Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (15:50 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (15:57 IST)


உட்கட்டமைப்புக்கு ரூ.16.27 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க அரசின் திட்டம் என்ன? - அன்புமணி ராமதாஸ் வணிக மாநாடு, முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவற்றில் விரவசனம் பேசுவதற்காகவே ஆட்சியாளர்கள் தொலைநோக்குத் திட்டங்களை அறிவிப்பதாகவும், ஆட்சியாளர்கள் தொலைநோக்குத் திட்டங்களின் இலக்கு மற்றும் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் ஐக்கிய பொருளாதார அமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிக உச்சிமாநாட்டில் பங்கேற்றுப் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.16.27 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளதாக உறுதியளித்திருக்கிறார். இது தமிழக மக்களை மட்டுமின்றி, உலக முதலீட்டாளர்களையும் ஏமாற்றும் முயற்சியாகவே தோன்றுகிறது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டில் அறிவித்த தொலைநோக்குத் திட்டம் -2023 என்ற ஆவணத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் அடிப்படையில் தான் நிதியமைச்சர்  இதை கூறியிருக்கிறார். பன்னீர்செல்வம் உறுதியளித்தவாறு உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.16.27 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டால் சிங்கப்பூருடன் போட்டியிடும் அளவுக்கு தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கான வசதியோ, முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனோ தமிழக அரசுக்கு உள்ளதா? என்பது தான் பில்லியன் டாலர் வினாவாகும். தமிழக அரசால் இது முடியாது என்பது தான் உண்மை.

தொலைநோக்குத் திட்டம் -2023 என்ற ஆவணம் 22.03.2012 அன்று வெளியிடப்பட்டது. அதன்பின் இன்றுடன் 5 ஆண்டுகள் 8 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால், இந்த ஆவணம் வெளியிடப் பட்டு இரு ஆண்டுகள் கழித்து  23.02.2014 அன்று அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டதைத் தவிர தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தொலைநோக்குத் திட்டத்தின்படி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மதிப்பீடு 250 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது அதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது ரூ.16.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது  என்பதைத் தவிர, தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவதில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

தொலைநோக்குத் திட்டத்தின்படி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் ஐந்தரை ஆண்டுகளில் குறைந்தது ரூ.7.5 லட்சம் கோடி செலவழித்திருக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் ரூ.2500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி கூட பயனுள்ள வகையில் செலவிடப்பட்டதாக தெரியவில்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் 50% பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தொலைநோக்குத் திட்ட இலக்குகளின்படி  17,340 மெகாவாட் திறன் கொண்ட 13 மின்னுற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தி  முடிக்கப்பட வேண்டும். இவற்றில், 10,380 மெகாவாட் திறன் கொண்ட 9 அனல் மின்திட்டங்கள் 2017-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும். 2017-ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இவற்றில் ஒரு மின்திட்டப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்திருப்பதால் இங்கு முதலீடு செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை என்பது தான் உண்மை. தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 10-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில்துறையில் முதலீடு செய்யவே முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை எனும் போது உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது கனவாகவே அமையும். தமிழ்நாட்டில் உட்கட்டமைப்புத் துறைக்கு முதலீடு வரும் வாய்ப்புகள் இல்லை என்றோ, தமிழகத்திற்கு அந்த தகுதி இல்லை என்றோ கூற முடியாது. இந்தியாவின் மிக நீண்ட கடல்பரப்பைக் கொண்ட தமிழகத்தில் பல இடங்களில் துறைமுகங்களையும், விமான நிலையம், சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். ஆனால், மொத்த முதலீட்டில் 35% முதல் 40% வரை ஆட்சியாளர்களுக்கு கையூட்டாக அழ வேண்டியிருப்பதால் தான் ஓரளவு நேர்மையான முதலீட்டாளர்கள் கூட தமிழகத்தின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.

தமிழகத்தில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட 80% அதிகரித்து விட்டதாகவும், இது ஒரு சாதனை என்றும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். எந்த அடிப்படையில் இந்தக் கணக்கை அமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை. 2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.1,12,432 ஆகும். தமிழகத்தின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.1,84,210 ஆகும். தேசிய சராசரியை விட தமிழகத்தின் சராசரி வருமானம் 63.88% அதிகம் என்பது உண்மை தான். ஆனால், பெருமைப்படும்  அளவுக்கு இது அதிகமல்ல. நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் பெரிய அளவில் எந்த வளமும் இல்லை. ஆனால், அம்மாநிலத்தின் தனி நபர் வருமானம் ரூ.2,36,450 ஆகும். அதாவது தேசிய சராசரியை விட புதுவை மாநிலத்தின் தனிநபர் வருமானம் இரு மடங்குக்கும் அதிகமாகும். தமிழகத்தில் உள்ளவர்களைவிட புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.52,000 கூடுதலாக வருவாய் ஈட்டுகின்றனர். தனிநபர் வருமானம் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் புதுவை 5&ஆவது இடத்திலுள்ள நிலையில் தமிழகம் 11-ஆவது இடத்தில் தான் உள்ளது என்பதை பன்னீர்செல்வம் புரிந்துகொள்ள வேண்டும். 

தில்லி மாநிலத்தின் தனிநபர் வருமானம் ரூ.5,55,882 ஆகும். இது தமிழகத்தை விட 3 மடங்குக்கும் அதிகமாகும். கோவா, சிக்கிம், சண்டிகர் ஆகிய மாநிலங்களின் தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் தனிநபர் வருமானம் அதலபாதளத்தில் உள்ளது. அவ்வளவு ஏன்?... தொலைநோக்குத் திட்ட இலக்குகளின்படி தமிழகத்தின் தனிநபர் வருமானம் நடப்பாண்டில் ரூ.4 லட்சத்தை தொட்டிருக்க  வேண்டும். ஆனால், அதில் பாதியைக்கூட தமிழகம் இன்னும் நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்குத் திட்டம் -2013 இலக்குகளை எட்டுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை இன்று வரை மேற்கொள்ளவில்லை. வணிக மாநாடு, முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவற்றில் வீரவசனம் பேசுவதற்காக மட்டுமே தொலைநோக்குத் திட்ட இலக்குகள் பயன்படுகின்றன. அதைத்தவிர அதனால் வேறு எந்த பயனும் இல்லை. ஒருவேளை தர்மபுத்தம் புகழ் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொருளாதார யுத்தம் நடத்தி தமிழகத்தை முன்னேற்றும் எண்ணம் இருந்தால், தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்ட தமிழக அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது; இனி என்ன செய்யப் போகிறது  என்பதை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Paatali Country : India Date :11/22/2017 11:37:54 AM
திமுக அதிமுக இரண்டு திராவிட காட்சிகள் கடந்த 50 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல கோடி ஊழல் செய்துள்ளது தற்போது அம்பலமாகி வருகின்றது அதனை திசை திருப்பும் விதமாக ராமதாஸ் மீது பாய்கின்றது கழக கண்மணிகள் மருத்துவர் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த போது கருணாநிதியும் அம்மையார் ஜெயலலிதாவும் திரைப்படத்தில் கதை வசனம் எழுதுவதற்கும் நடித்ததற்கு எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்தால் எங்களை போன்று அய்யாவின் பின்னர் அணிவகுக்கும் பாட்டாளிகளும் தெரிந்துகொள்வோம் கழக கண்மணிகளே ?!
Name : ராஜகோபாலன். Date :11/21/2017 5:12:35 PM
அன்புமணி ராமதாஸ் சின்ன அய்யா அவர்களின்.., கேள்விக்கான.., "உட்கட்டமைப்புக்கு ரூ.16.27 லட்சம் கோடியை"..!!! தொங்கல் அதிமுகவின் தொங்கல் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம்.., "ஜெயலலிதாவால் தான் அன்றைக்கு பா.ம.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு அமைச்சர் பதவி கிடைத்தது. டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை பார்ப்பதற்கு முன்பு பா.ம.க. நிலைமை எப்படி இருந்தது. ஜெயலலிதாவை பார்த்த பின்பு அவருடைய சொத்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறியதை வைத்து பார்த்தால்...??? மன்னிக்கவும்!!! உங்களை போன்றவர்கள் கொள்ளை அடித்ததைதான்....... மீட்டு...., நிறைவு செய்யவேண்டும் போல உள்ளது??? இதனைத்தான் பழ. கருப்பையா அவர்களும் கூறுகிறார்கள்..!!! நக்கீரனில் வீடியோவை பார்க்கவில்லையா??? போங்க சார்............???