Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (18:7 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (18:9 IST)


தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 
அமைச்சர்களை தவிர்த்துவிட்டு 
ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை!தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார்.  உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை  தவிர்த்துவிட்டு ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை கோவை வந்தார். பாரதியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் இன்று பிற்பகல் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில்  கோவை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் , மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் , மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட 12 முக்கிய அதிகாரிகள் முக்கிய கோப்புகளுடன் கலந்து கொண்டனர்.  கோவையில் நடைபெற்ற திட்டங்கள் , செயல்படுத்தப்படும் திட்டங்கள் , நடைபெற உள்ள திட்டங்கள் என அனைத்து திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம்  தமிழக ஆளுநர் கேட்டறிந்தார். முக்கிய கோப்புகளுடன் கலந்து கொண்ட அதிகாரிகள் ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

வழக்கமாக இது போன்ற கூட்டங்களுக்கு உள்ளூர் அமைச்சர்கள் அழைக்கப்படும் நிலையில் தமிழக ஆளுநர்  அதிகாரிகளிடம் நடத்திய கூட்டத்திற்கு   ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதே போன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கோவையில் இருந்தாலும் அவரும் இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை . தமிழக ஆளுநர்கள் இதுவரை இது  போன்ற கூட்டங்கள நடத்தாத நிலையில் கூட்டத்தில் இன்றைய கூட்டம் எப்படி நடத்தப்படுகின்றது என்பது புரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தமிழக ஆளுநரின் இது போன்ற நடவடிக்கையானது  மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக இருக்கின்றது என அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் அரசு நிர்வாகங்களில் நேரடியாக தலையிடுவதை போல , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அரசு நிர்வாகங்களில் நேரடியாக தலையிடுவதாகவும் , இதன்  முதல் நடவடிக்கையாக கோவையில் அதிகாரிகளுடன்   நேரடியாக ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தமிழக அரசியல் வரலாற்றில்  இதுவரை  இல்லாத வகையில்  மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் நேரடியாக ஆலோசனை நடத்தி இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.’

- அருள் 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : S.v.rangarajan Country : Indonesia Date :11/15/2017 6:59:27 AM
நல்ல மாற்றம் , அரசியல் வாதிகள் தலையீடு தவிர்க்க வேண்டும்
Name : kumar Date :11/14/2017 6:29:45 PM
தவறு . அவர் அரசியலமைப்பு சட்ட தலைவர் . மக்கள் பிரதிநிதி இல்லை. பாண்டி போல் பா ஜா க ஆளுநரின் துணை யோடு ஆட்சி விவகாரங்களில் தலையிட்டால் குழப்பம் தான் மிஞ்சும் . ஒருவேளை கவர்னர் ஆட்சி வர முஸ்தீபோ ?