Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, நவம்பர் 2017 (16:50 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (16:50 IST)


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஜ்மல் ஓய்வுபெற்றார்!

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.


 
பாக். அணியைச் சேர்ந்த அஜ்மலின் பந்துவீச்சு சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், சர்வதேச கிரிக்கெட் வாரியம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தடை நீங்கி திரும்பியபோதும் அவரால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொள்ள முடியவில்லை. மேலும், அவர் மீதான தடைவிதிப்பு நீக்கப்பட்ட பின்பு இரண்டு போட்டிகளில் மட்டுமே களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழையும்போது அவருக்கு வயது 29. மிகத்தாமதமாக அணியில் இடம் பிடித்தாலும், சர்வதேச அளவில் மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் இடம்பிடித்தார். 35 டெஸ்ட் போட்டிகளில் 178  விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 113 ஆட்டங்களில் 184 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 64 ஆட்டங்களில் 85 விக்கெட்டுகளும் எடுத்துள்ளதே அவரது தரத்திற்கான சான்று. 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய அவர், அந்த அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களுக்கான அந்தஸ்த்தையும் பெற்றார்.

தற்போது, சயீத் அஜ்மல் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ள நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :