Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, நவம்பர் 2017 (12:33 IST)
மாற்றம் செய்த நாள் :21, நவம்பர் 2017 (12:33 IST)

அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்க மாணவர்களிடம் கட்டாய வசூல்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சென்ற ஆண்டு 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. அப்போது, மாணவர்களுக்கு லேப்டாப், வழங்குவதற்கு பள்ளி நிர்வாகம் ரூ 50 முதல் ரூ.250 வரை ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவ, மாணவியர்களிடம் ஆசிரியர் ஒருவர் வசூலிப்பது படத்துடன் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது. இதுபற்றி ரூ.250 பணம் கொடுத்து லேப்டாப் வாங்கிய மாணவன் ஆகாஷ் கூறியதாவது:

இப்பள்ளியில் படித்த 130 மாணவர்களிடம் ஏன் இவ்வளவு ரூபாய் வசூல் செய்கின்றீர்கள் என லேப்டாப் பெற்ற மாணவர்கள் பலர் கேட்டபோது, ஆசிரியர் வண்டி வாடகை என தெரிவித்தனர். வண்டிக்கான வாடகை என்றால் அனைத்து மாணவ மாணவிகளிடமும் ஒரே மாதிரியான தொகைதானே வசூலிக்கப்படவேண்டும். கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்த மாணவர்களிடம் ரூ.250, வரலாறு, புள்ளியியல் பாடப்பிரிவு படித்த மாணவர்களிடம் ரூ.50 என இருவிதமாக வசூலித்தனர். இதுகுறித்து நான் கேட்டதற்கு, ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு பலமணி நேரம் கழித்துதான் லேப்டாப் தந்தனர். பள்ளி நிர்வாகம் கேட்ட தொகையை செலுத்திய பின்புதான் லேப்டாப் வழங்கியுள்ளது என பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.  

இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் கூறியதாவது:

இப்பள்ளியில் கடந்த ஆண்டு படித்துச்சென்ற 130 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குபோது, லேப்டாப் வழங்கும் விழா மற்றும் வண்டி வாடகை போன்ற பள்ளி செலவுக்காக, அனைத்து மாணவர்களிடமும் ரூ.50 வசூல்செய்ய பெற்றோர் ஆசிரியர் கழக ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி வசூல்செய்தோம். மேலும், கம்ப்யூட்டர் சைன்ஸ் மற்றும் கம்யூட்டர் காமர்ஸ் மாணவர்களிடம் கடந்த ஆண்டு ப்ளஸ் டூ படிக்கும்போது அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.200-ஐ வசூலிக்க மறந்துவிட்டோம். அந்தத் தொகையை தற்போது வசூலித்து கருவூலத்தில் செலுத்தியிருக்கிறோம். லேப்டாப் வழங்குவதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. வேண்டாத சில நபர்கள் பள்ளி நிர்வாகத்தைப் பற்றி வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டதாக புகார் கூறினார்.

அரசு இலவசமாக வழங்கும் மடிக்கணினியை பெற, அதற்கான விழாவினை நடத்த மாணவர்களிடமே பள்ளி நிர்வாகம் பணம் வசூலித்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Syed Date :11/21/2017 4:32:30 PM
ஆதார் கார்டுக்கே பணம் பெற்று கொண்டு தான் கொடுத்தானுங்க.
Name : rajan Country : Bahrain Date :11/21/2017 3:09:31 PM
கம்ப்யூட்டர் சைன்ஸ் மற்றும் கம்யூட்டர் காமர்ஸ் மாணவர்களிடம் கடந்த ஆண்டு ப்ளஸ் டூ படிக்கும்போது அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.200-ஐ வசூலிக்க மறந்துவிட்டோம். அந்தத் தொகையை தற்போது வசூலித்து கருவூலத்தில் செலுத்தியிருக்கிறோம். அரசுதானே மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கொடுக்கும். இது புதுசா இருக்கே.