Add1
logo
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் || மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு || துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் || கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு || ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் || தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம் ||
தமிழகம்
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டாய இனிப்பு, பட்டாசு! - பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
 ................................................................
தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்குகள்: கடம்பூர் ராஜு
 ................................................................
தமிழகத்தில் டெங்கு குறைந்து வருகிறது: விஜயபாஸ்கர்
 ................................................................
திருச்சியில் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (22:34 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (22:34 IST)

பாசனத்து தண்ணீர் திறக்க கோரி கூலி தொழிலாளி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முதியவர் ஒருவர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையொடுத்து போலீசார் அவரிடம் பேசி மரத்தில் இருந்து இறக்கினர்.

காட்டுமன்னார்கோவில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நடுவர் நீதிமன்றம் எதிரே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மரத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன் ஏறி பாசனத்திற்கு கல்லணை, கீழணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். மரத்தில் யாரவது ஏறி வந்தால் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். இதனை அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த முதியவரிடம் விரைவில் தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறோம் இறங்கி வாருங்கள் என்று கூறினர். அதற்கு அந்த முதியவர் ஆட்சியே சரியில்லை ஆட்சியாளர்கள், மக்களை கண்டுகொள்ளவில்லை எப்படி தண்ணீர் திறக்க அதிகாரிகள் முன்வருவார்கள் என கூறி இறங்கி வர மறுத்துவிட்டார். போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் தொடர்ந்து பேசி இன்னும் மூன்று தினங்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறி உறுதி அளித்தனர். 

இதனையொடத்து பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த முதியவர் பெயர் இந்திரஜித் (61) என்றும் அவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேளம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி என்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் கூலிவேலை கிடைக்கவில்லை, இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. குடும்பத்தை நடத்த கூட முடியவில்லை. இதன் காரணமாகவே போராட்டம் செய்யவேண்டும் என்ற நோக்கத்திலேயே வந்ததாக தெரிவித்தார். பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி முதியவர் ஒருவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லணையில் கடந்த 5ம் தேதி கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தண்ணீர் இன்னும் கீழணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :