Add1
logo
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு 53 பவுன் நகை கொள்ளை! || ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து நடிகர் விஷால்! || இன்றைய (18.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || பிரிண்டர் விலை ரூ.10000 தான்! பிரதி எடுத்த போலி கரன்ஸியோ ரூ.65 லட்சம்! -சிக்கிய நான்கு கில்லாடிகள்! || பென்னிகுவிக்கு இங்கிலாந்திலும், தேனியிலும் சிலை அமைக்க மு.க.ஸ்டாலின் ஆதரவு! || நடிகை ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி || வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞரை கொடூரமாக தாக்கிய எஸ்.ஐ., (வீடியோ) || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! ||
சிறப்பு செய்திகள்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த வெளிநாட்டுக்
 ................................................................
நடிக்காததால் வென்ற நடிகன்!
 ................................................................
குருமூர்த்தி குழப்புகிறாரா? குழம்பிப்போனாரா?
 ................................................................
ஆளு தெரியும்; ஆனா.. பேரு தெரியாது!
 ................................................................
ஆளுகிறான் தமிழன்!
 ................................................................
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி!
 ................................................................
‘வைரமுத்துவை விடவே மாட்டோம்!’
 ................................................................
நமக்குப் பொங்கல்... ஆந்திரா, கர்நாடகாவில் என்ன?
 ................................................................
பனியோ, புகையோ
 ................................................................
கண் கூசும் நெடுஞ்சாலைகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, நவம்பர் 2017 (13:56 IST)
மாற்றம் செய்த நாள் :13, நவம்பர் 2017 (13:56 IST)

நண்பன் விஜயின்  நிஜ  உருவம்

'நண்பன்' திரைப்படத்தில் வரும் 'கொசாக்சி பசப்புகழ்'  விஜய் கதாபாத்திரம், பாடப்  புத்தகங்களைத் தாண்டிய செயல்முறை அறிவு உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். விழுந்து  விழுந்து படிக்காமல், விரும்பிப் புரிந்து படித்து பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதாக  இருக்கும்.  இதன்  உண்மை உருவாக உள்ளவர், தன்னை "தகுதியற்றவர்" எனக்கூறிய மக்களை 18 வருட உழைப்பினால் தன்னை "தரமான கண்டுபிடிப்பாளர்" எனக்கூற வைத்தவர். ஏழை மக்களின் வாழ்வை,  தனது  கண்டுபிடிப்புகளால் எளிமையாக்கியவர், 140 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர், அவர்தான் அஸ்ஸாம் மாநிலம்  லக்ஷ்மிபூரை சேர்ந்த உத்தப் பராலி.

சிறுவயது முதலே அறிவுமிக்கவராக விளங்கிய இவர் இரண்டுமுறை டபுள் ப்ரோமோஷன் (1ஆம் வகுப்பிலிருந்து -3ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பிலிருந்து -8ஆம் வகுப்பு) வாங்கியுள்ளார். 14 வயதிலேயே கல்லூரிப்  படிப்பைத்  தொடங்கியவர் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தினார். பாலித்தீன் தயாரிக்கும் தொழில் தொடங்க நினைத்த இவர் அந்த சாதனத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்  என்றவுடன் அதை தானே உருவாக்க முடிவு செய்தார். அதன்படியே அந்த சாதனத்தை ரூ.67,000 க்கு உருவாக்கினார் இதுவே இவரின் தொடக்கம். அதன்பின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 1995ல் தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆளான தனது சகோதரர் இறந்தபின்பு தனது கண்டுபிடிப்புகளை விற்று அதில் வரும் வருவாய் மூலம் குடும்பத்தை நடத்தினார்.

குறைந்த செலவுடைய உள்ளூர் பொருட்களை வைத்து கண்டுபிடிக்கப்படும் புதுமையான கண்டுபிடிப்புகள் "ஜுகாட்" எனப்படும். இதற்கு, 'அறிவுப்பூர்வமான மேம்பாடு' என பொருள். இன்றுவரை  140 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ள இந்த 55 வயது அறிஞர் அதை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. மாறாக, தனது  கண்டுபிடிப்புகளை விவசாயத்திற்காகவும், சிறு,குறு தொழில்களுக்காகவும் , மாற்றுத்திறனாளிகளுக்காகவும் உருவாக்கினார்.  நாசா டெக் (NASA Tech) நடத்திய 'கிரியேட் தி ஃபியூட்சர் டிசைன்' (CREATE THE FUTURE DESIGN) போட்டியில் 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் முதல் பரிசை பெற்றுள்ளார். இவரின் கண்டுபிடிப்புகளில் ஒன்றான மாதுளை பழ முத்துக்களை பிரிக்கும் சாதனம்,  இதுவரை உலகிலேயே யாரும் செய்யாததாக இருக்கிறது. இது, ஒரு மணிநேரத்திற்கு 55கிலோ மாதுளம் பழத்தை உரிக்கும். மேலும் இவர் கண்டுபிடித்த  அரிசி மகசூலை இரட்டிப்பாக்கும் நெல் விதை இயந்திரத்தை 'உட்சாப்' இயந்திரம் என பெயரிட்டு விவசாயிகள் மத்தியில் அறிமுகம் செய்ய உள்ளது அசாம் மாநில அரசு. இவர் கான்க்ரீட் செங்கல் உருவாக்கும் இயந்திரம், பாக்குக் கொட்டை  பிரிக்கும்  இயந்திரம் போன்ற இயந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். இவர் கண்டுபிடித்த 'அரிசியை மாவாக்கும் இயந்திரத்தை'த்தான்  இவரது  கிராமமே   பயன்படுத்துகிறது.  

இதையெல்லாம் பார்க்கும்பொழுது நமக்கு நினைவுக்கு வருகிறார் ஒருவர்.  பெரிய படிப்புகளெல்லாம் இல்லாதவர், தனக்கு தானே ஆசிரியராக இருந்து புத்தகங்கள் மூலமே அறிவை வளர்த்துக்கொண்டவர், தனது பல கண்டுபிடிப்புகளால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே  ஆங்கிலேய விஞ்ஞானிகளுக்கு இணையாக மதிக்கப்பட்டவர், அவர் பெயர் கோபால்சாமி துரைசாமி, சுருக்கமாக ஜி.டி.நாயுடு.  உலகமே அவரை பாராட்டிய போது அப்போதிருந்த ஆங்கிலேய அரசு ஒரு இந்தியர் இத்தனை பெருமைகள் அடைவதை விரும்பவில்லை. இருந்தாலும் மக்களின் வாழ்க்கைக்கான  அவரது அறிவியல் பங்களிப்புகளை மறைக்கவும் முடியவில்லை. அப்படிப்பட்ட  விஞ்ஞானியின் நவீன மாதிரியாக உத்தப் பராலி உள்ளார்.  

கமல் குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :