Add1
logo
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை! || ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்! || இன்றைய (18.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || பிரிண்டர் விலை ரூ.10000 தான்! பிரதி எடுத்த போலி கரன்ஸியோ ரூ.65 லட்சம்! -சிக்கிய நான்கு கில்லாடிகள்! || பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு! || நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, நவம்பர் 2017 (15:48 IST)
மாற்றம் செய்த நாள் :14, நவம்பர் 2017 (13:52 IST)

ஜெயலலிதாவை உத்தமராக்கும் ரெய்டு
முயற்சிகள் ஜெயிக்குமா?

சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து நடத்தப்பட்ட ரெய்டுகளில் மீடியாக்களின் ஒருதலைப்பட்சமான, ஓரவஞ்சனையான செய்திகள் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காலையில் ஒரு டீ மாஸ்டர், டீயை ஆற்றுவதை விட்டுவிட்டு, "பேப்பர் படிக்கப்படிக்க நமக்குத்தான் பிரஷர் ஏறுது. பிரஷர் மாத்திரை போடனும்போல" என்கிறார்.

அந்த அளவுக்கு ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, தங்கக் குவியல், வைரக்குவியல் என்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை பரப்புகின்றன.

இதில் உண்மை இருக்கிறதா என்றால், எல்லா செய்திகளுமே கூறப்படுகிறது, நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது என்று பட்டுக்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத பத்திரிகை மொழியிலேயே இருக்கின்றன.

எல்லோரும் செய்திகள் வெளியிடும்போது, இந்த சொத்துக்கள் அனைத்தும் சசிகலா குடும்பத்தினரின் சொத்துக்களைப் போலவே சித்தரிக்கின்றன. இந்தச் சொத்துக்களை குவித்துவிட்டு, நம்பர் ஒன் குற்றவாளியாக தண்டனை பெற்ற ஜெயலலிதாவை வசதியாக ஒதுக்குகின்றன.

குற்றவாளியாக செத்துப்போன ஜெயலலிதாவை உத்தமியாகக் காட்டும் வேலையாகவே இதை நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா கும்பல் இந்த சொத்துக்களை குவித்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடந்த ஐந்து நாட்களாக ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால், மீடியாக்களின் இந்த ஒருதலைப்பட்சமான செய்திகள் ஜெயலலிதாவுக்கு புனித பிம்பத்தை உருவாக்க உதவுமா? அல்லது மீடியாக்களை அம்பலப்படுத்த உதவுமா என்பதே இப்போது தொக்கி நிற்கும் கேள்விகள்.

வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டவர்களை மிகப்பெரிய ஊழல் பேர்வழிகளைப் போல ஊதுகிறார்கள். ஆனால், மக்களையும் மீடியாக்களையும் பட்டவர்த்தனமாக முட்டாள்களாக்கி, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டனை கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவை இரும்புப்பெண்மணி என்று பில்டப் செய்கிறார்கள். அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க இன்னமும் முயற்சி செய்கிறார்கள்.

மீடியாக்களின் இந்த முயற்சி எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்பது போகபோகத்தான் தெரியும்.

- ஆதனூர் சோழன்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : Vijayalakshmi Country : Australia Date :11/15/2017 4:42:47 PM
மிக சரியாக சொன்னிர்கள். போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி மிதிப்பதை கேவலமாக நினைத்த ஊரில் ஜெயிலுக்கு போனதையும், போக போவதையும் பெருமையாக சொல்லி கொள்ளும் ஒரு தராதரமற்ற கூட்டம் உருவாகியிருக்கிறது என்றால் அதற்க்கு ஜெயாதான் காரணம். தான் செய்த வூழலுக்கு சசியை கேடயமாக பயன்படுத்த நினைத்தார். நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்தது. என்ன கொஞ்சம் அதிகமாக பாய்ந்து விட்டது.
Name : karikalan1 Country : United Kingdom Date :11/15/2017 12:54:01 PM
மறைந்த நம் முன்னாள் முதல்வர் மீது எல்லா பழியையும் போட்டு குற்றவாளிகள் தப்பிக்க உதவுவதும் குற்றமே....அம்மாவை கடைசிவரை உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ அண்டவிடாமல் தனிமை படுத்தி வைத்து திடடமிட பட்டு இந்த சொத்து குவிப்பு நடந்திருக்கிறது....மக்களுக்கு எல்லா உண்மையும் விளங்கும்...யாரும் மறைந்த முன்னாள் முதல்வர் தனித்து இவளவு சொத்துக்களும் குவித்திருப்பார் என்று நம்ப மாடடார்கள்....கூடா நடபு கேடடா முடியும் என்பதட்கு நம் முன்னாள் முதல்வர் ஒரு உதாரணம்....அவர் மீது இன்னும் அனுதாபம் Makkal மத்தியில் அதிகரிக்கும்....இந்த விசாரணை தொடர்ந்து நடத்தி முழு உண்மையும் வெளியில் கொண்டுவர வேண்டும்....
Name : karikalan1 Country : United Kingdom Date :11/15/2017 12:53:37 PM
மறைந்த நம் முன்னாள் முதல்வர் மீது எல்லா பழியையும் போட்டு குற்றவாளிகள் தப்பிக்க உதவுவதும் குற்றமே....அம்மாவை கடைசிவரை உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ அண்டவிடாமல் தனிமை படுத்தி வைத்து திடடமிட பட்டு இந்த சொத்து குவிப்பு நடந்திருக்கிறது....மக்களுக்கு எல்லா உண்மையும் விளங்கும்...யாரும் மறைந்த முன்னாள் முதல்வர் தனித்து இவளவு சொத்துக்களும் குவித்திருப்பார் என்று நம்ப மாடடார்கள்....கூடா நடபு கேடடா முடியும் என்பதட்கு நம் முன்னாள் முதல்வர் ஒரு உதாரணம்....அவர் மீது இன்னும் அனுதாபம் Makkal மத்தியில் அதிகரிக்கும்....இந்த விசாரணை தொடர்ந்து நடத்தி முழு உண்மையும் வெளியில் கொண்டுவர வேண்டும்....
Name : ebenezer Date :11/15/2017 12:55:18 AM
இவர்கள் செய்தது எல்லாம் அயோக்கிய தனம் என்று இப்போது தெரிகிறது,இருந்தும் அவர்களுக்கு உதவி செய்வதும்,அவர்களுக்கா பரிந்து பேசுகிறவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்.
Name : anonymous Date :11/14/2017 4:13:08 PM
( ஆண்களையும் பெண்களையும் கொண்ட ) இந்த பெரிய கொள்ளை கும்பலின் கட்டுப்பாட்டில் வாழ்ந்திருந்த ஜெ யின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று ஊகித்துகொள்ள முடிகிறது. தனது பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பல நோய்களாலும் துன்பப்பட்டு, முறையான சிகிச்சை கூட மறுக்கப்பட்டு கொத்தடிமை போல் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஒரு குடும்பத்திலுள்ள இத்தனை பேர் (குழந்தை முதல் பெரியவர் வரை)ஒன்று சேர்ந்து செய்த குற்றங்களை இறந்து போன ஒரு ஆதரவற்ற பெண்மணியின் தலையில் சுமத்தி தப்பிக்க முயற்சிப்பது கடவுளுக்கே அடுக்காது. கணவனை இழந்து நின்ற பெண்ணுக்கும் குழந்தைகளுக்கு இரக்கம்காட்டி ஆதரித்ததற்கு தண்டனை போல. என்ன பழி சுமத்தினாலும் இறந்தவர் வந்து எதுவும் நிரூபிக்க போவதில்லை. அதனால் தைரியமாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்குரிய ஆள்பலமும் அரசியல் பணபலமும் தாராளமாக இருக்கிறதே. ஆனால் இதெல்லாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு பொது மக்களுக்கு அறிவு இருக்கிறது.
Name : Thiru Country : United States Date :11/14/2017 3:15:25 AM
சூப்பர் ....இது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி
Name : kumar Country : India Date :11/13/2017 6:54:17 PM
அம்மா குற்றவாளி தான் . உயிரோடில்லை. வழக்கில் ஏற்கனவே A-2,3 ஆக இருந்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும் .30 வருடங்களுக்கு மேல் சுகம் அனுபவித்தவர்களுக்கு பாவத்தில் பங்குமுண்டு ; தண்டனையும் உண்டு .