Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
முக்கிய செய்திகள்
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி
 ................................................................
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (20:24 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (20:24 IST)நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற
 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, நாகை உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்கள் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நல சங்க தலைவர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை மாசு அடைந்து வருகின்றது. இதனை தடுக்கவும் அந்த நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.  மேலும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2009ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை எந்த  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் எந்தவிதத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசு அனுமதிக்கக்கூடாது என்று கடந்த 2015ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. 

இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாத 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என  செப்டம்பர் 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், டீக்கா ராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யாத  தர்மபுரி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்ட ஆட்சியர்கள்  உயர்நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் விலக்கு கோரினர். 

ஆனால் நீதிபதிகள் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை விளக்க இன்று (அக்டோபர்12) தேதி 13 ஆட்சியர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இன்று 13 மாவட்ட ஆட்சியர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை என அனைவரும் இணைத்து பணியாற்றினால்தான் நீர் நிலைகளை பாதுகாக்க முடியும் என்றனர். மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமன்றி அரசு நிலங்களையும் , நீர்நிலைகள் என அரசு சொத்துக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என கூறினர். மேலும்  நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், அதற்கான உத்தரவுகளுக்காக காத்திருக்க வேண்டாம் எனவும் தெரிவித்தனர். 

மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்ககூடாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அதே போல மாவட்ட வருவாய்துறையின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் ஆட்சியர்களை நேரில் ஆஜராக கூறியது தண்டனையாக அல்ல மாறாக இந்த விவகாரத்தின் தீவிரம் குறித்து உணர்த்தவே என தெரிவித்த நீதிபதிகள்,வழக்கை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

- ஜீவாபாரதிதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :