Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
தமிழகம்
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
மீண்டும் கெயில்.... போராட தயாராகும் விவசாயிகள்...! (படங்கள்)
 ................................................................
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 ................................................................
குமரி வருகிறார் நரேந்திரமோடி
 ................................................................
மீனவ மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி
 ................................................................
ராஜஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தனிப்படை
 ................................................................
கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை
 ................................................................
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
 ................................................................
தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல்
 ................................................................
நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (18:44 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (19:8 IST)

22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு 
திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர  அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் - பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட -  கண்டன ஆர்ப்பாட்டம் 22-11-2017 புதன் அன்று நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் சர்க்கரை கிலோ விலை தற்போது விற்கப்படும் 13 ரூபாய் 50 காசில் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்படும் என்று குதிரை பேர அரசு அறிவித்திருப்பது ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பது தான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம். இன்று தமிழகத்தில் பட்டினி சாவுகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் அமல்படுத்திய ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் என்பதை நாடே அறியும். இதனால்தான் உச்சநீதிமன்றமே திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திய பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முதலில் எதிர்ப்பதாகவே முடிவு எடுத்தது. பிறகு தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உணவு அமைச்சர் திரு கே.வி.தாமஸ் அவர்கள், “சட்டம் இயற்றப்படுவதால் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடுகள் குறைக்கப்படாது. குறிப்பாக அதே விலையில் வழங்கப்படும்” என்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதோடு மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் அந்த உறுதிமொழியை அளித்தார். இந்த உறுதிமொழிக்குப் பிறகுதான் தி.மு.க. உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை ஆதரித்தது.

நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரை காப்பாற்றியது என்பதை மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாது. தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புக் கொண்ட குதிரை பேர அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாடாளுமன்றத்தில் மத்திய உணவு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி, தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது. கடமையைச் செய்யத் தவறி, பொது விநியோகத்திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மான்யங்களை எல்லாம் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் குதிரை பேர அரசு இன்றைக்கு திடீரென்று சர்க்கரை விலையை இரு மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசுக்குப் அஞ்சி நடுங்கி ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு போன்றவற்றால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை எப்படி தட்டிக் கேட்காமல் அமைதி காத்ததோ அதே போல் இப்போது சர்க்கரை மான்யம் ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடவே இல்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மான்யத்திற்காக சென்ற வருடம் நிதி ஒதுக்காத போதும் உணவுத்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ வாய் திறக்கவில்லை. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு கையெழுத்துப் போட்ட குதிரை பேர அரசு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசு மான்யத்தை விட்டுக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதித்து விட்டது என்பது தான் உண்மை. அதனால்தான் இன்றைக்கு சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நாளடைவில் பொது விநியோகத் திட்டத்தையே ரத்து செய்வதற்கு கூட இந்த குதிரை பேர அரசு சம்மதித்து அனைத்து தரப்பு மக்களையும் இருட்டில் தள்ள தயங்காது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆகவே ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விஷம் போன்ற விலை உயர்வை அறிவித்துள்ள குதிரைபேர அரசை கண்டித்தும்,  பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மான்யங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு;  கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட “கண்டன ஆர்ப்பாட்டம்” வருகின்ற  22-11-2017 புதன் அன்று காலை 10.00 மணி அளவில் தி.மு.க. சார்பில்  அனைத்து ரேசன் கடைகள் முன்பும்  நடைபெறும்.

மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி,  தொண்டர் அணி, நெசவாளர் அணி,  ஆதிதிராவிடர் நலக்குழு, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, ஆங்காங்கே உள்ள மக்களை அரவணைத்துக் கொண்டு இந்த கண்டன ஆர்பாட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :