Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
தமிழகம்
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (23:21 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (23:21 IST)


நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க! கி.வீரமணி 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் முக்கிய பகுதியைப் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்று சிபிஅய் விசாரணை அதிகாரி தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரவேற்கதக்கது. இதன்மூலம் பேரறிவாளன் நிரபராதி என்பது வெளிப்படை. அவரை உடனே விடுதலை செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன் உட்பட 7 பேர், கடந்த 25ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடி வருகின்றனர். ஆயுள் தண்டனை குறைப்பு 18.2.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை சி.பி.அய் அதிகாரியாக பணியாற்றி பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் அவர்கள் தெரிவித்த தகவல் முக்கியமானது.

ஒரு தலைப்பட்சமாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்தப்பட்டது உண்மை. பேரறிவாளனின்  வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று தமக்கு ஏற்பட்ட மன உறுத்தலை சிபிஅய் அதிகாரி தியாகராஜன் செய்தியாளர்களிடம் ஒப்புக்கொண்டார்! தன்னால் வாங்கிக்கொடுக்கப்பட்ட பேட்டரி எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படப் போகிறது என்பது தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நாங்கள் பதிவு செய்யவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதுபோலவே உச்சநீதிமன்றத்தில் வழக்கினை விசாரித்த ஜஸ்டிஸ் திரு.கே.டி.தாமஸ் அவர்களே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன என்பதைத் தனது ஓய்வுக்குப் பின் ஒப்புக்கொண்டாரே!

 உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவில் (Special leave petition) இந்தக் காரணங்களைக் காட்டி, தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

உச்சநீதிமன்றம்  ஏற்பு

மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவைப்படாது. இந்த நிலையில் பேரறிவாளன் முழு விடுதலை பெறுவதற்கு முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார் என்பது வெளிப்படையாகிவிட்டது.

மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு  தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். மாநில அரசும், மத்திய அரசும் வேறு பிரச்சினைகளை இதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் பேரறிவாளனை விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.’’




 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S.Govinarajan Date :11/14/2017 11:46:05 PM
வேலிக்குஓணான் சாட்சி சொல்ல வருகிறது.