Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (20:20 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (20:36 IST)


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் 
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு
 உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கை:  ’’ முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதைத் தடுக்க மறைமுகமாக முட்டுக்கட்டைப் போடப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப்  பகுதியில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதை தமிழக அரசு தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு முடிவு செய்திருப்பதை எதிர்த்து சில தனி நபர்கள் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அவ்வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று கூறி வந்த நிலையில்  தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் எம்.எஸ்.நம்பியார், பி.எஸ்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பாயம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன.

வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ள பகுதிக்கு அருகில் புலிகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது.  அந்த இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டால் புலிகள் சரணாலயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது இந்த வழக்கைத் தொடர்ந்த தனிநபர்களின் வாதம் ஆகும். மாறாக, நீர்த்தேக்கப் பகுதிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்பது தமிழக அரசின் வாதமாகும். ஆனால், தமிழகத்தின் வாதங்களைக் கருத்தில் கொள்ளாத தீர்ப்பாய உறுப்பினர்கள், புலிகள் சரணாலயம் குறித்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். இது முல்லைப் பெரியாறு அணையின்  நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் தமிழகத்தின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்களாக இருந்த நீதிபதிகள் சொக்கலிங்கம், ஜோதிமணி ஆகியோரும் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளிப்பதற்கு மறுத்து விட்டனர். இதற்கு காரணம் அவர்கள் கட்டுமானப் பணிகளை புலிகள் சரணாலயத்துடன் இணைத்துப் பார்க்காமல் முல்லைப்பெரியாறு அணையுடன் இணைத்துப் பார்த்தனர் என்பது தான். இதற்கெல்லாம் மேலாக இத்தீர்ப்பை வழங்கியவர்களில் ஒருவரான எம்.எஸ் நம்பியார் கேரளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி என்பதும், மற்றொரு தொழில்நுட்ப உறுப்பினரான பி.எஸ்.ராவ் நேற்று முன்நாள் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் கேரளத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டிருந்த காலத்தில் அதன் நீர்த்தேக்கப் பகுதிகள் காலியாக கிடந்தன. இதைப் பயன்படுத்தி அப்பகுதிகளில் ஏராளமான விடுதிகளை கேரளம் கட்டிக்கொண்டது. அணையின் நீர்மட்டம் 156 அடியாக உயர்த்தப்பட்டால் அந்த விடுதிகள் தண்ணீரில் மூழ்கி விடும். அதைத் தடுப்பதற்காகவே நீர்மட்டம் உயர்த்தப்பட்டால்  அணை உடைந்து கேரளத்தின் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்ற வதந்தியைப் பரப்பி தேவையற்ற பதற்றத்தை கேரள அரசு ஏற்படுத்தியது. ஆனால், முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் ஆதாரத்துடன் கூறிவிட்டதால் கேரளத்தின் சதி முறியடிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை காரணம் காட்டி, நீர்த்தேக்கப் பகுதிகளில் வாகன நிறுத்தத்தை கேரள அரசு அமைத்து விட்டால், அவை மூழ்கி விடும் என்பதைக் காரணம் காட்டியே அணையின் நீர்மட்டத்தை 156 அடியாக உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்தை கேரள அரசு தயாரித்த நாளில் இருந்தே இதை சுட்டிக்காட்டி இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால், தமிழக அரசு விழிப்புடன் இருப்பதற்கு பதிலாக அலட்சியத்துடன் இருந்ததால் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகம் நடத்திய 35 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். அந்த வெற்றியை பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குலைத்து விடக்கூடாது. எனவே,  பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும்  பணிகளை வல்லுனர் குழுவின் மூலம் தமிழக அரசு விரைவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :