Add1
logo
சாலையோர மரத்தில் கார் மோதியதில் 7 பேர் பலி || நீட் தேர்வு நடத்த மத்திய அரசுக்கோ, மருத்துவக் கவுன்சிலுக்கோ சட்டப்படி அதிகாரமில்லை: கி.வீரமணி || மெர்சல்..இளைஞர்கள் மோதல் -4 பேர் காயம் || வரி மறுப்பு சத்யாகிரகப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு || வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை கை விட்ட கிராம மக்கள்! || கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை: தமிழிசை || நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடவேண்டாம் - ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் || ராணுவ வீரர்களுக்கு சாட்டிலைட் அழைப்பு கட்டணம் குறைப்பு || கடவுளின் தேசத்தில் தீபாவளி.. || முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி ||
சிறப்பு செய்திகள்
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி...
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!
 ................................................................
திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு!
 ................................................................
கலாம் கீதம்!
 ................................................................
காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்
 ................................................................
ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?
 ................................................................
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!
 ................................................................
ஜப்பான் தமிழன்!!!
 ................................................................
வாக்கி-டாக்கி ஊழல் பின்னணி!
 ................................................................
குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 9, அக்டோபர் 2017 (15:48 IST)
மாற்றம் செய்த நாள் :9, அக்டோபர் 2017 (16:55 IST) 

ரண்டாம் உலகப்போரில் பிரிட்டனுக்குஇந்திய வீரர்கள் உதவினால், விடுதலை குறி்த்து முடிவெடுக்கப்படும் என்று பிரிட்டன் தெரிவித்தது.ஆனால் அதற்கு காங்கிரஸ் உடன்படவில்லை.

மாகாண அரசாங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் இந்திய வீரர்களை இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் ஈடுபடுத்தியது அதையடுத்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன. சென்னை மாகாணத்திலும் ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது.

1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு என்ற போரோட்டம் தீவிரமடைந்தது.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன், நாடு முழுவதும் விடுதலை உணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆனால், முஸ்லிம்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை வைத்து பிரிட்டிடிஷ் அரசு தனது நிலையை இழுத்தடித்தது.

பிரிவினைக்கு காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. இணைந்திருக்க ஜின்னா ஒப்புக்கொள்ளவில்லை. இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டும் வகையில் இந்துமத வெறியர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

ராயல் இந்தியக் கடற்படை புரட்சி 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி மும்பையில்  தொடங்கியது. இந்திய மாலுமிகளால் தொடங்கப்பட்ட இந்த புரட்சி கராச்சியிலிருந்து கொல்கத்தா வரை இந்தியா முழுவதும் மக்கள் ஆதரவுடன் பரவியது. இதில் 78 கப்பல்கள், 20 கடற்கரைத் தளங்கள் மற்றும் 20 ஆயிரம் மாலுமிகள் ஈடுபட்டனர்.

இந்த புரட்சியை நடத்த எம்.எஸ்.கான் மற்றும் மதன் சிங் ஆகியோர் தலைவராகவும் துணைத் தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடுதலை உணர்வு ஏற்கெனவே மக்களிடம் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்தப் புரட்சி மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. கராச்சியிலிருந்து கல்கத்தா வரை மிகப்பெரிய கலவரங்கள் நடந்தன. இந்தக் கப்பல்களில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளின் கொடிகள் ஒன்றாக பறக்கவிடப்பட்டன. இது புரட்சியில் பங்கேற்றவர்களிடையே இருந்த ஒற்றுமை மற்றும் மதவேறுபாடு இன்மையைக் குறிப்பதாக இருந்தது.

இந்தப் புரட்சி வெடித்த அதேசமயத்தில்தான் 1946 பிப்ரவரி மாதம் மாகாண சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.

1937 தேர்தலில் படுதோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. அந்தக் கட்சி தேர்தல்களில் போட்டியிடாது என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டுமே செல்வாக்கு மிக்க கட்சியாக போட்டியில் இருந்தது. இருந்தாலும் உட்கட்சிப் பூசல்களால்  அது பாதிக்கப்பட்டிருந்தது.

வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்குஎதிராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் தலைமையிலான முஸ்லிம் லீக் இருந்தது. அது பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்ததால் முஸ்லீம்களைத் தவிர வேறு பிரிவினரிடையே ஆதரவு இல்லை. 1934 முதல் 1942 வரை தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் இத்தேர்தலில் போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி 163 இடங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம் லீக் 28 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், சுயேச்சை கட்சி 7 இடங்களிலும், ஐரோப்பியர் 6 இடங்களிலும், சுயேச்சைகள்6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் கட்சி மிகப் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் உள்கட்சி பூசல்களால் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியதுதங்குதுரி பிரகாசத்தின் ஆந்திர கோஷ்டி, காமராஜரின் பிராமணரல்லாத தமிழர் கோஷ்டிராஜகோபாலாச்சாரியின் பிராமணத் தமிழர் கோஷ்டி, மாதவ மேனனின் கேரள கோஷ்டி என பல பிரிவினர் காங்கிரசில் இருந்தனர்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் ராஜாஜியை முதல்வராக்க முடியவில்லை. அப்போது,காங்கிரசு உறுப்பினர்களின் தலைவராக பிரகாசம் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி தமிழரான ராஜாஜி முதல்வரானார். அடுத்த தேர்தலில் தெலுங்கர் ஒருவருக்கு முதல்வர் வாய்ப்பு தரப்பட வேண்டுமென இரு குழுவினரும் ஒப்பந்தம் செய்திருந்தனர்..

ஆனால், 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும், கடந்த தேர்தலில்செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டை அமல்படுத்த காங்கிரஸ் மேலிடம் தயாராக இல்லை.

யார் சென்னை மாகாணத்தின் முதல்வராவது என்று தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியதுகாந்திநேரு போன்ற தேசியத் தலைவர்கள் ராஜாஜியே மீண்டும் முதல்வராக வேண்டுமென விரும்பினார்கள்.

காமராஜரோ,. முத்துரங்க முதலியாரை முதல்வராக்க முயன்றார். ஆனால், தெலுங்கு உறுப்பினர்கள் மற்றும் அதாவதுபிரகாசத்தை ராஜாஜி ஆதரவு உறுப்பினர்களும் ஆதரித்தனர். இதையடுத்து, 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 30, ஆம் தேதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் வி. வி. கிரிபக்தவத்சலம்அவிநாசிலிங்கம் செட்டியார்,பாஷ்யம் அய்யங்கார்குமாரசாமி ராஜா, டேனியல் தாமஸ்ருக்மணி லட்சுமிபதி,கே. ஆர். கரந்த், கோட்டி ரெட்டி, வேமுல குர்மய்யா, வீராசாமி, ராகவ மேனன் ஆகியோர் இடம் பெற்றனர்.கப்பல்படை புரட்சி


கப்பல்படை புரட்சிக்கு மக்கள்மத்தியில் இருந்த ஆதரவை கண்ட பிரிட்டன், இந்தியாவில் புரட்சி ஏற்பட்டு அரசியல் மாற்றம்ஏற்பட்டால் தனக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்தது. எனவே, விடுதலை தொடர்பாக பேச்சுநடத்த பிரிட்டிஷ் அரசு ஒரு குழுவை அமைத்தது.

அந்தக் குழுவின் வருகையைஒட்டி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரு உள்ளிட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விடுதலைக்கு முன்னோட்டமாக நேரு தலைமையில்இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதேசமயம் இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் அமைப்பது தொடர்பாகவும்பேச்சு நடைபெற்றது.

சென்னை மாகாணத்தில் பதவியேற்ற ஒரு ஆண்டிற்குள் முதல்வர்பிரகாசத்துக்கும்காமராஜருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரகாசத்துக்குப் பதிலாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைமுதல்வராக்ககாமராஜர் முயன்றார். கால வெங்கட ராவ், நீலம் சஞ்சீவ ரெட்டி போன்ற ஆந்திர தலைவர்களின் ஆதரவுடன், பிரகாசத்தை ஓமந்தூரார் தோற்கடித்தார். இதையடுத்து 1947 ஆம் ஆண்டு மார்ச் 23, ஆம் தேதி பிரகாசம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

ஓமந்தூரார் பதவி ஏற்ற சிலமாதங்களில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும், இஸ்லாமியர்களுக்கானபாகிஸ்தானுக்கும் விடுதலை கொடுக்க பிரிட்டன் முடிவு செய்தது.ஓமந்தூரார்


விடுதலைக்கான ஏற்பாடுகள்வெளியான நிலையில் தந்தை பெரியார் அதை எதிர்த்து அறிக்கை வெளியி்ட்டார். வெள்ளையர் வெளியேறுவது,உள்ளூர் ஆரியர்களின் ஆட்சிக்கே வழிவகுக்கும் என்றும் விடுதலை தினம் என்பது திராவிடர்கழகத்துக்கு துக்கதினம் என்றும் பெரியார் தெரிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு கட்சிக்குள்அதிருப்தியை கிளப்பியது.

விடுதலை கிடைக்கும்என்று உறுதியானவுடன் காங்கிரஸில் மட்டுமல்ல, திராவிடர் கழகத்திலும் அதிகாரப் போட்டி தொடங்கிவிட்டது. கட்சிக்கு ஏராளமான சொத்துக்கள்சேர்ந்தது. மக்கள் ஆதரவு பெருகியது. விடுதலை பெற்றுவிட்டால் தேர்தல் அரசியலை நோக்கிபயணிக்கலாம் என்ற சிந்தனை ஒரு சாராரிடம் தலைதூக்கியது.

தந்தை பெரியாரின்நடவடிக்கைகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. 76 வயதான பெரியார் சில ஆண்டுகளாகவே தன்னைபார்த்துக்கொள்ள யார் இருக்கிறார். தான் செத்தால் அழ யாரிருக்கிறார் என்று வெளிப்படையாகவேபேசவும் எழுதவும் செய்தார்.

அண்ணா உள்ளிட்டதலைவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்தனர். அந்த தலைவர்களின் பேச்சைக்கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுக்கூட்டங்களும், நாடக மேடைகளும் மக்களின் அரசியல்பள்ளிக்கூடங்களாக மாறிக் கொண்டிருந்தன.

இப்படிப்பட்டசூழலில்தான் பெரியார் விடுதலை தினம் குறித்து வெளியிட்ட அறிக்கை கட்சிக்குள் சர்ச்சையைஉருவாக்கியது.

பெரியாரின் றிக்கையை எதிர்த்து அறிஞர் அண்ணா நீண்ட அறிக்கையை வெளியிட்டார். விடுதலை தினம் என்பது திராவிடர் கழகம் விரும்பியதுதானே... அது கிடைக்கும்போது எதிர்த்தால் மக்கள் தவறாக நினைக்கமாட்டார்களா? வெள்ளையரின் ஆதரவாளர்கள் என்று நினைக்க வாய்ப்பை ஏற்படுத்தி விடாதா என்றுவினா எழுப்பினார்.

அதுமட்டுமின்றி,பிரிட்டிஷாரிடம் நாம் சுதந்திரமாக உரிமையோடு போராட முடியாது. விடுதலை பெற்ற நாடு என்றால்,நமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடவும், போராடவும் உரிமை கிடைக்கும். இது நம்மைநாமே ஆளுகிற உரிமையைக் கொடுக்கும் நாள் என்று அண்ணா விளக்கம் அளித்தார்.

எனது இந்தநிலைப்பாடு கட்சிக் கட்டுப்பாட்டையும், தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்படத்தகுதி வாய்ந்தது. இதற்காக என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வந்தாலும் சரி. பிரிட்டிஷ்ஆட்சி கூடாது என்பதே எனது வாழ்நாளில் நான் கொண்ட நிலை. இதை உறுதிப்படுத்த எனக்குக்கிடைத்த ஒரே நாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி. அந்த நாளின் முக்கியத்துவத்துக்காக கட்சியின்கடுமையான நடவடிக்கைக்கும் தயாராக வேண்டியவனாக இருக்கிறேன்.

எனது போக்குதவறு என்று கருதி கட்சியை விட்டு நீக்கினாலும், சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம்,திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளை கட்சிக்கு வெளியே இருந்தாகினும் செய்வேன்என்று அண்ணா தனது அறிக்கையை முடித்திருந்தார்.

இது அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. அந்த விரிசலை மேலும் விரிவாக்க சூது எண்ணம்கொண்டோர் முயற்சி செய்தார்கள்.

அண்ணாவின்நிலைப்பாடை ஆதரித்து ஒரு பிரிவினரும், பெரியாரை ஆதரித்து ஒரு பிரிவினரும் செயல்பட்டனர்.இதையடுத்து அண்ணா திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து வந்தார். கட்சிக்குள்இருந்த சூது மதியாளர்கள் அண்ணாவின் மனம் புண்படும்படி சூழ்நிலையை உருவாக்கினர். எனவே,அடுத்து நடைபெற்ற தூத்துக்குடி மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்தார். மாநாட்டில் அண்ணாபங்கேற்காததை மக்கள் குறையாகவே எண்ணிக் கலைந்தனர்.

1947 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டத் தலைநகர் கடலூரில் நடைபெற்ற திராவிடநாடு பிரிவினை மாநாட்டிலும் அண்ணா பங்கேற்கவில்லை.

இந்த மாநாட்டுக்குப்பிறகுதான் அண்ணாவின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்று பலரும் யோசிக்கத் தலைப்பட்டனர்.கட்சிக்குள் பலரும் பலவிதமாக பேசுவதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதையடுத்து,இந்தித் திணிப்பு விஷயத்தில் விடுதலைப் பெற்ற இந்தியாவின் அரசு மேற்கொண்டுள்ள பிடிவாதப்போக்கை எதிர்க்க திட்டம் ஒன்றை வகுக்க ஈரோட்டில் தனி மாநாடு ஒன்றைக் கூட்ட தந்தை பெரியார்ஒப்புதல் கொடுத்தார்.

1948 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் 23, 24 தேதிகளில் 50 ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட மாபெரும் மாநாடு ஈரோட்டில்நடைபெற்றது. மாநாட்டுக்கு அண்ணா தலைமை வகித்தார்.

இந்த மாநாடுமிகவும் முக்கியமான மாநாடு. அண்ணா தனது தலைமை உரையில் குறிப்பிட்டதில் முக்கியமான சிலவிஷயங்களை மட்டும் பார்க்கலாம்…

“…அடக்குமுறைவிசித்திரமான சக்தி. அது யார் மீது வீசப்படுகிறதோ, அவர்கள் முதல் தாக்குதலுக்குப் பிறகுமும்மடங்கு பலம் பெறுவர். பகத்சிங்கும், குமரனும், இந்த மொழிப் போராட்டத்தில் எங்களில்உண்டு என்பதைக் காட்டுவதற்கு திராவிடம் தயாராக இருக்கிறது.

…எங்கள் உரிமைஅழிக்கப்படுவதைக் கண்டும் ஊமையாக இருக்க மாட்டோம். உயிரைப் பற்றிய கவலையை உங்களுடையநடவடிக்கை போக்கிவிட்டது. வாருங்கள் களத்துக்கு மீண்டும். வந்த ஹைதராபாத் வம்பும் ஒழிந்தது.சொந்த மொழிக்காக நாங்கள் உயிர்கொடுக்க முன் வருகிறோம். நீங்கள் அயலான் மொழிக்காக உங்கள்உடன்பிறந்தோரைக் கொல்லும் உத்தமர்கள் என்ற நற்பெயருடன் வாழுங்கள் என்று ஆளவந்தாருக்குகூறிவிடுவதே இந்த மாநாட்டின் நோக்கம்.

...திருமணத்தில்ஐயர் ஏன் என்று கேட்டபோது திடுக்கிட்டார்கள். தூற்றினார்கள். சபித்தார்கள். கல்லடி,சொல்லடி பட்டோம். யார் இவர்கள்? பழைய கால ஏற்பாட்டை உடைக்க என்று கூறினார்கள். கடைசியில்நடந்ததென்ன? ஆயிரக்கணக்கில் ஐயர் இல்லாத திருமணம் இன்று நடக்கவில்லையா?

...தலைமுறைதலைமுறையாக இருந்துவந்த தர்ப்பைக்காரனின் துரைத்தனத்துக்கே இந்த கதி என்றால், தம்பிவாடா, அண்ணா வாடா, கண்ணே வாடா, மணியே வாடா என்று கெஞ்சிக் கூத்தாடி ஓட்டுப் பெற்றுஒரு ஐந்தாண்டு காலம் அதிகாரம் செலுத்தும் அளவுமட்டுமே அந்தஸ்த்து பெற்ற அமைச்சர்கள்எம்மாத்திரம் என்று கேட்கிறோம்.

...ஆட்சிக்குவருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆளை மயக்கும் பேச்சுப் பேசுவதும் கடினமானதல்ல. ஆளுங்கட்சியாகமாறுவதும் நடைபெற முடியாத நிகழ்ச்சியல்ல. ஆனால் அது நமது நோக்கமல்லவே….”

இவ்வாறாக உணர்ச்சிபூர்வமானதாகஇருந்தது அண்ணாவின் உரை.

இந்த மாநாட்டில்தான்,அண்ணா அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக தந்தை பெரியார் அறிவித்தார். தனக்கு வயதாகிவிட்டதாகவும், அண்ணா ஒருவரே இந்த இயக்கத்தை கட்டிக் காப்பாற்ற போதும் என்றும் தனதுபெட்டிச் சாவியை அண்ணாவிடம் இன்றே கொடுத்துவிட்டதாகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.பெரியார் - ட்டுக்கோட்டை அழகிரி


இதே மாநாட்டில்தான் ட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் நிற்கக்கூட முடியாமல் நோயால் சுருண்டு மேடையில் அமர்ந்தபடியேதிணறித்திணறி பேசினார். அவருடைய நிலையைக் கண்ட அண்ணா அவரை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சைகொடுக்க முயன்றார். பலனின்றி பட்டுக்கோட்டைக்கே அனுப்பப்பட்டார். தனது கையிலிருந்து அண்ணா அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

ஈரோடு மாநாடுமுடிந்தவுடன் பெரியாரின் நடவடிக்கைகள் கட்சிக்குள் சர்ச்சையை உருவாக்கியது. மணியம்மைதொடர்பாக பெரியார் சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சூழலில்தான் அழகிரியைதிராவிடர் கழகம் கண்டுகொள்ளாமல் தவிர்த்தது.

இந்நிலையில்,சிகிச்சைகள் எவ்வித பலனும் அளிக்காத நிலையில் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அழகிரி மாண்டார். அவருடைய குடும்ப உதவி நிதியையும் கலைவாணரின் நாடகத்தை நடத்தி அண்ணாவே வசூல் செய்து கொடுத்தார். நாடக வசூல் ரூ.3,500 உடன் கலைவாணர் தனது கையிலிருந்து2,500 ரூபாய் சேர்த்து 6 ஆயிரம் ரூபாய் அழகிரி குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

(திமுக உதயமும்இந்திய குடியரசும் பற்றி வியாழக்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதிகள் :

 17. நீதிக்கட்சி திராவிடர் கழகம் ஆனது!

16. எல்லா மக்களுக்கும் ஒரே உரிமை என்ற நீதிக்கட்சி!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : S.Govinarajan Date :10/9/2017 5:26:43 PM
இஸ்லாமியர்கள் ஆத்திரப்படும் வகையில் இந்து வெறியர்கள் நடந்து கொண்டார்கள் என்று ஆதனூறார் எழுதியது தவறு. ஜின்னா லேசுப்பட்ட ஆள் இல்லை.பிரிவினையயை தூண்டியதே அந்த ஆளுதான்.கிழக்கு பாகிஸ்தானில் நவகாளி இயக்கத்தில் பல இந்து பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.சிறுபான்மைக்கு வால் பிடிக்கும் ஆதனூறார் அதற்காகவே தொடர் கட்டுரையை எழுதுகிறார்.