Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, அக்டோபர் 2017 (0:50 IST)
மாற்றம் செய்த நாள் :22, அக்டோபர் 2017 (0:50 IST)


போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ.

போபர்ஸ் பீரங்கிகள் ஊழல் தொடர்பாக புகார் கூறப்பட்ட இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான, அனைத்து வழக்குகளையும் 2005-ம் ஆண்டு மே 31-ம் தேதி டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்போது சி.பி.ஐ., திட்டமிட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியானது. 

சில நாட்களுக்கு முன், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 12 ஆண்டுகளுக்கு பின் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சி.பி.ஐ., கடிதம் எழுதியுள்ளது. 

இது தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறுகையில், 12 வருடங்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து கோர்ட்டில் சி.பி.ஐ., ஏராளமான விளக்கங்கள் அளிக்க வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. தரப்பில் விசாரணைகள் உடனடியாக தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 30-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :