Add1
logo
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! || அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்! ||
முக்கிய செய்திகள்
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த போகிறேன்: இந்தியாவின் தண்ணீர் மனிதன் பேட்டி
 ................................................................
அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் பட்டப்பகலில் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தலைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் அதிமுகவினர்! - வெற்றிவேல் குற்றச்சாட்டு
 ................................................................
வரம்பு மீறி செயல்படும் ஆளுநர்! - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கை - மத்திய அரசிடம் இன்று சமர்ப்பிப்பு
 ................................................................
85% புகையிலை எச்சரிக்கை படங்களை நீக்கக்கூடாது: சட்டப்பாதுகாப்பு தேவை! அன்புமணி
 ................................................................
மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான் : திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
பணப்பட்டுவாடா - சிறப்பு தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சியினர் ஆலோசனை!
 ................................................................
தஷ்வந்த் நண்பர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (21:34 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (21:46 IST)

அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் ஜெயக்குமார் : 
திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி பதிலடிஅ.தி.மு.க.  அமைச்சர்  ஜெயக்குமாருக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., விடுத்துள்ள பதில் அறிக்கை: 

’’அரசியல் அரிச்சுவடுகூட தெரியாத ஆளும் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், நித்தம் நித்தம் ஏதேனும் ஒரு அறிக்கையினை வெளியிட்டு, தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

ஒரு அமைச்சராக இருப்பவர் எந்த ஒரு அறிக்கை வெளியிட்டாலும், அந்த அறிக்கையின் பொருளுக்கான வரலாற்றை தெரிந்து கொண்டு  - புரிந்து கொண்டு  வெளியிட வேண்டும்.  ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் வரலாறு தெரியாமல், கடந்தகால அரசியலைக்கூட, தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சர்காரியா கமிஷன் என்றால் என்ன?  சர்க்காரியா கமிஷனனின் வரலாறு என்ன? என்பதை, அன்றைக்கு அரசியலில் இருந்தவர்களை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

இந்த ஜெயக்குமாரின் தந்தை இராயபுரத்தில் உள்ள ஒரு சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் மாநகராட்சி மன்ற உறுப்பினராக்கி அரசியலில் அறிமுகப்படுத்தியது. 

அந்த காலக்கட்டத்தில் இந்த ஜெயக்குமார், படித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

இந்தியா முழுவதும் “நெருக்கடிநிலை” பிரகடனம் செய்த நேரத்தில், அதை துணிவுடன் எதிர்த்து தீர்மானம் போட்டு, ஜனநாயகத்தை காப்பாற்றிட குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் விளைவாக, அவர் தனது ஆட்சியையும் பறிகொடுத்தார்.

அந்நெருக்கடிநிலை காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் முரசொலி மாறன், தளபதி மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன்  உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கழகத்தவர்கள் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டனர். அச்சிறைக் கொடுமையின் விளைவாக சிட்டிபாபுவையும், சாத்தூர் பாலகிருஷ்ணனையும் இழந்தோம்.  கழக ஆட்சி கலைக்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.கழகத்தையும் - கழகத் தோழர்களையும் காட்டிக் கொடுத்துவிட்டு, வெளியேறிய மறைந்த எம்.ஜி.ஆர். அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து, ஆட்சியை கலைத்ததற்கு காரணம் காட்டுவதற்காக போலியாக அமைக்கப்பட்ட கமிஷன்தான் ‘சர்க்காரியா கமிஷன்’.

சர்க்காரியா கமிஷன் பற்றி பேசும் ஜெயக்குமாருக்கு எம்.ஜி.ஆர். கூறிய குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது பற்றி தெரியுமா?

உதாரணத்திற்கு, அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டர் கலைஞருக்கு சொந்தம் என்றும்;  அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டல் கலைஞருக்கு சொந்தம் என்றும் புகார் சொன்னார்.   இந்த இரண்டு இடங்களும் யாருக்கு சொந்தம் என்பதும்;  இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்பதும் மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

எம்.ஜி.ஆர். கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா கமிஷன் முன்பு சாட்சியம் அளிக்க வருமாறு எம்.ஜி.ஆருக்கு சம்மன் அனுப்பியபோது,  “எனக்கு ஒன்றும் தெரியாது என்றும்;  அனைத்தும் சேலம் கண்ணனுக்குத்தான் தெரியும்” என்று  கூறி, விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகவில்லை.  ‘புகார் கொடுத்தவரே, சாட்சி சொல்ல மறுத்த விந்தை இந்த கமிஷனில் மட்டுமே நடந்தது’ என்பது ஜெயக்குமாருக்குத் தெரியுமா?

சர்க்காரியா கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு பயந்து கொண்டு எம்.ஜி.ஆர். கமிஷன் முன்பு ஆஜராகமல் இருந்தார். ஆனால், தலைவர் கலைஞர் அவர்கள் கமிஷனில் நேரில் ஆஜராகி, அதனை எதிர்கொண்டார்.

சர்க்காரியா கமிஷன் பற்றியும்  மற்றும் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.  ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் உள்ள அமைச்சர்கள்மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டு, அக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனையை முழுமையாக அனுபவித்த அ.தி.மு.க.வினர் பலர் உண்டு.

இதன் உச்சமாக, அ.தி.மு.க.வை வழிடத்தியவரும், இதே ஜெயக்குமாரை அமைச்சராக்கிய ஜெயலலிதாவையே “குற்றவாளி’’ என அறிவித்து, நான்கு ஆண்டுகள் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

உண்மைநிலை இவ்வாறிருக்க, கச்சத்தீவு வரலாறு என்ன என்பதை ஜெயக்குமார் புரிந்து கொள்ள வேண்டும்.  கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என்று 1974 முதல் கடுமையாக எதிர்த்தவர் கலைஞர்.

‘ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தி.மு.க.வை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ஜெயக்குமார் கூறுகிறார்.  இதிலிருந்தே, கச்சத்தீவு பிரச்சினையில் அ, ஆ-கூட தெரியாதவர் ஜெயக்குமார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு தொடர்பாக தலைவர் கலைஞர் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் இருப்பதுகூட தெரியாமல் தமிழக சட்ட அமைச்சராக ஜெயக்குமார் இருந்தார் என்பதும், எந்த லட்சணத்தில் அ.தி.மு.க.வினர் ஆட்சி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

இதே ஜெயக்குமாரை, ஜெயலலிதா சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணம் என்ன? என்பதை நாடே அறியும்.  குறிப்பாக, ஒரு பாராளுமன்ற பெண் உறுப்பினரும், அவருடைய கூட்டணியினரும் அறிவர்.

தி.மு.கழகத்தின்மீது  தொடர்ந்து இதுபோன்ற  புழுதிவாரி தூற்றும் அறிக்கை வெளியிட்டால், ஜெயக்குமாரின் வண்டவாளங்கள், தண்டவாளத்தில் ஏற்றப்படும்.

நடைபெறாத ஒரு விஷயத்திற்கு அறிக்கை விடும் ஜெயக்குமாருக்கு, உண்மையில் துணிவிருந்தால் - தைரியமிருந்தால், இன்று ஆளுநர் தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை விடத் தயாரா?

ஆளுநரை எதிர்த்து ஜெயக்குமார் அறிக்கையையும் விடமாட்டார்;  வாயையும் திறக்க மாட்டார்.  கொள்ளை அடித்தவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருப்பதால், அறிக்கைவிட பயப்படுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆளுநரை இச்செயலைப் பற்றி அறிக்கை விடும்போது, ஜெயக்குமாரோ மற்ற அமைச்சர்களோ அஞ்சுவது ஏன்? 

ஏனென்றால், அவ்வாறு செய்தால் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவர்கள்மீதும் வழக்கு பாயும் என்பதால் பயப்படுகிறார். 

நிலைமை இவ்வாறிருக்க, நெருக்கடிநிலையை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் போட்டதைப்  போல,  ஜெயக்குமாரும் மற்ற  அமைச்சர்களுக்கோ துணிவிருந்தால் மாநில உரிமைகளை ஆளுநர் மூலம் பறித்திடும் மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை தீர்மானம் போட முடியுமா?  

கோடி கோடியாக கொள்ளை அடித்து  குவித்து வைத்திருக்கும் அமைச்சர்கள், தங்கள் சொத்துகளை காப்பாற்ற மத்திய அரசிடம் மண்டியிட்டு சலாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடும் - நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.’’தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sridhar Country : China Date :11/22/2017 2:59:43 PM
கலைஞர் அவர்கள் தலைமையில் ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை!! அப்படியானால் விஞ்ஞான ரீதியான ஊழல் என்று சர்க்காரியா குறிப்பிட்டது எதை?