Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
சிறப்பு செய்திகள்
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி...
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!
 ................................................................
திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு!
 ................................................................
கலாம் கீதம்!
 ................................................................
காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்
 ................................................................
ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?
 ................................................................
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!
 ................................................................
ஜப்பான் தமிழன்!!!
 ................................................................
வாக்கி-டாக்கி ஊழல் பின்னணி!
 ................................................................
குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (11:2 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (11:2 IST)

'புர்கா' அணியத்  தடை !

ஆஸ்திரியா நாட்டில்,  'மெக் ஷார்க்' எனும் ஒரு எலக்ட்ரானிக் நிறுவனத்திற்காக 'சுறா' மீன்  போன்று வேடம் அணிந்து விளம்பரம் செய்தவருக்கு ஆஸ்திரிய போலீசார் 150 யூரோ அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு விளம்பரம் செய்வது அவரது  தொழிலாக இருந்தாலும், முகத்தை எந்த
விதத்தில் முழுதாக  மறைத்தாலும்  இப்பொழுது அந்நாட்டில் அது சட்டப்படி குற்றமாகும். இந்த நிகழ்வை அந்த விளம்பர நிறுவனத்தின் அதிபர், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில்  கடந்த அக்டோபர் ஒன்று முதல் புர்கா, நிக்காப் (இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் வண்ணம் அணியும் உடைகள்), வேறு துணி கொண்டு  முகத்தை  மூடுவதும்  தடை செய்யப்பட்டுள்ளது.   தடையை மீறினால் அவர்களுக்கு அபராதமும்    விதிக்கப்படுகிறது.  இதனால், அந்நாட்டில் வெப்பத்தைத்  தவிர்க்க  முகத்தைத்  துணியை கொண்டு மூடினால் கூட அபராதம் விதிக்கப்படுவதாக மக்கள்  புலம்புகின்றனர். இந்தத் தடையினால் அங்கு வாழும்  புலம்பெயர்ந்த  முஸ்லீம் பெண்களும் சுற்றுலாப் பயணிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.தடை செய்யப்பட்டது
குறிப்பிட்ட சூழ்நிலையில் அனுமதிக்கப்பட்டது   அனுமதிக்கப்பட்டது   'இந்த சட்டம், முஸ்லீம் பெண்களுக்காகக்  கொண்டுவரப்பட்டதல்ல. அனைத்துவிதமாக முகத்தை மூடுபவர்களுக்கும் தான்'  என்று ஆஸ்திரியா அரசாங்கம்  தெரிவித்திருக்கிறது. ஆனால், 'இது முழுக்க முழுக்க அங்கு வாழும் இஸ்லாமிய பெண்களுக்காகவே விதிக்கப்பட்டுள்ளது'  என்று பல சமூக ஆர்வலர்கள்  கூறுகின்றனர் . இத்தடையை எதிர்த்து பொதுமக்களும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களும்  குரல் எழுப்பியுள்ளனர்.  ஆஸ்திரியாவில் வாழும் அகதிகள், தங்களது அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் விடுத்து ஐரோப்பியர்களாக ஒன்றாய் கலக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். ஆனால் நேரடியாக புர்காவிற்குத் தடை விதித்தால் அது வேறு விதமாக எதிர்கொள்ளப்படும் என்பதால்  மறைமுகமாக விதித்திருக்கின்றனர்.  ஐரோப்பாவில், ஃபிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து   உட்பட    பல நாடுகளிலும் புர்காவிற்குத் பொது இடங்களில் 'புர்கா' அணிந்து முகத்தை மறைக்கத்  தடையிருக்கிறது.
தடையை எதிர்த்துப் போராடும் தொழிலதிபர் 

இந்தத் தடையை அமல்படுத்துவதில் அரசை விட அதிகாரிகள் மிகுந்த ஆர்வமாகி, வேறு காரணங்களுக்காக முகத்தை மூடுபவர்களுக்கும், முகமூடி போட்டிருப்பவர்களுக்கும் கூட அபராதம் விதித்துவருவதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். நம்ம ஊரில் போல  நெடுஞ்சாலையில் தடை விதித்தால், முன்பக்க வாசலை மூடிவிட்டு, பின்பக்கம் கடையைத் திறப்பது, 'சைடில்' கொடுத்து தடையை உடைத்து,  வேலையை முடிப்பது சாத்தியமில்லை போல...

சந்தோஷ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Abdul Kader Mohamed Yusuff Date :10/16/2017 5:04:40 PM
இது போன்று முகத்தை மட்டும் காட்ட இஸ்லாத்தில் அனுமதி உண்டு.