Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, அக்டோபர் 2017 (21:35 IST)
மாற்றம் செய்த நாள் :23, அக்டோபர் 2017 (21:40 IST)
23.10.2017


ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்முன்னே 
2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி!

சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கண்முன்னே, பலத்த பாதுகாப்பையும் மீறி இரு பெண்கள் விழா மேடைக்கு அருகே  வந்து, தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி, தீப்பெட்டியை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இரட்டை இலை சின்னம் வழக்கில் இழுபறி நீடிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கின் மறுவிசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன்

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனையின் டிடிஎஸ் (dts) பிரிவினர் சோதனை நடத்தினர்.  பின்னர் வரும் வெள்ளியன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.


விஜய் தலைவராக வேண்டும்:எஸ்.ஏ.சி.

விஜய் தலைவராக வேண்டும் என்பதே தந்தையாக எனது விருப்பம். அவர் தலைவராகி அவரை நேசிக்கும் இளைஞர்களை வைத்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அது பதவிக்கு வந்து உருவாக்குகிறாரா? இல்லை ஒரு அமைப்பாக இருந்து உருவாக்குகிறாரா? என்பது எனக்கு தெரியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.


நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை 
தாக்கல் செய்ததாக புகார்

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது தனுஷ் தரப்பில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பிறப்புச் சான்றிதழ் போன்றவை போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் தரப்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.


தமிழிசைக்கு எதிராக விசிகவினர் சாலைமறியல்

கட்ட பஞ்சாயத்து நடத்தி நிலத்தை அபகரிப்பவர் திருமாவளவன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக சாடினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.  இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். 


சீன எஞ்சின்களை தடைசெய்யக்கோரி மறியல்- தடியடி

மீன்வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீன எஞ்சின்களை தடைசெய்யக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு கலைந்து செல்ல மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூட்டத்தில் கல்வீச்சு!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுக விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய 
ஒரிஜனல் ஐடி கட்டாயம் 

வங்கிகளில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்யும் போது இனிமேல் கையில் ஒரிஜனல் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கந்துவட்டியால்  4 பேர் தீக்குளிப்பு: 3 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.  தீக்குளித்த 4 பேரில் பெண் மற்றும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொகுப்பு: கதிரவன்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :