Add1
logo
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் || தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்) || டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்) || விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்) || கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம் || முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ் || பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! || தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (23:31 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (23:31 IST)


புதுச்சேரி: பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை



புதுச்சேரி முதலியார்பேட்டை உடையார்தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). செல்வம் இன்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றது.

இதில் பலத்த காயமடைந்து விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள முதலியார்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சீர்காழி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொலை செய்யபட்ட பாமக பிரமுகர் மூர்த்தி கொலை வழக்கில், செல்வம் முக்கிய குற்றவாளியாக உள்ளார். மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர். புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :