Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (21:23 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (21:43 IST)


 டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி 
வெளியிட்ட நூல்!



 துபாயில் நடிகை ஹேமமாலினியின் ’டிரீம் கேர்ள்’ என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார்.  ஷார்ஜாவில் நடந்த 36-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஹேமமாலினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விபுல் தனது தலைமையுரையில், இங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு நடிகை ஹேமமாலினி வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது இந்தியாவின் 70-வது ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஹேமமாலினி தனது டிரீம் கேர்ள்  என்ற நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ‘’பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களது விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பிள்ளைகளை படிக்க வைக்க கட்டாயமாக்க கூடாது.

மேலும் மதுரா தொகுதியில் பொதுமக்களுக்காக கழிவறைகளை கட்டியுள்ளேன். சில நாட்கள் கழித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தேன். அந்த கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது கழிவறைகளை பயன்படுத்தி காலைக் கடன்களை செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. இயற்கையாக காலைக் கடன்களை செலுத்தி பழக்கப்பட்ட எங்களுக்கு, இதனால் காலைக் கடனை செலுத்த கழிவறைகளில் முடியவில்லை என தெரிவித்தனர்’’ என்று கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதி காவலர் ராமமூர்த்தி, வர்த்தக பிரமுகர் சையது அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


                -  இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :