Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக; ஓய்வூதியர்கள் கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் உத்தரவு! காற்றில் பறக்கும் அவலம்...
 ................................................................
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, நவம்பர் 2017 (11:58 IST)
மாற்றம் செய்த நாள் :17, நவம்பர் 2017 (11:58 IST)

திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக
42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!

தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் மிகவும் முக்கியமானது திருச்சி மாநகரம். இதில் விமான சேவை என்பது இந்தியாவின் அதிக இலாபம் ஈட்டும் விமானநிலையங்களில் திருச்சி விமான நிலையமும் முக்கியமானது.திருச்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நிதி ஒதுக்கியும் மாவட்ட மற்றும் மாநில அரசு அனுமதி தாராமல் கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள 42 வீடுகளை இடித்து அகற்ற அதிகாரிகள் நோட்டீசுகளை வழங்கினார்கள்.

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை (ரன்வே) தற்போது 8 ஆயிரத்து 160 அடி நீளம் உள்ளது. இதனை ‘போயிங்’ ரக விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து இறங்கும் வகையில், 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் ரூ.900 கோடியில் புதிய முனையம் கட்டுமான பணியும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கும்படி விமான நிலைய ஆணையம் மாநில அரசிடம் கேட்டு இருந்தது.

இந்த 630 ஏக்கர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், ராணுவத்திற்கு சொந்தமான நிலங்கள் என சுமார் 300 ஏக்கர் நிலம் போக மீதம் உள்ள 330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலங்கள் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திருவெறும்பூர் தாலுகாவை சேர்ந்த கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி பகுதிகளிலும், விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சி கிழக்கு தாலுகாவில் அடங்கிய பட்டத்தம்மாள் தெரு, ஜே.கே.நகர் அருகில் உள்ள பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதிகளிலும் அமைந்துள்ளன. விவசாய நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் மற்றும் வீடுகள் இவற்றில் உள்ளன.நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் சர்வே எண்ணுடன் ஏற்கனவே அரசு அறிவிப்பாக வெளியிடப்பட்டு உள்ளன. கிழக்குறிச்சி, பட்டத்தம்மாள் தெரு பகுதியில் ஏற்கனவே அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பூர்வாங்க பணிகளை செய்வதற்காக சென்றபோது, அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் பாரதிநகர் விஸ்தரிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதி வீடுகளில் நோட்டீஸ் வழங்குவதற்காக திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் தலைமையில் வருவாய்த்துறை, நில அளவை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரு குழுவாக வந்தனர். இவர்களது பாதுகாப்புக்காக பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) சச்சிதானந்தம் தலைமையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த குழுவினர் கையகப்படுத்தப்பட உள்ள நிலப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் அவற்றுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்த கடைகள், கார் பழுது பார்க்கும் பட்டறையில் வசிப்பவர்களிடம் நோட்டீஸ்களை வழங்கினார்கள். அந்த நோட்டீஸ்களில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக உங்கள் இடம் தேவைப்படுகிறது.

இதற்கு ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை பெரும்பாலானவர்கள் வாங்குவதற்கு மறுத்தனர். வாக்குவாதம் செய்த பின்னர் பெற்றுக்கொண்டனர். சில வீடுகளின் வாசலில் நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினார்கள். மொத்தம் 42 வீடுகளுக்கு நோட்டீசு வினியோகம் செய்யப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட உள்ளன.

நோட்டீசு வழங்கப்பட்ட வீடுகளின் வெளிப்புற பகுதி, வீட்டின் கட்டுமான பரப்பின் உள்பகுதி ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். வீட்டில் உள்ள பொருட்களின் விவரங்களையும் குறித்து வைத்துக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும் மதிப்பீடு செய்வதற்காக அளவு எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் தொடங்கிய பணி மாலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

- ஜெ.டி.ஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :