Add1
logo
அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! || அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு! || வலுப்பெறும் வடகிழக்குப் பருவமழை - தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு! || ஓ.பி.எஸ். - தீபக் ரகசிய சந்திப்பு! அடுத்தது தீபாவா? || இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி! ||
தமிழகம்
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்!
 ................................................................
டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்!
 ................................................................
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்
 ................................................................
டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
 ................................................................
அறம் திரைப்படத்தின் கதை தன்னுடையது என கன்னட இயக்குனர் வழக்கு!
 ................................................................
ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது! ராமதாஸ்
 ................................................................
நீர்நிலைகளில் பாதரசக்கழிவு! அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள் சங்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன்
 ................................................................
பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை
 ................................................................
ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
 ................................................................
விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
 ................................................................
போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி
 ................................................................
டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர்
 ................................................................
அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்)
 ................................................................
விடுதிக்குள் அனுமதித்திருந்தால் என் சகோதரியை காப்பாற்றி இருக்கலாம்; ராக மெளனிகா சகோதரர் பேட்டி!
 ................................................................
பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 ................................................................
சின்னம் வந்தாச்சு.. இனி எல்லா தேர்தலும் நடந்துரும்! - ராமதாஸ் ட்வீட்
 ................................................................
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, அக்டோபர் 2017 (11:23 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2017 (11:23 IST)

தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு
பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!

தீபாவளி நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி மாநகராட்சியில் சோதனையில் பணமும் தங்க காசுகளையும் கைப்பற்றினர்.

திருச்சி மாநகராட்சி 2-வது புளோரில் நதி கணக்கு அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆணையராக பிரபுகுமார் ஜோசப் இருக்கிறார். தீபாவளியை யொட்டி சிலர் ஒப்பந்தகாரர்களிடம் பணம் வசூல் வேட்டை நடத்துவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலை மாநகராட்சி இரண்டாவது மாடியில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன், சக்திவேல், சேவியர்ராணி, அருள்ஜோதி ஆகியோர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள்.

சோதனையில் அங்கே இருந்த மேஜை டிராயர்கள், அலமாரிகள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடியும் வரை ஊழியர்கள் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அந்த அலுவலகத்தில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த முக்கிய ஆவணங்கள், கோப்புகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 560 ரொக்கம் மற்றும் 42 கிராம் எடையுள்ள மொத்தம் 32 தங்க காசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதவி ஆணையர் பிரபுகுமார் ஜோசப், அலுவலர்கள் ராம்குமார், தங்கராஜ், அலுவலக உதவியாளர் பாலமுத்து, கார் டிரைவர் ராஜேந்திரன் ஆகிய 5 பேரிடம் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணி, குடிநீர் பணி உள்ளிட்ட 4 பணிகளுக்கு 33 காசோலைகள் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனவே கணக்கில் வராத பணம், தங்க காசுகள் தீபாவளி பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கலாம். எனவே இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரிய வரும் என்று கூறினர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பீதியை உண்டாக்கியிருப்பது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

- ஜெ.டி.ஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : baala Date :10/17/2017 5:26:01 PM
இந்த லஞ்ச பணத்துல சாப்பிடுறது சாக்கடை யை சாப்பிடுவதற்கு சமம் என்று எண்ணுகிறேன் அதில் ஆபரணங்கள் வாங்கி போடுவது சாக்கடை யை மேல் ஊற்றி கொள்ளுவதற்க்கு சமம் என்றும் நினைக்கிறேன் எவ்வளவு அவமானப்பட்டாலும் இந்த ஜென்மங்கள் திருந்த போவதில்லை இதில் அரசு சலுகை வேறு