Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (23:27 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (23:42 IST)போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! 


சசிகலாவின் குடும்பத்தினர் தவிர ஜெ.விடம் 20 ஆண்டுகளக  தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.  சோதனையை தொடர்ந்து பூங்குன்றனிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.  இதன் பின்னர் போயஸ் கார்டனில் ஜெ.வாழ்ந்த வேதா இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கட்சி துவங்க மக்கள் அனுப்பிய பணத்தை 
திருப்பி அனுப்பும் கமல்!


நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதும், ரசிகர்களும், பொதுமக்களும் கமல்ஹாசனுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள கமல்ஹாசன் விரும்பவில்லை. தனக்கு வந்துள்ள பணத்தை யார் - யார் அனுப் பினார்களோ, அவர்களுக்கே திருப்பி அனுப்ப அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நற்பணி மன்றத்தினரின்  மற்றும் மக்கள் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை: 
உறுதி செய்த உயர்நீதிமன்றம்!
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உட்பட 4பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் 
வீர வணக்க விழா! வீரமணி எதிர்ப்பு


காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கொலை பாதகன் நாதுராம் விநாயக் கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவா? தமிழக அரசு இதை அனுமதிக்கிறதா? சட்டம் என்ன செய்கிறது? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக் காடாக்கி மதவெறிக் காய்ச்சல் மக்களின் நல்லிணக்கத்தைப் பாழ்ப்படுத்த அனுமதிக்கலாமா? உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். 

22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு 
திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
 அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் - பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட -  கண்டன ஆர்ப்பாட்டம் 22-11-2017 புதன் அன்று நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த வியாபாரி வரதராஜனிடம் 30 லட்சம் பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து துறையூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகைப்பழக்கத்தை நிறுத்தும் சாப்ட்வேர்!
 சென்னைப்பெண்ணை பாராட்டும் போர்ப்ஸ்!


அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த அக்சயா சண்முகம் புகைப்பழகத்தில் ஒருவர் தன்னை விடுவித்து கொள்வதற்கான அதிநவீன சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார்.  சிகரெட் புகைக்க வேண்டும் என்று நினைத்தவுடன் எதற்காக அந்த எண்ணம் தோன்றியது என்பதை அந்த சாப்ட்வேர் சொல்லி விடும். அது மட்டுமின்றி புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் அந்த சாப்ட்வேர் சொல்லும். இதனால் நாளடைவில் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற முடியும் என்று கூறும் அக்சயா, இந்த சாப்ட்வேரை சந்தையில் அறிமுகப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதை பாராட்டி போர்ப்ஸ் பத்திரிகை அக்சயாவை இளம் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்வு செய்து பாராட்டி உள்ளது.

தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தினகரனின் தங்கை சீதளாதேவிக்கும். அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனுக்கும் சி.பி.ஐ. கோர்ட் வழங்கிய சிறை தண்டனையையும் அபராத தொகையையும் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பு டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

சோதனையில் 150 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் - ஆய்வு!

சசிகலா தரப்பினரின் 140 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில்  150 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கம்ப்யூட்டர்களில் ஏராளமான ஆவணங்கள், வரவு, செலவு கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பலருக்கு விவேக் வட்டிக்கும் கொடுத்து வந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. சில கம்ப்யூட்டர்களில் ரகசிய குறியீட்டுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

விஜய் மல்லையாவின் 
வங்கி கணக்குகளை முடக்க  உத்தரவு

அபராத தொகை செலுத்த தவறியதால் தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்கு பரிவர்த்தனை கணக்கு உள்ளிட்டவற்றை முடக்குமாற சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்(செபி) உத்தரவிட்டுள்ளது. 


தொகுப்பு: கதிரவன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :