். 

அதன் பிறகு சங்க வேலைகளில் தீவிரம் காட்டி வந்தாலும் கடந்த 2012 ல் மீண்டும் ஜெ முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார். கடந்த 3 மாதங்களாக உடல்நலமின்றி இருந்தவரை தொடக்க கால அதி.மு.க தொடங்கியவர்களின் ஒருவராக திருச்சி சௌந்தராஜன் வந்து நேரில் பார்த்துச் சென்றார்.

ஆனால் அ.தி.மு.க தொடக்க விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் அ.தி.மு.க வினர் இது போன்ற கட்சி தொடங்கியவர்களை கண்டு கொள்ளவில்லை. உடல்நலமின்றி வீட்டிலும் மருத்துவமனையிலும் இருப்பது அ.தி.மு.க எடப்பாடி அணிக்கும் தெரியும், தினகரன் தரப்பிற்கும் தெரியும் ஆனால் எந்த அணியினரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் பட்டுக்கோட்டை வரை வந்த முதலமைச்சர் எடப்பாடி, முதுகாடு கிராமத்தில் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக கிடக்கும் குழ.செல்லையாவை பார்க்க வருவார் என்று ர.ர.க்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதைப்பற்றி கவலையின்றி சென்றுவிட்டார். இது பற்றி அ.தி.மு.க விசுவாசிகள் கூறும் போது.. கட்சியை தொடங்க எம்.ஜி.ஆருடன் இணைந்து ரொம்பவே கஷ்டப்பட்டோம். அதற்காக எத்தனை கிராமங்கள் சென்று  தி.மு.க வினரால் விரட்டப்பட்டு எல்லாவற்றையும் சமாளித்து புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை ஒரு இரும்பு கோட்டையாக கட்டி வைத்தோம் அந்த கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை தெரிந்தவர்கள். இப்படி கட்சியை உடைக்க நினைக்கமாட்டார்கள். கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் இந்த அவல நிலையை பார்த்தே துவண்டிருப்பார். நல்ல வேலை அவர் உயிருடன் இல்லை. எங்களால் இந்த உடைப்பையும் சொந்தம் கொண்டாடுவதையும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று அவரைப் பார்க்க சென்றவர்களிடம் எல்லாம் புலம்பினார். கட்சி உடைப்பே அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. அதனால் தான் அவர் மரணத்தை தழுவிவிட்டார் என்றனர். 

குழ.செல்லையாவின் மரண செய்தி கேட்டு கட்சி பாகுபாடின்றி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அ.தி.மு.கவின் பிளவு முதுபெரும் அ.தி.மு.கவினரை கொன்று வருகிறது என்பதை கட்சி பதவிக்காக சுற்றி வருபவர்களுக்கு எப்பதான் தெரியும்.

- இரா.பகத்சிங்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Date :11/24/2017 12:10:26 AM
இவ்வளவு பெரிய பில்டப் தேவை தானா??? எம்.ஜி.ஆர் உள்பட 5 வது உறுப்பினராக முதல் படிவத்தில் கையெழுத்து போட்ட..., குழ.செல்லையா அவர்கள்.., விலக்கிவிட்டு.., பின்னர் 2012 ல் மீண்டும் ஜெயில் "ஜெ" முன்னிலையில் அ.தி.மு.க வில் "ஏன்" அவரை இணைத்துக்கொண்டார்...., முக்கியமாக.., முத்தரையர் சங்கம்??? தொடங்கி..!!!, அதன் வேலைகளில் தீவிரம் காட்டியாவர்..??? அந்நிய செலாவணி மோசடியில், சிக்காமல் இருக்க, இந்திராவின் அறிவுறுத்தலால் கணக்கு கேட்டு... வெளியேறிய.., அன்றைய எம்ஜிஆரு க்கு இலுப்ப பூ சர்க்கரையா ஒரு ஜாதி சங்க ஆளு.., தேவை பட்டாரு.... அதனால இருந்தாரு??? அதிமுகவினால்..... தமிழகம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும் இவ்வேளையில்.... இவரை தலையில் தாங்கி பிடித்து...... உசுப்பிவிடுவது என் என்று....புரியவே இல்லை! இல்லவே... இல்லை!! நம் தலையில் நாமே மண்ணை வாரிக்கொட்டிக்கொள்வதில்.., உலகத்தின் முன்னிலையில் இருப்பவர்கள் நாம்???