Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
தமிழகம்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்!
 ................................................................
டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்!
 ................................................................
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்
 ................................................................
டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
 ................................................................
அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு!
 ................................................................
ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது! ராமதாஸ்
 ................................................................
நீர்நிலைகளில் பாதரசக்கழிவு! அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள் சங்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன்
 ................................................................
பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை
 ................................................................
ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
 ................................................................
விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
 ................................................................
போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி
 ................................................................
டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர்
 ................................................................
அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்)
 ................................................................
விடுதிக்குள் அனுமதித்திருந்தால் என் சகோதரியை காப்பாற்றி இருக்கலாம்; ராக மெளனிகா சகோதரர் பேட்டி!
 ................................................................
பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 ................................................................
சின்னம் வந்தாச்சு.. இனி எல்லா தேர்தலும் நடந்துரும்! - ராமதாஸ் ட்வீட்
 ................................................................
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, அக்டோபர் 2017 (11:1 IST)
மாற்றம் செய்த நாள் :18, அக்டோபர் 2017 (11:1 IST)


முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? என பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத்துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கடும் கோபம் எழுந்துள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பாஜக பதற்றம் அடைந்துள்ளது. மோடி அரசின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சித்தாந்த ரீதியாகவும் போராட்டக் களத்திலும் எதிர்த்து வருவதால், அவர்களது ஆத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி திரும்பியுள்ளது.

கேரளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் நேரடியாக பங்கேற்று கலகத்தை தூண்ட முயற்சித்தபோதும், கேரள மக்கள் இந்த சதியை முறியடித்துள்ளனர். 

கேரளத்தில் நடக்கும் வன்செயல்களுக்கு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் காவி பயங்கரவாதமே காரணம் என்பதை அந்த மாநில மக்கள் தெளிவாக உணர்ந்திருப்பதால், பாதயாத்திரை என்ற பெயரில் அவர்கள் நடத்திய முயற்சி கேரள மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்துள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள கட்சி அலுவலகங்களையும் ஊழியர்களையும் தாக்கினர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு அஞ்சவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. 

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் என பத்திரிகையாளர்கள், பகுத்தறிவாளர்களை படுகொலை செய்து வன்முறையில் ஈடுபடுவது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நாடு முழுவதும் காவிப்படை செய்து வரும் அட்டூழியங்கள் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கே சவால் விடுவதாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ‘கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தை தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது’ என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இதேபோன்று, மிரட்டும் தொனியில், பினராயி விஜயன் கேரளாவை விட்டு வெளியே போக முடியாது என்று கூறியுள்ளார்.

மக்களால்தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. பாசிச மனப்பான்மை கொண்டவர்கள்தான் இத்தகைய மிரட்டலில் ஈடுபடுவார்கள். பொன்.ராதாகிருஷ்ணன், தாம் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கு சற்றும் பொருந்தாத வகையில், இவ்வாறு பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, கேரளாவுக்கு யாத்திரை செல்லப் போவதாக கூறிக் கொண்டு, அந்த மாநில மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆத்திரத்தில் வரம்பு மீறி வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவரின் குறளை இருவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Paatali Country : India Date :10/19/2017 9:03:52 AM
RSS இன் உண்மை முகம் இது தான்.பொன்னார் எச் ராஜா போன்றோர் அடிப்படையில் RSS என்கின்ற பாஜகவின் மறைமுக அடிப்படை அரசியல் முகமுடையது அதிலும் இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் இன்று அகண்ட பாரதம் என்றும் சமஸ்கிருதம் என்றும் பிரிவினை வாத செயலில் ஈடுபடுகின்றவர்கள்.