Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (20:28 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (20:36 IST)

ஆளுநர் ஆய்வு செய்யவில்லை : 
ஈபிஎஸ் புதுமையான விளக்கம்தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கடந்த 14ம் தேதி அன்று கோவையில் வளர்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். மாநில அரசு இருக்கும் போது ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்றும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரையிலும் நடைபெறாத செயல் என்றும், பல்வேறு அரசியல் தலைவர்களும் கொந்தளித்தார்கள்.

ஆளுநரின் ஆய்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன், ஆளுநரின் ஆய்வை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிரவைத்தார்.  அதிமுகவின் இப்படி ஆளுநரின் ஆய்வை பெரிதுபடுத்தாமல் இருந்ததால்,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை. கவலைப்பட தேவையில்லாதவர்கள் எல்லாம் கவலைப்படுகிறார்கள் என்று கமெண்ட் அடித்தார். 

பாஜகவினரின் சமாளிப்புகள் ஒரு பக்கம் இருக்க,  ஆளுநரின் ஆய்வு என்பது அதிகாரத்தை மீறிய செயல் என்று பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,  ஆளுநரின் ஆய்வு குறித்து ரொம்ப கூலாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு.  அரசின் நல்ல பல திட்டங்களை அதிகாரிகளிடம் ஆளுநர் அறிந்து கொண்டார்.  ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குறை கூறி வருகின்றன.  ஆளுநர் மீது குற்றம் சாட்டுகின்றன’’ என்று கூறினார்.

ஈபிஎஸ்சின் இந்த புதுமையான விளக்கத்தினால் அதிமுகவினரே அதிர்ந்து போயிருக்கின்றனர்.

- கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Js kumar Date :11/19/2017 7:38:08 PM
ஆளுநர் ஆய்வு செய்யாது அதிமுக விற்கு ஆராதனை செய்து பிரசாதம் உனக்கும் உங்களை பின்னுக்கு தள்லீ மானம்கெட்ட துணை முதல் (கொள்ளையர்) வருக்கும் கொடுத்தார்
Name : raj Country : United Arab Emirates Date :11/19/2017 10:08:21 AM
தவறு செய்ததால் சோதனை நடக்கிறது: ஈபிஎஸ் தவறு செய்ததால் சோதனை நடைபெறுகிறது. சில பேர் செய்த தவற்றினால் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. நான் இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். சிலரின் தவறு கட்சி தொண்டர்களை வேதனை அடையச்செய்துள்ளது’’என்று தெரிவித்தார்.
Name : தான்தோன்றிப்புலவர் Country : Taiwan, Province of China Date :11/19/2017 8:30:21 AM
"எப்பா, உன் தலையில் ஏறி .. .. கிறான்!" என்று அடுத்தவர்கள் பதறும்போது, "ஏவ் ... அவர் பூசுவது "சந்தனம்"தான்; நீயெல்லாம் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை; உன் வேலையைப் பார்!" என்று "சந்தனம்" தடவப்பட்ட ஒரு மொட்டைத்தலை மாங்காய்மடையன் காதில் அரளிப்பூ வைத்துக்கொண்டு கூறுவதுபோல் உள்ளது இவரது கூற்று! ... "வெள்ளரிக்காய இப்படியும் தின்பேன், இதுல தொட்டுக்கிட்டும் தின்பேன் .. உன் வேலையைப் பார்த்துகிட்டு போவியா .. " என்றவாறு தொட்டும் சாப்பிட்ட சிறுவனின் கூற்றை உள்ளடக்கிய பழைய கதை ஒன்றையும் நினைவுபடுத்துகிறது!