Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, நவம்பர் 2017 (9:30 IST)
மாற்றம் செய்த நாள் :18, நவம்பர் 2017 (9:30 IST)


ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென்று இரவு 9.55 மணிக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அலுவல் சார்ந்த அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.சோதனை குறித்து போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயா டிவி சீஇஓவும், இளவரசியின் மகனுமான விவேக்,

மாலை 4.30 மணிக்கு எனது இரண்டாவது அக்கா ஷகிலா விசாரணைக்கு அழைக்கப்பட்டார். வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்ற அவரை, அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். வாரண்ட் பிறப்பித்து ஜெ. வீட்டை சோதனையிட்டுள்ளனர். ஜெ. தங்கிய அறையை சோதனை செய்ய அனுமதி கேட்டனர். நாங்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை. மற்றப்படி வீட்டை முழுவதும் சோதனை செய்துள்ளனர். ஜெ.வுக்கு ஏகப்பட்ட பேர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு பென் டிரைவ், இரண்டு லேப்டாப் எடுத்துச் சென்றுள்ளனர். இதைத்தவிர வேறு ஒன்றையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இதுசம்மந்தமாக கண்டிப்பாக நாளையோ, நாளை மறுநாளோ விசாரணைக்கு கூப்பிடுவார்கள். எப்ப கூப்பிடுகிறார்களோ, அப்போது சென்று விளக்கம் அளிக்க தயார்.

உங்களை இங்கு கூப்பிட்டார்களா? நீங்களாக வந்தீர்களா?

எங்க அக்காவை இங்கு அழைத்து வந்தனர். என்னை இங்கு கூப்பிடவில்லை. நான் எங்க வீட்டு பெண்ணை இங்கு விட்டுவிட்டு வெளியே உட்காந்திருக்க முடியாது. 

சசிகலா தங்கியிருந்த அறையை பார்த்தார்களா?

அவங்க தங்கின அறையை பார்த்தார்கள் மற்றப்படி எல்லா அறைகளையும் பார்த்தார்கள். ஜெ. தங்கியிருந்த அறையை சோதனை செய்ய அனுமதி கேட்டனர். ஆனால் நாங்கள் அனுமதிக்கவில்லை. 

புரட்சித் தலைவி, புரட்சித் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரிகிறோம். இது அம்மா வாழ்ந்த வீடு, அம்மா மறைவுக்கு பிறகு இதனை கோவிலாக நினைக்கிறோம். ஆனால் அந்த கோவிலுக்கு இன்று ஒரு துன்பம் வந்துள்ளது. அந்த துன்பத்தை நம்ம யாருமே தட்டிக் கேட்கவில்லை. நம்ம எல்லோருமே கைய விரிச்சிட்டோம். தட்டிக்கேட்கலன்னு யாரை சொல்றீங்க?

இதில் நானும் ஒருத்தன், ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒருத்தங்க. எல்லாருமே ஒருத்தங்கதான். ஆகையால் இதனை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. 

உங்க வீட்டை சோதனை செய்தபோது, சோதனைக்கு ஒத்துக்கணுமுன்னு சொன்னீங்க. இப்ப முன்னாள் முதல்வர் வீட்டை சோதனை செய்திருக்கிறார்கள். இதில் அரசியல் பின்னணி இருக்கிறதா?

இதற்கு முன் நடந்த சோதனைப் பற்றி நான் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறேன். என்னிடம் என் சம்மந்தப்பட்ட கம்பெனிகள் பற்றி கேட்டார்கள். அதற்கு நான் பதில் அளித்தேன். இன்று ஜெ.வுக்கு வந்த கடிதங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக கேள்விகள் கேட்கப்படும். யாரை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் நான் போய் பதில் சொல்லப்போகிறேன். எங்க அக்காவை கூப்பிட்டால் அவர் சென்று பதில் சொல்லுவார். யார் சம்மந்தப்பட்டார்களோ அவர்கள் சென்று பதில் அளிப்பார்கள். பதில் சொன்னதற்கு பின்னர் வழக்கு எப்படி போகிறது, இதற்கு பின்னர் கேள்விகள் எப்படி கேட்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அரசியல் பின்னணி இருக்கிறதா என் சொல்ல முடியும. 

படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : pathman Country : United States Date :11/19/2017 10:18:47 PM
நடந்த சகல ஊழலுக்கும் ஜெயலலிதா தான் முதல் குற்றவாளி என்று நீதி மன்றமே சொன்ன பின்பும் அவரை புனிதராக நினைக்கும் முட்டாள் தமிழனாய் என்ன சொல்ல???
Name : Vanniya kula kshathriyan Country : India Date :11/18/2017 10:39:12 AM
வருமான வரி ஆய்வுக்கு ஒத்துழைக்காத இந்த நபரை கைது செய்ய வேண்டும் .மடியில் கணம் இல்லையெனில் வழியில் உனக்கு என் பயம் வருது ?! நீதிபதி குன்ஹா அம்மையார் குற்றவாளி என்று கூறி உள்ளார்கள் .ஜெயலலிதா ஒன்றும் புனிதர் அல்ல .!